ஜூன் 15 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : தண்ணி பார்ட்டிகள்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

ஒரு நண்பர்கள் வட்டத்தில் ஒருவர் மட்டும் மது அருந்தாதவராக இருந்தால் அவரை கேலி செய்தே மதுவை அருந்த வைத்து விடுகின்றனர்.

ரு காலத்தில் பார்ட்டி என்பது டீ பார்ட்டி மற்றும் சர்பத் பார்ட்டி தான் தமிழகத்தில் பெரும்பாலும் இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக மது பார்ட்டிகள் தான் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக முளைத்து இருக்கும் இக்கலாச்சாரம் பற்றி கேட்ட பொழுது........

தமிழகத்தில் அவ்வப்பொழுது புதிய கலாச்சாரமாக நடிகர், நடிகைகளுக்கு கோவில் கட்டுவது, அதற்கு கும்பாபிஷேகம் நடத்துவது என்று பல சம்பவங்கள் நடப்பதுண்டு. ஆனால் தற்பொழுது முளைத்திருக்கும் மது பார்ட்டி நமது சமூகத்தில் முதலில் மேல்தட்டு மக்களிடம் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக அப்பழக்கம் அனைத்துப் பிரிவு மக்களிடமும் பரவி விட்டது. குறிப்பாக இளைஞர்களிடம் அடிப்படைப்பழக்கமாக மது பார்ட்டி பழக்கம் மாறிவிட்டது. புது சட்டை வாங்கினாலும் பார்ட்டி, புது வண்டி வாங்கினாலும் பார்ட்டி, புதிதாக கல்லூரியில் சேர்ந்தாலும் பார்ட்டி என்று இளைஞர்களிடம் மது பார்ட்டி பரவி வருகிறது எனச் சொல்லும் பூபதி, இது ஒரு சமூகத்திற்கு பிடித்துள்ள புதிய நோய் என்கிறார். மது உடம்பிற்கு கேடு என்று சொல்லப்பட்டாலும் ஒரு பெக் மது அடித்தால் உடம்புக்கு நல்லது என்று மருத்துவக் குறிப்புகள் பத்திரிக்கைகளில் வருவதால் அதற்கு இளைஞர்கள் அடிமையாகத் தொடங்கி விடுகின்றனர். நான்கு நண்பர்கள் சேர்ந்து விட்டாலே மது குடித்துவிட்டுத் தான் பிரிய வேண்டும் என்ற கலாச்சாரம் இங்கு பெருகி வருகிறது. முதலில் போதை இல்லாத பீர் வகையில் ஆரம்ப மாகும் மது பார்ட்டி பின் விஸ்கி, பிராந்தி என்று தனது தளத்தை மாற்ற செய்து விடுகிறது.

இதற்கு அடிப்படைக்காரணம் சினிமா மற்றும் டி.வி. தொடர்கள் தான் என்கிறார். பார்த்திபன் கனவு என்ற படத்தில் கதாநாயகன் புதிதாக வேலைக்கு சேர்ந்தாலும் பார்ட்டி, வேலையை விட்டு விட்டாலும் பார்ட்டி வைத்து நண்பர்களை குஷி படுத்தவார். அதே போல் பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்களிலும் இதே நிலை இருக்கிறது இதனை பார்க்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்களும் ஏன் அப்படி இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மது பழக்கத்திற்கு அடிமையாகத் தொடங்கி விடுகின்றனர். இந்நிலையை மாற்ற தமிழகத்தில் மது விலக்குக் கொள்கையை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தலைமுறை இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்ற அபாயம் இருக்கிறது என்கிறார்.

நாட்டில் கெட்டுப் போவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும் பொழுது மது அருந்தி தான் கெட்டுப் போகிறார்கள் என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லம் கல்லூரி மாணவரான குமார். மது பார்ட்டி என்பது ஆத்ம திருப்தியை அளிக்கிறது. மிதமான போதையில் கும்மாங்குத்து பாட்டுக்கு மத்தியில் நண்பர்களுடன் பாரில் இருக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது என்கிறார். மது என்பது அனைத்து நாட்களிலும் உட்கொள்ளுவதில்லை. புண்பட்ட மனதில் இளைஞர்கள் முன்பு புகையை விட்டு ஆத்துவார்கள். இப்பொழுது அதனுடன் மதுவையும் சேர்த்துக் கொண்டார்கள் அவ்வளவு தான். குறிப்பிட்ட நாளில் தான் மது பார்ட்டி நண்பர்களிடம் இருக்கிறது. ஒரு நண்பன் வீட்டில் ஒரு சந்தோஷமான நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக மது அருந்தி பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை. மொடாக் குடியர்கள் போல் அதிகளவு மது அருந்திவிட்டு ரோட்டில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் படுத்துக் கிடந்தார்கள் என்று செய்தி வந்து இருக்கிறதா? என்று சொல்லங்கள் பார்ப்போம் என்கிறார் சிகரெட்டை ரஜினி ஸ்டைலில் பற்ற வைத்துக் கொண்டு............

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து விட்ட பெருமை இன்றைய முதல்வர் கருணாநிதியைத் தான் சேரும். அதனை அரசுடமை ஆக்கியது எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதாவைச் சேரும் என்று சொல்லும் டாஸ்மாக் ஊழியரான டேவிட்ராஜா. முதலில் பிராந்தி, விஸ்கி, ஜின்,மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்த டாஸ்மாக் கடைகளில் தற்பொழுது குடி மகன்களை குஷி படுத்த  பல புதிய மது வகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக இளைஞர்களைக் கவரும் விதத்தில் தனி ருசியைக் கொண்ட ஸ்காட்ச் விஸ்கி, ஓல்டு அட்மிரல் போன்ற சரக்குகளை டாஸ்மாக் அறிமுகப் படுத்திய உடன் விற்பனையில் சக்கைப் போடு போடுகிறது. குடித்தவுடன் போதை ஏறி பின் அதே வேகத்தில் போதை இறங்கும் சரக்குகளை குடித்தே பழக்கப்பட்ட குடிமகன்கள் வெளிநாட்டு மது வகைகளான ஷேம் பெய்ன், ஸ்காட்ச் விஸ்கியை குடித்து விட்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறார். முன்பு எல்லாம் அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் வேலை பார்ப்பவர்கள் தான் அதிகளவு மதுக்கடைக்கு வந்து மது அருந்திவிட்டுச் செல்வார்கள். ஆனால் கடந்த ஓராண்டாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சர்வ சாதாரணமாக மது அருந்த வருகின்றனா. அவர்களிடம் அறிவுரை கூறினால் நம்மை திட்டுகின்றனர். இளைஞர்கள் தனியாக யாரும் வருவதில்லை. நான்கு ஜந்து பேர் கொண்ட கும்பலாகத் தான் மது அருந்த வருகின்றனர். அதனால் ஏற்படும் தீமைகளை அலசி ஆராயும் மனபக்குவத்தி;ல் அவர்கள் இல்லை என்பது தான் வருத்தம் தரும் செய்தி. தமிழகத்தில் லாட்டரியை தடைசெய்து இருப்பது போல் மதவிலக்கு கொள்கையையும் அமல் படுத்த வேண்டும் இல்லை என்றால் வருங்கால சந்ததியினர் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள் என்கிறார்.

முன்பு எல்லாம் நண்பர்கள் வீட்டில் நல்ல நிகழ்ச்சி என்றால் பிற நண்பர்கள் நல்ல நூல்களை பரிசாக தருவார்கள். ஆனால் இப்பொழுது திருமணம் மண்டபம், லாட்ஜ்களில் ரூம் போட்டு மது அருந்திவிட்டு போதையில் கிடப்பதையே சமூக பெருமையாக கருதும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒரு நண்பர்கள் வட்டத்தில் ஒருவர் மட்டும் மது அருந்தாதவராக இருந்தால் அவரை கேலி செய்தே மதுவை அருந்த வைத்து விடுகின்றனர். இதனால் நல்ல மாணவர்கள், இளைஞர்கள் கூட கெட்டுப் போய்விடுகின்ற சு10ழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. கல்லூரி மாணவர்கள் இப்பொழுது போதையோடு தான் கல்லூரி வகுப்பிற்கு செல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதன் போக்கு எங்கு போய் முடியுமோ தெரியவில்லை என்கிறார். முன்பு எல்லாம் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பொழுது மாப்பிள்ளை நன்கு சம்பாதிக்கின்றாரா என்று தான் பார்ப்பார்கள். ஆனால் தற்பொழுது மாப்பிள்ளை நன்கு சம்பாதித்தாலும் குடிக்காமல் இருக்கிறாரா, அவரது நண்பர்கள் வட்டம் எப்படி என்று பிரைவெட் ஏஜென்ஜி மூலம் விசாரனை செய்து விட்டுத் தான் பெண் கொடுக்கின்றனர். இளைஞர்களின் மது பார்ட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் லைசென்ஸ் முறையை கொண்டு வந்தாலே போதும் என்கிறார் சிவனாண்டி. ஒரு பெக்கை தண்ணீh கலக்காமல் அப்படியே குடித்துக் கொண்டு.

கஷ்டமடா சாமி......

| | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |