ஜூன் 15 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : தமிழ்மணம் - விற்பனைக்கு
- பாஸ்டன் பாலாஜி
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

மிழ்மணம் இணையத் தளமும் முழுக்க முழுக்க தமிழில் இயங்கும் வலைதிரட்டியும் acquisition target-ஆக மாறுவதற்கான அறிவிப்பை இங்கே காணலாம்: http://thamizmanam.blogspot.com/2006/06/blog-post_19.html

Kasi Arumugamஅமெரிக்காவில் 90-களின் இறுதி போல் உற்சாகம் கரைபுரளாவிட்டாலும், வெப் 2.0 என்று மிதமான ஆவலுடன் களமிறங்கும் கம்பெனிகள் பெருகி இருக்கிறது. வலைப்பதிவு, கூட்டுப் புழு சோஷியல் நெட்வொர்க்கிங், செய்தியோடை, புத்தகக் குறி, அடையாளக் குறி (tags), வாசகர் வாக்கெடுப்பின் அடிப்படையில் முக்கியமான பதிவுகள், அஜாக்ஸ் போன்ற நவீன நுட்பங்கள் என்று நாலைந்து அடிப்படைகளை விதவிதமாக மிக்ஸ் செய்து சாம்பார், ரசம், கூட்டு, கறி, பொறியல், பொடிமாஸ் என்று காப்புரிமை பெற்று வருகிறார்கள்.

BRIC என்று நாடுகளின் முதலெழுத்தை சுருக்கமாகக் கொண்ட ப்ரேஸில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா நாட்டு நிறுவனங்களுக்கு மதிப்பு இன்னும் அதிகம். கூகிள், யாஹ¥ மற்றும் மைக்ரோசா·ப்ட் சிறிய மீன்களை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். யாராவது அமெரிக்காவில், ஆங்கிலத்தில் புதிதாக செய்திருந்தால், 'நான் முதலா... நீ முந்திக் கொள்வாயா' என்று கபளீகரம் செய்ய போட்டா போட்டி நிலவுகிறது.

இந்த மாதிரி நிலைமை தமிழகத்தில் இன்னும் சென்றடையவில்லை. இந்த நிலையில் தமிழ்மணம் வாங்குவதால் லாபமா? நஷ்டமா?

தமிழ்மணம்.காம் பெறுவதால் என்ன லாபங்கள்:

* சிறிய மீன். இன்னும் பூதாகாரமாக வளரவில்லை. வளர்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

* தமிழ்நாட்டில் (மற்றும் இந்தியாவில்) பெருமளவு இணையப் பயன்பாடு இன்னும் சென்றடையவில்லை. தாத்தா/பாட்டிகள் மின்னஞ்சலையும், இளசுகள் அரட்டையும், மத்தியமர் தொழில் நுட்பத்திற்காகவும் பயன்படுத்தினாலும், ஈ-பே, அமேசான் போன்று வலை தாதாக்கள் என்று யாரையுமே சொல்ல முடியாது. இந்த நிலையில், தமிழ்மணத்தை அடித்தளமாகக் கொண்டு, பத்து கோடித் தமிழர்களை சென்றடையும் வாய்ப்பு இருக்கிறது.

* ஐநூறுக்குக் குறையாத வலைப்பதிவர்களிடையே பரவலான பரிச்சயத்தைக் கொண்டது.

* தினசரி ஆயிரம் பேருக்குக் குறையாமல வந்து செல்லும் இடம். ஒரு முறைத் தேடலில் வந்து விழுபவர்கள் கூட, மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வருகை புரிகிறார்கள். Repeat audience.


ஒரு சில பாதகங்களை நோக்கலாம்:

* அலிபாபா.காம் போன்று பெருஞ்செலவு செய்து ஸ்வீகரிக்க தமிழ்மணம்.காம் பரவிய பயனர்களைப் பெற்றிருக்கவில்லை.

* ·பீட் ஆன் ·பீட்ஸ் போன்ற திறமூல நுட்பங்களினால் தயாரிக்கப்பட்டதால், நிரலியை யார் வேண்டுமானாலும் நிறுவி, சேவையைக் கொடுத்து விடலாம்.

* தமிழ்மண வலைப்பதிவர்களோ, வாசகர்களோ... அவ்வளவு ஏன்? தமிழ் மக்களே இணையம் மூலமாக பொருள் வாங்குவதை உகந்து, இயல்பாக செய்வதில்லை. எம்பி3 அல்லது படங்களை இலவசமாக வலையில் இறக்கிக் கொள்ளுதல் போன்றவை எளிதாக எட்டுவதால், சினிமா மோகத்தைக் கூட பணமாக மாற்றி, அதன் மூலம் அமேசான் போல் லாபம் ஈட்டுவது கடினமான காரியம்.


அடுத்ததாக தமிழ்மணம்.காம் எப்படி நிர்வகிக்க வேண்டும்? யார் முதலீடு செய்ய வேண்டும்? எப்படி பங்குதாரர் ஆவது? எவ்வாறு தன்னார்வலருக்கும் உரிமையாளருக்கும் வித்தியாசங்களை அடையாளம் காண்பது...

இந்த அலசலுக்கு சமீபத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் http://www.opinionjournal.com/editorial/feature.html?id=110008531 கட்டுரையின் க்ரெய்க்லிஸ்ட் ஒப்புமை உதவலாம். தமிழ்மணமும் க்ரெய்க் லிஸ்ட்டும் இருவேறு தளங்களில் செயல்பட்டாலும், அடிநாதம் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

இருவருமே தன்னார்வலர்கள் மற்றும் பயனீட்டாளர்களை நம்பியுள்ளார்கள். இருவரிடமும் எண்ணிக்கையில் வெகு குறைவானவர்களே, முழு நேர வேலையாக ஈடுபட்டுள்ளார்கள்.

க்ரெய்க் லிஸ்ட் லாபம் ஈட்டுகிறது; தமிழ்மணம்.காம் வரி விளம்பரங்களை வெளியிடுகிறது.
தமிழ்மணம்.காம் லாபம் ஈட்டவில்லை; க்ரெய்க் லிஸ்ட் வரி விளம்பரங்களை வெளியிடுகிறது என்பதுதான் முக்கிய வித்தியாசம்.

தமிழ்மணத்தை வாங்குவோர் இந்த லாபமற்ற நோக்கத்திற்கு இடையூறாக இருப்பவர்களாக இருக்கக் கூடாது. என்றாவது மில்லியனர் ஆகி விடுவோம் என்னும் எண்ணத்தில், மாதந்தோறும் ஐயாயிரத்து சொச்சத்தை முதலீடாக எண்ணுபவர்களாக இருந்தால், வெகு சீக்கிரமே தமிழ்மணம் தன்னுடைய மணத்தை இழந்து விடலாம்.

எனினும் தமிழ்மணத்தை தட்டி கொட்டி, உருச்சிதையாமல் மாற்ற விரும்பினால் என்ன செய்யலாம் ?

* சினிமா, இலக்கியம், அரசியல் என்று கன்னல்களை உருவாக்கலாம். இவற்றில் விளம்பரம் கொடுப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கலாம். மேம்படுத்தப்பட்ட கன்னலில், செய்திகள், வலைப்பதிவுகள், ·ப்ளிக்கர் போன்ற நிழற்படங்கள் என்று அனைத்தும் ஒருங்கேக் கிடைக்கும்.

* சாதா பயனர், ஸ்பெஷல் பயனர் என்று இருவகைகளை உருவாக்கலாம். சாதா பயனரால் வலைப்பதிவுகளில் தேட முடியாது; பிடிஎ·ப் கோப்பாக்க முடியாது; சிறப்புப் பயனர் என்றால் தனி வண்ணத்தில் டக்கர் ஜிங்காக மிளிர்வார் போன்ற சலுகைகளைக் கொடுக்கலாம்.

* ஆரெம்கேவி-க்கு தோழி.காம் செயல்படுவது போல், நல்லி, மூட்ஸ், ஆச்சி மசாலா பொடி என்று எல்லாருக்கும் தமிழ்மணம் சிறப்பு பாதைகளை அமைத்துக் கொடுத்து, விளம்பரதாரருக்குப் பொருத்தமான பதிவுகளை ஸ்பெஷலாகத் தொகுக்கலாம்.

* தற்போது ப்ளாக்தேசம் இயங்குவது போல், தமிழ்மணத்தின் ·பீட் ஆன் பீட்ஸ் நிரலியை வைத்துக் கொண்டு, வங்காளம், தெலுங்கு, கன்னடம் என்று பிற மொழிகளுக்கு சேவையை நீட்டிக்கலாம். சி·பி.காம் போல் ஒற்றை சாளர அடிப்படையில், இந்தியரை தமிழ்மண வலைக்குள் வீழ்த்தலாம்.

* அதிகம் அறிமுகமில்லாத அச்சு சேவைகளுடன் கை கோர்க்கலாம். அவர்களினால், தமிழ்மணம்.காம் ஏப்பம் விடப்படும் சாத்தியக்கூறுகளும் இதில் உண்டு.


கடைசியாக கருத்தில் கொள்ள வேண்டியவை

* அரச மரத்தை சுற்றிவிட்டு குழந்தைப் பெற்றுக் கொள்வது போல், 'தமிழ்மணம்' காசியின் மதிப்பை பார்த்து விட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தால் குழந்தை பிறக்காது. ஐந்தாண்டுகள், கருமமே கண்ணாக நேரமும் காசும் செல்வழிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

* காசி பயன்படுத்திய மை சீக்வல், ஸ்கிர்ப்டிங் போன்ற நிரலிகளில் போதுமான அளவு பட்டறிவும், அதிக அளவு ஆர்வமும் அவசியம் வேண்டும்.

* இந்தியாவில் ஆள் போட்டு மேய்த்தல், வக்கீல்களுக்கு செலவழித்தல், முறையீடுகளுக்கு செவிமடுத்தல், நுட்பக் கோளாறுகளுக்கு துரித விடையளித்தல், பங்குதாரர்களுக்கு பதிலளித்தல், விளம்பரதாரர்களுக்கு விளக்கமளித்தல் என்று மண்டை காய்தலுக்கு உவப்புடன் ஈடுபட வேண்டும்.

* தன்னார்வலர்களைப் பெருங்கூட்டமாக வைத்துக் கொண்டு, உள்கட்சிப் பூசல், காங்கிரஸ் கோஷ்டி போல் தொண்டர்களை விடத் தலைவர்கள் அதிகம் கொண்ட நிலை உருவாகாமல் பார்த்துக் கொள்ள, நெருங்கியத் தொடர்புள்ள மிகச்சிலரே ஈடுபட்டிருக்க வேண்டும்.

* மைக்ரோசா·ப்ட்டை விட்டு பில் கேட்ஸ் விலகுகிறார் என்றாலும், ஏதாவது பொறுப்பில் எங்கிருந்தாவது கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார் என்பது போல், காசியும் தமிழ்மணம்.காமுடன் பின்னிப் பிணைந்திருந்தால் நலம்.

| | |
oooOooo
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |