ஜூன் 17 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
பருந்துப் பார்வை
உ. சில புதிர்கள்
பெண்ணோவியம்
வானவில்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    காந்தீய விழுமியங்கள் : மறு பிறப்பும் மோட்சமும்
    - ஜெ. ரஜினி ராம்கி
    | Printable version |

    காந்திஜிநாட்டு விடுதலைக்காக பாடுபடும் முன்னணி அரசியல் தலைவராக இருந்ததுடன் காந்திஜியால் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருக்க முடிந்தது இந்தியாவின் எட்டாவது அதிசயமென்று சொல்லலாம். அரசியலும் ஆன்மீகமும் இருவேறு துருவங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. ஆன்மீகம் சார்ந்த அரசியல் இருக்கமுடியும்; இருக்கவேண்டும். ஆனால் அது அஹிம்சை வழியில் இருத்தல் வேண்டும் என்பதுதான் காந்திஜியின் உள்ளார்ந்த கருத்தாக இருந்தது. மறு ஜென்மம், மோட்ச நிலை போன்றவற்றிலும் காந்திஜிக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. எல்லா பாபங்களுக்கும் விமோசனம் உண்டு; விதி வலியது போன்றவற்றிலும் அவருக்கு உடன்பாடு உண்டு.

    'ஆன்ம விமோசனம் அடைகின்ற நிலையை நான் இன்னமும் அடையவில்லை. ஆனால் இந்நாட்களில் என்னுடைய சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கிற பாதையில் நான் சென்று கொண்டிருக்கும்போதே இந்த உடலை விடுவேனானால், நான் மறுபிறப்பு பெற்று அந்த வாழ்வின் முடிவில் மோட்சத்தை அடைந்துவிடுவேன்.'  (Collected Works of Mahatma Gandhij, 21.5.1908)

    மறு பிறப்பு, மோட்சம் போன்றவற்றிற்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இருந்தாகவேண்டும் என்கிற அவசியமில்லை என்கிறார் காந்திஜி.

    'கடவுளே இல்லையென்றால் மோட்சம் எப்படி இருக்க முடியும் என்று கேட்பது மோட்சத்தை புரிந்து கொள்ள தவறுவதாகும்.  மோட்சம் என்பதன் பொருளின் ஒரு பகுதியைத்தான் நம்மால் கிரகிக்க முடியும்; மீதியை அனுபவத்தால்தான் அறிய வேண்டும். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  முடிவற்ற பல்வேறு ஜன்மங்களை எடுப்பதிலிருந்தும் அதன் விளைவான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுதல் என்பது அதன் பொருள். ஆனால், கடவுள் இருக்கிறார் என்பதை மறுப்பது தேவையில்லை. நம்முடைய அறிவின் வரம்புக்கு உட்பட்டு கடவுள் என்பதற்கு வரையறை செய்துவிட முயற்சி செய்யலாம்' (Collected Works of Mahatma Gandhij, 30.5.1913)

    மறு பிறப்பு பற்றிய நம்பிக்கைகள் எல்லா மதங்களிலும் பொதுவாக இருக்கும் விஷயங்கள். இதை வெறும் மூடநம்பிக்கையாக மட்டும் நினைத்துவிடக்கூடாது என்கிறார் காந்திஜி. எல்லா நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகள் அல்ல; ஒரு சிலவற்றில் உண்மைகளும் பொதிந்து இருக்கின்றன என்பதே அவரது கருத்து. மூடநம்பிக்கைகளை எதிர்த்து சமூக சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்ட காந்திஜிக்கு அதைச்சொல்ல தகுதியும் அனுபவமும் இருக்கிறது.

    'கர்மாவை ஒருபோதும் அழித்துவிடமுடியாது.  எல்லா செயல்களுக்கும் நல்லதோ  கெட்டதோ பலன்னுடு.  நாம் விபத்து என்று சொல்வது உண்மையில் விபத்து அல்ல. நமக்கு அப்படித்தோன்றுகிறது. யாரும் அவருக்கு உரிய காலத்திற்கு முன் இறப்பதில்லை. தவிர மரணம் என்பது அதே ஆத்மாவின் இறுதியான மாற்றமே தவிர முற்றிலுமாக அழிந்து போவதல்ல.  ஆத்மாவுக்கு மரணம் கிடையாது. இந்த மாற்றம் கூட உடம்பின் மாற்றம்தான். வடிவம் மாறுகிறது; ஆனால் ஆத்மா மாறுவதில்லை' (Collected works of Mahatama Gandhiji, 24.7.1918)

    சரி, மறு பிறப்பை தவிர்த்து மோட்ச நிலை அடைவதற்கு நாம் என்னதான் செய்ய வேண்டும்?  கடவுளை நினைத்து முழுநேரமும் பிரார்த்தனை செய்துகொண்டே காலத்தை கழிக்கவேண்டுமா என்கிற கேள்விக்கு காந்திஜியிடமிருந்து ஹாட்டான பதில் கிடைக்கிறது.  'எதுவும் செய்யவேண்டும்; மனசாட்சி என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு எதை வேண்டுமானாலும் செய்' என்கிறார் அவர். மனசாட்சியின் குரல் எப்போதும் நியாயமாகவே இருக்கும் என்பது அவரது நம்பிக்கை.

    'அந்தராத்மாவின் குரலை வர்ணிப்பது இயலாத காரியம். ஆனால் சில சமயங்களில் உள்ளேயிருந்து நமக்கொரு தூண்டுதல் கிடைப்பதை நிச்சயமாக உணர்கிறோம். (காந்திஜி சொன்னதாக மகாதேவ தேசாயின் டைரியில்,  7.8.1932)

    அதுபோல முன்ஜென்ம ஞாபகங்கள் நமக்கு இல்லாததது நல்ல விஷயமே என்கிறார். 'நடந்ததை மறந்துவிடு நடக்கப்போவதை மட்டுமே நினைத்துக் கொண்டிரு' என்பதில் காந்திஜி இன்னொரு சாக்ரடீஸ்.

    'முந்தைய பிறவிகள் நமக்கு நினைவில் இருப்பதில்லை என்பது இயற்கையின் கருணையாகும். இதற்கு முன் நாம் எடுத்துள்ள எண்ணற்ற பிறவிகளை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதால் என்ன பயன்? இவ்வளவு பெரும் நினைவுச்சுமையை நாம் தாங்கிக் கொண்டிருந்தால் வாழ்க்கையே பெரிய சுமையாகிவிடும். விவேகமுள்ள மனிதன் பல விஷயங்களை வேண்டுமென்றே மறந்து விடுவான். ஒரு வழக்கறிஞன் தமது வழக்கு தீர்ப்பானதும் அது பற்றிய விவரங்களை மறந்துவிடுவதுபோலவே, மரணம் என்பது நமது பிறவி பற்றிய விஷயங்களை மறக்கடித்துவிடும்'  (மீராவுக்கு பாபுவின் கடிதங்கள், 25.1.1931)

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |