ஜூன் 17 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
பருந்துப் பார்வை
உ. சில புதிர்கள்
பெண்ணோவியம்
வானவில்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  க. கண்டுக்கொண்டேன் : வேகன்களில் மிக்கியா? பஞ்சபாண்டவரா?
  - ரமா சங்கரன்
  | Printable version |

  பூமியில் மனிதர்களுக்கு வசிக்க  இடம் போதவில்லை.  விண்வெளிக்குச் சென்று தாங்கள் வசிக்க  காலனிகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவை 'ஸ்பேஸ் காலனிகள்" (Space Colony) என அழைக்கப்படுகின்றன.  இதற்குப் பின் A.C அதாவது After Colony என்னும் யுகம் தொடங்குகிறது. இந்த ஸ்பேஸ் காலனிகளில்  அமைதி நிலவுகிறது. ஆனால் பூமியில் வாழும் மனிதர்களுக்கு இடையே எப்போதும் போல சண்டை. சில இடங்களில் யுத்தம். இந்த சண்டை 175 A.C யில் முடிவடைகிறது. பூமியில் அமைதியை உண்டாக்க அதை  ஆட்சி செய்யும் அரசாங்கம் ஒரு  ஒருங்கிணைந்த கூட்டுப்படையை (Earth Sphere Unified Alliance) அமைக்கிறது.  இது பூமியில் அமைதியை நிலைநாட்டுகிறேன் என்று சொல்லிக் கொண்டு  OZ என்னும் படை வீரர்களை அமர்த்துகிறது. ஆனால் மறைமுகமாக தொழில்வல்லுனரான  ரோம்ஃபெல்லெர் கூட்டத்திற்கு கையாட்களாக செயல்படுகிறது.

  ஸ்பேஸ் காலனியில் வசிப்போரை இந்த OZ படை அடிமைகளாக்க முயல்கிறது. ஸ்பேஸ் காலனிகளில் வசிப்பவர்கள் OZ படையை  முறியடிக்க முயற்சி எடுக்கிறார்கள். இதற்காக  'கண்டாம்"(Gundam) மெஷின்களை விஞ்ஞானிகள் உருவாக்குகின்றனர். இந்த 'கண்டாம்" மெஷின்களை பயன்படுத்த  விஞ்ஞானிகள் ஐந்து சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அந்த சிறுவர்கள் வெற்றி பெற்றார்களா? என்ன நடக்கிறது? இதைத் தெரிந்து கொள்ள நீங்கள் "கண்டாம்" கார்ட்டூனைப் பாருங்கள் என்றான் என் 13 வயது குட்டித் தோழன். உயர்நிலைப்பல்ளி மாணவனான  ராகவ் கும்பகோணத்திலிருந்து சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தான்.  'ஆக்ஷன் மேன்' தொடங்கி 'ஜிஐ ஜோ' வரையிலான இப்போது இந்தியாவில்  எங்கும் கிடைக்கும் பொம்மைகள், அதன் விலை எல்லாம் அவனுக்கு அத்துப்படி. 

  அவன் இங்கு வாங்கியிருந்த பொம்மைகளில் ஒன்று "கண்டாம்".  அதைப் பிரித்து எனக்கு அதன் பல பாகங்களைச் சேர்த்து ஒரு "கண்டாம்" மெஷினை உருவாக்கிக் காட்டினான். இந்த பொம்மையால் கதை சொல்லும் திறன், பல பாகங்களை ஒன்று சேர்த்து உருவாக்குவதால் மூளைத்திறன், கற்பனை, விஞ்ஞானத்தின் மேல் ஆர்வம் இதெல்லாம் அவனுக்கு கிட்டியுள்ள பயன்கள். ஆனால் அழிவு, சண்டை, அழிவுக்கான ஆயுதங்களை உருவாக்குதல் என்ற சில கேடு விளைவிக்கும் பயன்களும் அவன் வயது குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியாவில் இன்று 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பொம்மைகள் சந்தைகளில் விற்பனையாகிறது. சில குறிப்புகள் 100 கோடி என்றும் சொல்கின்றனர்.

  பொம்மைகள் விற்பனையில் மூன்று பேர் முக்கியப் பங்காற்றுகின்றனர். குழந்தை, அம்மா, அப்பா ஆகிய மூவரே ஆவர்கள்.  பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் எந்த பொம்மையை வாங்குவது என்று முடிவு செய்வதில் பொதுவாக பெற்றோரின் கல்விநிலை, வருமானம் இரண்டும் முக்கியமாகக் கருதப்படுகிறது. விளம்பரங்கள், நண்பர்கள், கார்ட்டூன்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஒரு குழந்தையின் எந்த பொம்மையை  வாங்குவது என்ற  விருப்பத்தைத் தீர்மானிக்கிறது.

  சென்னயின் எம்ஆர்எஃப் டயர் நிறுவனமும் உலகாளாவிய ஹாஸ்ப்ரோ இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்த "ஃபன்ஸ்கூல்" பொம்மை நிறுவனம் குழந்தைகளுக்காக 'ஆக்ஷன் மேன்" பொம்மையை உற்பத்தி செய்துள்ளது.  அதைத் தனி பிராண்டாக உருவாக்கி ஆக்ஷன் மேனின் மதிப்பை மட்டும் உலக சந்தைகளில் 800 மில்லியன் அமெரிக்க வெள்ளியாக உயர்த்தியிருக்கிறது. இந்தியாவில் செயல்படும் "மேட்டல்" (Mattel) பொம்மை நிறுவனம் "ஜைரோ ஜெட்" - அதாவது கேபிளை இழுத்து விட்டால் அந்த வேகத்தில் மேலே செல்லும் விமானம்(Pull cable device) ஒன்றை தயார் செய்து குழந்தைகளை தன் பக்கம் இழுத்திருக்கிறது. இதன் விலை இந்தியாவில் 499 ரூபாய் என்றும் சிங்கப்பூரில் அதுவே கிட்டத்தட்ட 700 ரூபாய் ஆகிறது என்றும் கணக்கிட்டான் ராகவ். பொதுவாக சிங்கப்பூரில் பொம்மைகள் விலை அதிகமாக இருக்கிறது.   'மேட்டல்' நிறுவனம் ஃபிஷர் பிரஸ், பார்பி, ஹாட் வீல்ஸ் பொம்மைகளை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

  அழகும் கவர்ச்சியும் மிக்கப் பெண்ணான பார்பிக்கு கணவர், குழந்தைகள் உண்டு. ஆனால் அது எந்த அளவு குடும்ப பண்பாடுகளை போதிக்கிறது? அதாவது இந்தியக் கண்ணோட்டத்தில் பார்த்தால். ஆனால் அதே சமயம் மே இறுதியில் மேட்டல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்தியாவில் "Hot 100"  என்னும் கார் மாடல் பொம்மைகள் குழந்தைகளுக்கு கார்களைப் பற்றி நிறைய ஆர்வமூட்டுகின்றன. உலகில் நாம் நிஜமாக காணும் கார்களைப் போலவே  அச்சு பிறழாமல் அதே மாதிரியான  100 மாடல் கார்களை குழந்தைகள் விளையாட செய்து தந்திருக்கிறது. கார்களின் முன் பக்கத்தை "Hardnoze" என்றும் சாலையில் அது செல்லக் கூடிய வேகத்தைத் தீர்மானிக்கும் சக்தியையும் சக்கரங்களையும் "Fatbox" என்றும் இன்னும் பல தொடர்கள் மூலம் இன்று குழந்தைகளுக்கு போதித்திருக்கிறது. ஆனால் இவை எல்லா குழந்தைகளும் வாங்கி பயன் பெறமுடியுமா? என்பது ஒரு கேள்வி.

  அண்மையில் நான் கும்பகோணம் சென்றபோது ( சென்னையிலிருந்து 280கிமீ தொலைவில்  தஞ்சை மாவட்டத்தில் அமைந்த ஒரு சிறிய டவுன்) வளையல், மணிகள் விற்கும் மொத்த விற்பனைக் கடைகளுக்குச் சென்றேன். ஒரு பெரிய பொம்மை வணிக கட்டமைப்பே நிலவுகிறது.  இந்த கடைகளில் நான் பார்த்தது குறத்திகளும் சாக்கு மூட்டைகளுடன் நிற்கும் கிராமத்து வியாபாரிகளையும். குறத்திகள் மணிகள் வாங்கிச் சென்று கோர்த்து பஸ் நிற்கும் இடங்களிலும் திருவிழாக்களிலும் விற்கிறார்கள். கிராமத்து வியாபாரிகள் பொம்மைகளை வாங்குகிறார்கள். கார்கள், பிளாஸ்டிக் பொம்மைகள்,  தரையில் ஓடும் விமானங்கள்- ஒரு அட்டைபெட்டியில் மூன்று முதல் ஆறுவரையிலான கார்கள் உள்ளன. அவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சென்னை, மும்பை போன்ற நகரங்களில் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்படுகின்றன. இவை டஜன் கணக்காக விலைபேசப்பட்டு சிறிய ஊர்களான தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி போன்ற ஊர்களின் கடைகளை சென்று அடைகின்றன. ஒவ்வொரு 10 கார்களுக்கும் இரண்டு கார்கள் ஓடாது என்று தெரிவித்தார் கடைக்காரர். ஒரு ஆண்டிற்கு ஐந்து முதல் ஆறு லட்சம் வரை மொத்த வியாபாரம் செய்கிறார்

  இக்கடையின் உரிமையாளரான குமார். இவர் தந்தையார் திரு ராஜகோபால் 30 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மொத்த வியாபாரம் இது. பொம்மை அட்டைப்பெட்டிகள் அடுக்கடுக்காக குவிக்கப்பட்டுள்ளன. ஒரு அட்டைப்பெட்டி கார் 9 கொண்டது 80 ரூபாய்தான்.  இவற்றை சாக்கில் போட்டு பேக் பண்ணி பஸ்ஸில் எடுத்துச் சென்று கும்பகோணத்தைச் சுற்றி 15கிமீ தொலைவிற்குள் உள்ள உப்பிலியப்பன் கோயில், இரண்டாம் கட்டளை, ஆடுதுறை, திருவிடைமருதூர், திருபுவனம், பட்டீஸ்வரம், சுவாமிமலை  போன்ற கோயில் திருவிழாக்களில் விற்பார்கள்.  தமிழக முதல்வர் மிளகாயால் ஹோமம் செய்து வழிபடும் இரண்டாம் கட்டளையில் உள்ள பிரத்தியுங்கா தேவி ஆலயத்தின் பெளர்ணமி  திருவிழாக்கள் மிகப் பிரபலமானது என்றார் அங்கிருந்து வந்த வியாபாரி ஒருவர். திருவிழாக்களின்போது  உள்ளூர் காண்டிராக்டர்கள் ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை கோயிலுக்குக் கட்டணம் செலுத்துவதாகப் பேசிக் கொள்வார்கள். பின் கோயிலைச் சுற்றி உள்ள கடைவீதிகளில் சாக்குகளை விரித்தோ அல்லது கூரையின் கீழோ வியாபாரிகள்  தங்கள் சாமான்களை  விற்பார்கள்.அதில் ஒரு பங்கை அவர்கள் காண்டிராக்டர்களுக்குக் கொடுப்பார்கள்.  ஒருவர் பொம்மை விற்றால் மற்றொருவர் அதை விற்கக் கூடாது. இப்படித் திருவிழாக்களில் 'மோனோபொலி' வணிகமுறைப் பின்பற்றப்படுகிறது.

  இப்படி கிராமங்களில் கூட பொம்மைகள் குழந்தைகளை ஆட்டுவிக்கின்றன. இன்று இந்தியமயமாக்கப்பட்ட கிரிக்கெட், மோனோபொலி ஆகியவை கிடைக்கின்றன.  Funschool நிறுவனம் அண்மையில் இந்தியாவிலிருந்து 'Trivival Pursuit" மற்றும் "Jenga" என்னும் இந்தியப் பாணி பொம்மையை தயார் செய்திருக்கிறது. இது முழுதும்  மரத்தால் ஆன பிளாக்குகளை வைத்து விளையாடும் குடும்ப விளையாட்டுச் சாமான். இதை  பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது.  பொம்மைகள் கலாசாரத்தை வளர்ப்பது அவசியம் என்று குழந்தை வளர்ப்பு நிபுணர்கள் சிலர் கூறி வருகின்றனர். அப்படியானால் ஏன் அர்ச்சுனன் வில்லை வளைத்து அம்பு விடுவது போலவும்,  சீதையை ராவணன் தூக்கிச் செல்வது போலவும் ஆக்ஷன் காட்டும் பொம்மைகளை செய்யக் கூடாது?   இன்று  சந்தைகளிலும் குழந்தைகள் மனதிலும் இடம் பெற ஜிஐஜோ, பேட் மேன் போல பொம்மைகள்  " Speed, Power, Performance" பெற்றிருப்பது தேவையாகிறது. கலாசாரம், பொருளாதாரம், நுட்பங்கள் இதற்கு அடுத்தப்படித்தான்.  

  ஒரு வயதுக் குழந்தைக்கான Fisher Price நிறுவனத்தின்  "புதிர் ரயில் வண்டி" பொம்மையைப் பாருங்கள். வண்ண வண்ண நிறம். வேகன்களில் 1,2, 3,4 என்று எண்கள் குறிக்கப்பட்டுள்ளது. அந்த வேகன்களில் உட்கார மிக்கி, மின்னி, டொனால்ட், கூஃபி என்னும் கார்ட்டூன் கேரக்டர்கள். குழந்தையின் நிறங்கள், எண்கள், தோழமை, மூளைத்திறன் ஆகியவை வளர அடிப்படையாகிறது அது. அதே வேகன்களை ஐந்தாகப் பண்ணி பஞ்சபாண்டவர்கள் அதில் காட்டுக்குச் செல்வதாக,  நவீனக்கால  பொம்மையாக ஏன் செய்யக்கூடாது? குழந்தைகளுக்கு முதலில் கதையில் நம்பிக்கை பிறக்க வேண்டும். கற்பனை, ஆர்வம் வரவேண்டும். நட்புணர்வு மனதில் தோன்ற வேண்டும். பொம்மைகள் குழந்தைகளின் தனிமையைப் போக்கும் மகிழ்ச்சி தரும் நண்பர்களாகக் கருதப்படுகின்றன என்பதுதான் உண்மை.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |