ஜுன் 22 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரையோவியம் : நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
- [feedback@tamiloviam.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

"நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்
காதல் தானே இது காதல் தானே.."

"டிஷ்யூம்" படத்தில் வரும் இனிமையான இப்பாடலை அனுபவித்து பாடிய பாடகர் ஜெயதேவ்.

அவரிடம் இப்பாடலை பாடிய அனுபவத்தை பற்றி கேட்ட பொழுது..

Singer Jayadev"என்ன அர்த்தம், என்ன ஃபீலிங்க்ல பாடணும்னு வைரமுத்து சாரும், சசி சாரும் தனித்தனியா கிளாசே எடுத்தாங்க. பாடும் போது சாதாரணமாத்தான் பாடிட்டு வந்தேன் ஆனா பாருங்க, ஒரே பாட்ல ஊரறிஞ்சவனாயிட்டேன். பாட்டுக்கு நல்ல வரவேற்பு. மியுசிக் டைரக்டர் விஜய் அண்டனிதான் இதுக்கெல்லாம் காரணம்" அடக்கமாகப் பேசுகிறார்.

சின்ன வயசுல முறைப்படி பாட்டு பாடியதுண்டா...

டெல்லியில எம்.பி.ஏ படிக்கும் போது 2 வருஷம், பிறகு புனேவுல வேலையில் இருக்கும்போது 2 வருஷம்னு, 4 வருஷம் ஹிந்துஸ்தானி கத்துக்கிட்டேன். இனி சினிமாதான்.. பாட்டுதான்.. சென்னைதான்...னு முடிவானதும், ரெண்டரை வருஷத்துக்கு முன்னால இங்க வந்தேன்.
முதல் வேலையா முழு மூச்சா உக்காந்து தமிழ் எழுதப் படிக்கக் கத்துகிட்டேன்.

பிறகு இந்தி, தமிழ்னு ஏற்கனவே வந்த 2 பாடல்களை நானே பாடி ஒரு டெமோ சிடி தயார் பண்ணிட்டு எல்லா இசையமைப்பாளர்களையும் சந்திக்க ஆரம்பிச்சேன். நான் முதன் முதல்ல சந்திச்சவர் விஜய் ஆண்டனி. அவர்தான் என் நெஞ்சாங்கூட்ல நிம்மதிய வச்சவரு" என்கிற ஜெயதேவ், நிறைய விளம்பரப் படங்களுக்கும் ஆல்பங்களுக்கும் பாடியிருக்கிறார். "இப்ப நிறைய படங்கள்ல பாடிட்டு இருக்கேன்" என்கிற இவருக்கு ஹிந்துஸ்தானி இசைதான் ரொம்ப பிடிக்குமாம்.

| |
oooOooo
அவர்களின் இதர படைப்புகள்.   திரையோவியம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |