ஜூன் 23 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முச்சந்தி
சிறுகதை
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
இசையோவியம்
அறிவிப்பு
கவிதை
திரைவிமர்சனம்
கவிதை
அடடே !!
நையாண்டி
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : நவீன பாரதம்
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |
"கடைசிவரை எனக்குப் புரியாத ஒரே விஷயம், உப பாண்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாத நிலையில், இந்த நாவலின் தலைப்புமட்டும் ஏன் 'உப பாண்டவம்' என்றிருக்கிறது ?"

மகாபாரதத்தில், பாண்டவர்கள் ஐவரின் பெயர்களும் நமக்குத் தெரிந்திருக்கும். கௌரவர்களில் ? துரியோதனன் தெரியும், கொஞ்சம் யோசித்தால், துகிலுரிந்த துச்சாதனன் நினைவுக்கு வரலாம். ஆனால், மற்ற தொன்னூற்றெட்டுப் பேரின் பெயர்கள் தெரியுமா ?

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் உப பாண்டவம் நாவலில் அபூர்வமான இந்தப் பட்டியலைப் பார்த்தேன்.

1. துரியோதனன்
2. துச்சாதனன்
3. துஸ்ஸகன்
4. துச்சலன்
5. துர்முகன்
6. விவிட்சதி
7. விகர்ணன்
8. ஜலசந்தன்
9. அலோசனன்
10. விந்தன்
11. அனுவிந்தன்
12. சுபாகு
13. துர்த்தகர்ஷன்
14. துஷ்ப்ரதர்ஷணன்
15. துர்மஷணன்
16. பிரமாதி
17. துஷ்கர்ணன்
18. கர்ணன்
19. சித்ரன்
20. உபசித்ரன்
21. சித்ராஷன்
22. சாருசித்ராங்கதன்
23. துர்மதன்
24. துஷ்ப்ரகர்ஷன்
25. விவித்சு

26. விகடன்
27. சமன்
28. ஊர்ணநாபன்
29. பத்மநாபன்
30. நந்தன்
31. உபநந்தன்
32. சேனாபதி
33. சுஷேணன்
34. குண்டோதரன்
35. மகோதரன்
36. சித்ரபாகு
37. சித்ரவர்மா
38. சுவர்மா
39. துர்விரோகணன்
40. சயோபாகு
41. மகாபாகு
42. சித்ரகாலன்
43. சுகுண்டவன்
44. பீமவேகன்
45. பீமபலன்
46. பலாதி
47. பீமவிக்ரமன்
48. உக்ராயுதன்
49. பிரமதன்
50. சேனாளி

51. பீமசரன்
52. கனசாயு
53. திருடாயுதன்
54. திருடவர்மா
55. திருடஷத்ரன்
56. கோமகிந்திதி
57. சுணதரன்
58. சராகந்தன்
59. துருஷசந்தன்
60. சத்யகந்தன்
61. சக்ரங்லாகு
62. உக்கிரவான்
63. உக்கிரசேனன்
64. சேஷமூர்த்தி
65. சுபராதிதன்
66. அபராஜிதன்
67. பண்டிதகன்
68. விசாலஷன்
69. துராதனன்
70. திருஷ்டகன்
71. சுகப்தன்
72. வாதவேகன்
73. சவர்கன்
74. சூத்தியகேது
75. பகவாசி

76. ராதந்தன்
77. அனுமாயி
78. தண்டி
79. நிஷாங்கி
80. சுவாசி
81. தண்டதாரன்
82. உக்கிரன்
83. தனுகிரன்
84. பீமதரன்
85. வீரன்
86. உக்கிரவான்
87. வீரபாகு
88. சலோயூகர்
89. வியூபோகு
90. களகாங்கதன்
91. குண்டதன்
92. சித்ரகன்
93. துஷ்யாசன்

மீதி ஏழுப் பேர் என்ன ஆனார்கள் ? அச்சில் விட்டுப்போனதா ? அல்லது, நமக்குக் கிடைக்கவில்லையா ?

இந்த ஏழு பேரின் பிரச்சனை ஒருபுறமிருக்க, நெடுநாள்களாகப் படிக்கவேண்டும் என்று விரும்பியிருந்த இந்த நாவலை, இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில்தான் வாங்கி, சென்ற வாரத்தில்தான் படித்து முடித்தேன். இத்தனை நாள்களாகத் தள்ளிப்போட்டுவிட்டோமே என்று ரொம்ப வருத்தமாக இருந்தது. மிகுந்த மன நிறைவளித்த அருமையான நாவல்.

மகாபாரதத்தை நாம் அறிந்திருக்கும் வடிவத்தில் சொல்லாமல், நவீன புனைவாக விவரித்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். சம்பவங்களைக் கால வரிசைப்படி அடுக்காமல், கலைத்துப்போட்டு விளையாடும் நுட்பம் அற்புதமாகக் கனிந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் அதனளவில் நல்ல சிறுகதைகள்போல் அமைந்திருப்பது இன்னொரு விசேஷம்.

நாம் அதிகம் அறிந்திராத, அல்லது, அறிந்தும் கவனித்திராத, கேள்வி கேட்டிராத கதாபாத்திரங்கள், சம்பவங்களை உரிய கவனத்துடன் விவரிப்பதால், இதிகாசத்தின் எல்லாப் பாத்திரங்களோடும் நம்மால் மேலும் அதிக அணுக்கமாக உணரமுடிகிறது. நாம் ஏற்கெனவே அறிந்திருந்த மனிதர்கள்கூட, இந்த நாவலைப் படித்தபிறகு புதுமையேறித் தெரிகிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணம், விதுரன், மற்றும் சஞ்சயன்.

முடிந்தவரை சம்பிரதாயக் கதைசொல்லல் பாணியைப் பின்பற்றிக்கொண்டு, அதையே நவீனமாகக் கட்டமைத்துள்ள இந்த நாவலில் நீர்த்த பக்கங்கள் என்று எதையுமே ஒதுக்கமுடிவதில்லை. இன்னும் சொல்வதானால், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும் பலமுறை செதுக்கப்பட்டதைப்போன்ற கச்சிதத்தோடும், செறிவோடும் அமைந்திருக்கிறது. (இதே காரணத்தால், பெரும்பான்மை வாசகர்கள் இந்த நாவலினுள் சகஜமாக நுழைவது கொஞ்சம் சிரமம் என்றே தோன்றுகிறது. ஆனால், அந்தத் தயக்கத்தை மீறிப் படிக்க ஆரம்பித்தவர்கள், நிச்சயமாக ஏமாறமாட்டார்கள் !)
 
இன்னொரு முக்கியமான விஷயம், மாந்திரீக யதார்த்தக் (மேஜிக்கல் ரியலிசத்தை இப்படி மொழிபெயர்த்தால் சிலர் கோபப்படுகிறார்கள். ஏன் ?) கதைகளின் பிரியர்கள், மிகவும் நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ள இந்த மகாபாரத வடிவை ரொம்பவே ரசிப்பார்கள். பிரம்மிக்கவைக்கும் படிமங்கள் அடுத்தடுத்து விழுந்துகொண்டிருக்கும் நிலையில், எது கதை, எது மிகை என்றே தெரியாதபடி எல்லாம் ஒன்றாகக் கலந்துவிடுவதால், நாவலின் இறுதியில் கதைசொல்லி கனவொன்றிலிருந்து விழித்தெழுவதுபோல்தான் நாமும் திகைப்போடு கதையிலிருந்து பிரிகிறோம்.

அடிப்படையில், இந்த நாவல் சொல்கிற விஷயம் நமக்கு ஏற்கெனவே நன்றாகத் தெரிந்த கதைதான், என்றாலும், சுவை குன்றாமல் வாசிக்கமுடிவது எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் செறிவான நடையழகினாலும், கனமான, வழமை மீறிய கதைசொல்லல் பாணியாலும்தான் என்று சொல்லலாம்.

ஆனால், கடைசிவரை எனக்குப் புரியாத ஒரே விஷயம், உப பாண்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாத நிலையில், இந்த நாவலின் தலைப்புமட்டும் ஏன் 'உப பாண்டவம்' என்றிருக்கிறது ?

(உப பாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன் - அட்சரம் வெளியீடு - 393 பக்கங்கள் - விலை ரூ 150/-)

http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=nov&itemid=332

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |