ஜூன் 23 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முச்சந்தி
சிறுகதை
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
இசையோவியம்
அறிவிப்பு
கவிதை
திரைவிமர்சனம்
கவிதை
அடடே !!
நையாண்டி
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : ஓய்வெடுக்கும் சில கலைகள் (Art of rest and relaxation reduce Stress)
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

மனத்தை தளர்த்திக்கொள்வது பல வழிகளில் செய்யலாம். வெற்றிகரமான  மனம் தளர்த்திக்கொள்ளுதல் (relaxation)என்பதற்கு அடிப்படை அது மகிழ்ச்சியையும், அதே சமயம் நாம் பல நேரம் நினைப்பதை போல ஒரு வேலையாக மாறிவிடாமல் இருப்பதும் ஆகும்.

கீழே உள்ள சில வழிகள் செய்வதற்கு மிக எளியதும், அதிக நேரமோ திறமையோ பயிற்சியோ தேவையில்லாததும் ஆகும்.

நடத்தல் என்பது மனத்தை தளர்த்தவும், தியானம் செய்யவும் மிக நல்ல பயிற்சி. வீட்டினுள்ளேயே  இரண்டு அறிகளுக்கு இடையே மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள். நடக்கும் போது மிக மெதுவாகவும், இரண்டு முழங்கால்களையும் சற்றே மடக்கி, அருகருகே வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்யும் போது உங்கள் கவனம் முழங்கால்கள் எப்படி இருக்கிறது என்பதிலேயே இருக்கும் ஆகையால் தகைவை தரும் விஷயம் மனதை விட்டு சற்றே விலகி இருக்கும். நடக்கும் போது உங்கள் உடம்பின் கால்கள், தொடை, முதுகு தோள்கள் எப்படி இருக்கிறது என்றும் சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஏதேனும் வேலை செய்யுங்கள்: தோட்ட வேலை, வீட்டை துப்புறப்படுத்துவது, மற்றும் படிப்பது. இந்த பணிகளை செய்யும் போது இதற்கான தகவி எவ்வளவு தேவை என்பதை கவனியுங்கள்.

1. வேலையை முடிக்க தேவையான அளவு
2. சில தேவையில்லாத அழுத்தம்.

இதில் தேவையில்லா அழுத்தத்தை நீக்க முயற்சிக்கவும்.

இடைஞ்சல் இல்லாத அமைதி: நல்ல வசதியான இடத்தில் அமர்ந்து சற்று மெதுவாக மென்மையான பொருட்களின் பெயரை சொல்லுங்கள். உங்கள் குரலை நீங்களே கேளுங்கள். உங்கள் மனம் அலைபாய்ந்தால் பரவாயில்லை நாளடைவில் மெல்ல கட்டுக்குள் வரும்.

தப்பித்து செல்லுங்கள்: பிரச்சினை இருக்கும் இடத்தை விட்டு விலகி செல்லுங்கள். ஒரு 20 மணித்துளிகள் வெளியே நடப்பதோ, திரைப்படம் ஒன்றை பார்ப்பதோ அல்லது சின்ன உலா போவதோ செய்யவும். மனம் அமைதி அடைந்தபின் மீண்டும் பிரச்சினையை அலசலாம். நான் அலுவலகத்தில் அதிக குழப்பம் இருக்கும் போது காப்பி வாங்கவோ அல்லது வெளியே காலாற நடக்கவோ செய்வேன்.

உடற்பயிற்சி: குதிப்பதும் ஓடுவதும் இறுகிய தசைகளை விரிய செய்யும் ஒரு அற்புத செய்கை. கைகளை வேகமாக அசைத்தும், கைகளை தோளுக்கு அருகில் கொண்டு செல்வதுமாய் உடலின் அதிர்வுகளை கணக்கிலெடுத்துக்கொள்ளுங்கள். இந்த அதிர்வுகள் மனதில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும். பிறகு அ  ம ர்ந்து கொண்டு அதையே கால்களில் செய்யுங்கள்.

மனதில் ஓவியங்கள் வரைதல்:  உங்களுக்கு பிடித்த இயற்கை காட்சிகளையோ, மலையையோ நதியின் கரையையோ அல்லது நீங்கள் பிறந்த ஊரையோ மனதில் நினைத்து அதற்கு உய்ர் கொடுத்து பாருங்கள். நீங்கள் பிறந்து வளர்ந்த வீடென்றால் அங்கு உள்ள சாமான்கள், உடன் பிறந்தவர்கள் என்று அத்தனையும் கொண்டு வ ர முயலுங்கள். இதில் செலுத்தும் கவனம் மனதை இளக செய்வதையும், கோபம், டென்ஷன் போன்றவற்றை விலக்குவதையும் உணர்வீர்கள்.

தகைவின் அடிப்படை காரணங்களை கண்டறியுங்கள்:  பிரச்சினை எங்கே என்று ஆராய்ந்து அ  றி யுங்கள். அலுவலகம் செல்ல காலையில் கால தாமதம் ஆவது வழக்கமாகி டென்ஷன் தருமானால், ஏன் தமதாமாகிறது? காலையில் ஏன் சீக்கிரம் எழ முடிவதில்லை, இதற்கு இரவு வெகுநேரம் கழித்து தூங்கப்போவது ஒரு காரணம் என்றால் அதை எப்படி சரி செய்வது என்று யோசிக்கவும். பிறகு அதை மெல்ல மெல்ல மாற்ற ஒரு திட்டம் தீட்டவும்.

இதை நடைமுறையில் செயலாக்காமல் ஏதெனும் தடுப்புகள் (barriers) உள்ளனவா என்று யோசிக்கவும்
ஒரு திட்டத்தை எப்படி வெற்றிகரமாக்குவது எப்படி என்று சிந்திக்கவும் செய்யுங்கள்.
தகைவுக்கு பெரும்பாலான காரணங்கள் நம்மிடமே இருக்கும். இதை கண்டு உணர்ந்து சரி செய்வது முக்கியம்.

லசாரஸ் என்பவர் 1984ல் முதன் முதலில் தகவை (stress) எப்படி சமாளிக்க முடியும் என்று ஒரு உளவியல் ரீதியான மாடல் ஒன்றை ஏற்படுத்தினார். இதன் படி தனிமனித கட்டுப்படுத்தும் தன்மை ஒருவனுடைய தகைவின் காரணிகளை அனுமானிக்கும் விதத்திலும், அது உடனடியாக உடல் நலத்தில் அமைப்பில் மாறுதல்கள் ஏற்படுத்துவதிலும் உடல் நலக்குறைவை காலப்போக்கில் ஏற்படுத்துவதிலும் இருக்கிறது. இதன் படி இரண்டாம் கட்ட தொடர்பு சிந்தனையில் அந்த காரணிகள் பழகிவிட , அவனுடைய அணுகுமுறை மாறுகிறது. எடுத்துக்காட்டாக அலுவலகம் செல்லும் சாலையில் சீரமைக்கும் பணி நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். முதல் நாள் கால தாமதம் ஆகும் போது அவனுக்கு சினமும் விரக்தியும் தோன்றும். ஆனால் இரண்டு நாளில் மனம் அதை எதிர்நோக்கி, சீக்கிரம் கிளம்பியோ அல்லது வேறுபாதையோ தேர்ந்தெடுத்து பயணிப்பதையோஅல்லது அந்த தாமதத்திற்கோ பழகிவிடும் போது அந்த காரணி குறித்து விரக்தி ஏற்படுவதில்லை.

இதே போல சுற்றுப்புர மாற்றம் ஒரு தகைவை ஏற்படுத்தும் என்றால் அதன் விளைவுகளால் வரக்கூடிய நன்மையை எதிர்பார்த்து மனம் அதை வரவேற்க தொடங்கிவிடுகிறது. உதாரணமாக, ஒருவர் அலுவலகத்தில் புகை பிடிக்க கூடாது என்ற தடை இருப்பின், ஆரம்பத்தில் புகை படிக்கும் பழக்கம் உள்ள ஒருவருக்கு அது கஷ்டமாக இருக்கும். ஆனால் போக போக அதனால் வரும் நன்மைகள், மற்ற ஊழியர்களின் உடல் நலம் போன்றவை அதை பெரிதாக எண்ணி டென்ஷன் ஆகாமல் ஏற்றுக்கொள்ள செய்கிறது. தகைவை சமாளிப்பதில் மூவகை உண்டு.

பிரச்சினை பொறுத்து சமாளிப்பது: அலுவலகத்தில் ஒரு திட்டம் தீட்டும் பணியில் அதிக தகைவு ஏற்படுத்தும் என்றால் அதை அந்த பிரச்சினையை தீர்ப்பதும், அதன் கால வரையறையை நீட்டிப்பதும், இன்னும் அதிக ஊழியர்களின் உதவியை நாடுவதாலும் சமாளிக்க முடியும்.

உணர்ச்சி பூர்வமாக சமாளிப்பது:  இந்த முறையில் ஒரு தகைவை உருவாக்கும் காரணிகளின் தன்மையை மாறுபட்ட முறையில் சிந்திப்பது, மனத்தை தளர்த்திக்கொள்வது, இன்னும் அலுவலக ஊழியர்கள் மற்றும் நண்பர்களிடம் இதை பற்றி பேசி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளல் போன்றவை அடங்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பணியை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கும் என்றால், முடியாது என்று சினம் கொள்வதை விட்டு, எப்படி இருந்தாலும் நான் தான் செய்ய வேண்டும். அதை சீக்கிரம் முடித்து விட்டு இரண்டு நாள் ஓய்வு எடுத்து குடும்பத்தோடு சந்தோஷமாக கழிக்கலாம் என்று எண்ணுவதும், அலுவலக நண்பர்களிடையே பேசுவதும் (vent it out), வார்த்தைகளில் கொட்டி ஆறுவதும் தகைவை குறைக்கும்.

பொருள் பூர்வமான சமாளிப்பு:  இது நேர்மறையான உணர்ச்சிகளை ஏர்படுத்தும். ஒரு காரணியை ஒத்துக்கொண்டு ஏற்று கொள்வதும், நேர்மறையான விளக்கங்கள் கொள்வதும் அதன் உண்மையான விளைவை அறிவதும் இத்தகைய சமாளிப்புக்கு தேவை. இதுவே உடல் நலனில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாமல் நன்மை பயக்கும். இவை அனைத்தையும் தவிர சிரிக்க பழகிக்கொண்டால் அதுவே தகைவை குறைக்க பெரும் அளவில் வழி செய்யும். இடுக்கண் வருங்கால் நகுக என்பது நாம் அறிந்த ஒ ன்றுதானே.

இது நாள் வரை தகைவை குறைக்கும் வழிமுறைகள் கண்டோம். இனி ஒரு தீய பழக்கம் என்று நாம் நினைப்பதை (அவரவர் கருதும் தீய பழக்கம் என்பது வேறு வேறு. சிலருக்கு சோம்பல், இன்னும் சிலருக்கு அடிக்கடி உண்பது, சிலருக்கு மது அருந்துவது, சிலருக்கு தள்ளி போடுவது ) எப்படி ஒரு சமுதாய கூட்டு முயற்சியில் மாற்றுவது (Social learning) என்பதை பார்ப்போம்.

மேலே கூறியவற்றை விவரமாக படிக்க:

1. Anstel MH an wells B: The journal of social psychological, 2000, 140(4) 434-450
2. Britton PC:Addiction research and theory, 2000,12(2), 103-114
3. Chesney M.A, Chambers DB, Taylor Jm, Johnson LM, and Folkman S: Psychosomatic Medicine,2003 ,  Nov-Dec, 65, 6, 1038-46
4. Glanz K,Rimer Bk,Lewis FM: health behavior and health education 3rd edition, 2002. 210-239, 269-273
5. Kennedy P, Duff J, EvanS M, Beedie A: British J of Clinical Psychology, 2003 42, 41-52

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |