ஜூன் 23 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முச்சந்தி
சிறுகதை
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
இசையோவியம்
அறிவிப்பு
கவிதை
திரைவிமர்சனம்
கவிதை
அடடே !!
நையாண்டி
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இசையோவியம் : திருவாசகம் சிம்பொனி
- பாலாஜி ஸ்ரீனிவாசன் (bb)
| Printable version | URL |

இதோ, அதோ என்று இரண்டு மூன்று வருடங்களாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த திருவாசகம் சிம்பொனி வெளிவரப்போகிறது. அடுத்த வாரம். இசைஞானி இளையராஜாவின் சிறந்த, புதுமையான, அவர் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு செய்த இந்த இசை ஆல்பம் அடுத்த வாரம் நம் கைகளில் கிடைத்துவிடும்.

திருவாசகத்தில் சிம்பொனி என்பது பல வருடங்களாக இணையத்தில் பேசப்பட்டு வரும் ஒரு முயற்சி. இளையராஜாவும், இதன் பின்னணியில் முக்கிய சக்தியாக இருந்த பேரா.ஜகத் காஸ்பரும் ஆரம்பித்தார்கள் என்றாலும், இது சாத்தியமானது இணையத்திலுள்ள இசைஞானியின் ரசிகர்கள் மூலமாகத் தான். ராஜா, இதற்கு ஒரு தனி ஆள் மூலமாகவோ ஒரு கம்பெனி மூலமாகவோ நிதி திரட்டாமல், பொதுமக்களிடமிருந்து வந்து அவர்களுக்காக இசையை உருவாக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. சோனி நிறுவனம் மூலமாகவோ அல்லது திரையுலக மக்களின் பணத்திலோ இந்த ஆல்பம் எளிதில் உருவாகியிருக்கலாம். ஓரிரண்டு வருடங்கள் முன்பே வெளிவந்திருக்கலாம். ஆனால், இப்படி எல்லாருடைய கவனம் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.

இந்த மாதிரி மக்கள் பணத்தைத் திரட்டி ஒரு கலைப்படைப்பை உருவாக்கியதற்கான உதாரணங்கள் வெகு சிலவே. ஜான் ஆபிரகாம் ("அக்ரகாரத்தில் கழுதை") மக்கள் பணத்தில் படமெடுக்க முனைந்தார். இன்றைய சினிமா ஆர்வலர்களால் சிறந்த இயக்குனராகவும் ஒரு புரட்சிக்காரராகவும் கருதப்படுகிற ஜான் அபிரகாம், 'ஓடேசா' இயக்கத்தின் மூலமாக மக்களுக்குத் தரமான படங்களை எடுக்க முனைந்தார். அவருடைய 'அம்மா அறியான்' இப்படி வந்ததுதான். விநியோகஸ்தர்களால் புறக்கணிக்கப்பட்டாலும் grass roots organizations மூலமாக இந்தப் படம் அதிக வசூலைப் பெற்றுத் தந்தது. இப்போது 'பச்சை மனிதன்' என்று ஒரு படத்தை
உருவாக்கப் பார்க்கிறார்கள் சிலர் (இதிலும் ஏதோ கணக்கு வழக்கு தில்லுமுல்லு இருக்கிறது என்று செய்தி).

இணையத்தில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் திருவாசகம் பற்றி எழுதி, ஒரு இயக்கத்தை உருவாக்கி, இணையத்தின் மூலமே இந்த முயற்சிக்கான பணத்தை சேகரித்தார்கள் இளையராஜாவின் ரசிகர்கள். ஒரே சிந்தனையோடு எத்தனை வித மாறு கருத்துக்கள் வந்தாலும் இந்தப் பணியைத் தொடர்ந்து நடத்திக் காட்டிவிட்டனர் சங்கர் குமார் மற்றும் அவரது குழுவினர். இந்த முயற்சி வெற்றி பெற்றால் இதுபோன்ற வியாபார சாத்தியமில்லாத கலைப்படைப்புகள் வெளிவர ஒரு உந்துதலாக இருக்கும். ஆனால், கணக்குகளை இன்னும் எல்லாருக்கும் தெரியும்படி நிர்வகிக்க வேண்டும். யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள், என்ன செலவானது, நடுவில் ஏதாவது சுரண்டல் இருந்ததா என்று இந்த முயற்சியில் நம்மால் கணிக்கவே இயலவில்லை. பலரும் அதனால் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். நடுவில், லாபம் இலங்கைத் தமிழர் நிறுவனங்களுக்கு சென்று சேரும் என்று கூறப்பட்டது. பிறகு, சுனாமி நிவாரணத்திற்கு போகும் என்று கூறப்பட்டது. ஒரு வித தெளிவு இல்லாமலே இந்த முயற்சி நடந்தது.

முதலில் திருவாசகம் ஒரு சிம்பொனி என்று சொல்லப்பட்டாலும் இப்போது இது ஒரு ஆரட்டோரியோ என்று தெரிய வருகிறது. ஆரட்டோரியோ வடிவத்தில் ஒரு ஆன்மீக படைப்பு வருவது சகஜம்தான். ஆரட்டோரியோக்கள் பைபிளின் பகுதிகளையும், கிறித்துவ கதைகளையும் தாங்கி வந்திருக்கின்றன. இதுவரை சிறந்த
ஆரட்டோரியோவாகக் கருதப்படுவது, ஹான்டெலின் மெஸாய்யா (Messaiah). நான் கேட்டவரை, ஆரட்டோரியோக்களின் கரு ஹெவியாக இருக்கும். சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கும். அந்த வகையில் திருவாசகத்தை இந்த வடிவில் கொடுத்திருப்பது தகுந்ததாகப் படுகிறது.

திருவாசகத்தின் சில பகுதிகளை எடுத்து, ராஜாவும் பவதாரிணியும் குழுவினரும் பாடியிருக்கின்றனர். ஹங்கேரியின் ஆர்கெஸ்டிரா குழுவினர் இசைஞானியின் நோட்ஸ¤களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். நம் கலாச்சார இசையையும் மேற்கத்திய இசையையும் இணைந்து ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று அதைக் கேட்ட சுஜாதாவும் பிறரும் கூறுகின்றனர்.

திருவாசகம் பற்றிய தகவல்கள் தெளிவாக வராத நிலையில் பேசப்பட்ட விஷயம், ராஜா, கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு புது எழுத்து வடிவம் (Notation) கொண்டு வந்திருக்கிறார் என்று. நம் இசையை அறிந்த எவருக்கும் புலப்பட்டிருக்கும், எழுத்து வடிவில் எளிதில் கொண்டு வர முடியாத இசை இது. மேற்கத்திய கிளாஸிகல் இசையில் இசையமைப்பாளரால் தான் நினைத்ததை நொட்டேஷனில் கொண்டு வர முடியும். நம் சங்கீதத்தில் கமகங்களையோ பிற நுணுக்கங்களையோ எழுதிக்காட்ட முடியாது. அதை ராஜா இந்தப்பணிக்காக செய்திருக்கிறார் என்று முதலில் பேச்சு இருந்தது. இப்போது அதைப் பற்றி ஒரு செய்தியும் இல்லை. நிஜமாகவே ஒரு நொட்டேஷனை ராஜா உருவாக்கியிருந்தால் அதுவே ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

ஜூன் 30-ஆம் நாள் சென்னையில் மியூஸிக் அகாடமியில் திருவாசகத்தை வெளியிடப்போகிறார்கள். வாழ்த்துக்களும் புகழுரைகளும் வழக்கம்போல இருக்கும் (வெளிவராத இளையராஜாவின் சிம்பொனிக்கே அவருக்கு மிகப் பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது. மேஸ்ட்ரோ பட்டமும்(!) வழங்கப்பட்டது). என்னைப் பொறுத்தவரை, இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. பாரதிராஜாவும் கமல்ஹாசனும் அவரை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டிக்கொள்ளட்டும். ஆனால் சினிமா மூலம் கட்டுப்பட்டு இருந்த அவர், இது போன்ற ஆல்பங்களினால் வெளியாட்களிடமிருந்து பெறக்கூடிய புகழ் பெரிது. இணையத்தின் மூலம் அவர் இசையை பரப்ப அவர் ரசிகர்கள் பல முயற்சிகள் இதுவரை எடுத்து வந்தாலும், அவை தோல்விகளாகவே வாய்த்தன. திருவாசகம் போன்ற ஆல்பங்களின் மூலமாக, நாளை இந்திய இசை என்றால் ரவிசங்கர் மட்டும் ஞாபகம் வராமல் இளையராஜாவும் ஞாபகம் வந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றியாகும். ஆனால், அதற்கு ஒரு மார்க்கெடிங் நிறுவனமும் தொழில் முறை நுணுக்கங்களுடன் விளையாடும் சாதுர்யமும் கொண்ட ஒரு உந்துதல் தேவை. இளையராஜாவுக்கு அது போல் இன்னும் அமையாதது சோகமே. இனியாவது அமைந்தால் மகிழ்ச்சி.

மேலும் விவரங்களுக்கு: http://www.tis-usa.com/

You can purchase this CD from  DVDUnlimited

http://www.dvdunlimitedonline.com

Receive 5% - 10% OFF (See store for details)

* DVDUnlimited is a volunteer for Thiruvasakam project - working with us on a non-profit basis, distributing TIS in NY/NJ/CT area and also selling through their online site.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |