ஜூன் 24 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
மேட்ச் பிக்சிங்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
பெண்ணோவியம்
வானவில்
உங்க.. சில புதிர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  க. கண்டுக்கொண்டேன் : என்ன கொழுப்பா ?
  - ரமா சங்கரன்
  | Printable version |

  சிங்கப்பூரிலிருந்து  ஆண்களும் பெண்களும்   இம்மாதம்  (12, ஜூன்) மலேசியாவின் மேற்கே உள்ள குவாண்டான் மாநிலத்திற்கு சைக்கிள் சவாரி புறப்பட்டனர். மொத்தம் 26 பேர். கிட்டத்தட்ட 500 கிமீ பயணம்.   இச்செய்தியில் என்ன புதுமை? இவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் என்ன? இவர்கள் தொடர்ந்து சைக்கிள் விட்டால் இவர்கள் உடம்பில் சர்க்கரையின் அளவு குறையும். இவர்களைக் கண்காணிக்க உடன் சைக்கிளில் நான்கு மருத்துவர்களும் செல்கின்றனர். இப்படி சைக்கிளில் செல்ல காரணம் என்ன? உள்ளூரில் வசதிக் குறைந்த நீரிழிவு நோயாளிகளுக்காக இவர்கள் இரண்டு லட்சம் சிங்கப்பூர் டாலர்களை நிதியாகத் திரட்டப்போகிறார்கள். சிங்கப்பூரில் இப்போது மூன்று லட்சம் பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலகில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட நாடுகளை அவற்றின் மக்கள்தொகையின் அடிப்படையில்   பார்க்கும்போது சிங்கப்பூர் நான்காவது இடத்தைப் பிடிக்கிறது.

  நான் நேற்று சிங்கப்பூரின் தமிழ்  ரேடியோவான 'ஒலி 96.8FM' கேட்கும்போது,  இந்தியாவில் தற்போது 1.9 கோடி மக்கள் சர்க்கரை வியாதியால் அவதியுறுவதாகவும் இது வரும் ஆண்டுகளில் ஐந்து கோடிக்கு மேல் போகலாம் என்றும் அது  தெரிவித்தது. ஆசியாவில் சில ஆண்டுகளாக  எயிட்ஸ் பற்றிய பரபரப்பான செய்திகளைப் படித்து வந்தோம். "இந்த செய்தியை நீங்கள் படித்து முடிக்கும் போது உலகில் நான்கு பேர் எயிட்ஸ் நோயால் பீடிக்கப்படுகின்றனர்" என்று ஈராண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை  வெளியிட்டது டைம்ஸ் இதழ். இப்போது ஆசியாவெங்கும் மெளனமான ஆட்கொல்லி நோயாக பரவி வருகிறது நீரிழிவு நோய் என்று  இதே பாணியில் பத்திரிகைகள் பலவும் செய்தி வெளியிட்டு வருகின்றன. உலகில் ஆசியாவில் மட்டும் இன்னும் பத்து ஆண்டுகளில் 140 மில்லியன் மக்களுக்கு சர்க்கரை வியாதி வரும்  என்று மெல்பர்னில் உள்ள அகில உலக நீரிழிவு நோய் சங்கம்  தெரிவித்துள்ளது. இதனால்  உலக மக்கள் தொகையில்  நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் ஆசியர்கள்  61%  ஆக உயர்வார்கள் என்று இச்சங்கம் எச்சரிக்கிறது.

  சிங்கப்பூரில் சுகாதார அமைச்சு சர்க்கரை வியாதியைத் தடுக்க பல   எச்சரிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஐந்தில் வராதது ஐம்பதில் வருமா? என்பதை சுகாதார அமைச்சு நம்புகிறது. 1990கள் தொடங்கி  பள்ளிகளில் விற்கப்படும் சுவை நீர் பானங்களின் சர்க்கரை அளவை கண்காணித்து வருகிறது. சுகாதார அமைச்சின் 'ஸ்கூல் ஹெல்த்' பிரிவு செயல்பட்டு வருகிறது. தொடக்க நிலைப் பள்ளிகளில் "தண்ணீர் நாள்" என சில வாரநாட்களை அமுல்படுத்தியிருக்கிறது. இந்த நாட்களில் பள்ளிகளில் பிள்ளைகள் தண்ணீர் மட்டுமே அருந்தமுடியும். வீட்டிலிருந்தும் இந்த நாட்களில் தண்ணீர் மட்டும்தான் மாணவர்கள் கொண்டு செல்லலாம். பள்ளிகளில் ஐஸ் தண்ணீரை வழங்கும் மெஷின்களின் எண்ணிக்கையும் அமைச்சால் நிர்ணயிக்கப்பட்டு அமைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பாலர் பள்ளி மட்டும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு என்ன மாதிரி பால்கள் விற்கப்பட வேண்டும் என்பதையும் சுகாதாரம், கிடைக்கும் சத்துக்கள், தயாரிப்பு முறைகளின் அடிப்படையில் அமைச்சு தீர்மானிக்கிறது. அங்கீகாரமும் வழங்குகிறது.

  சர்க்கரை வியாதியின் மூலகாரணங்களில் ஒன்றான அதிகப்படி உடற்கொழுப்பை பள்ளி பருவந்தொட்டுக்  கட்டுப்படுத்த  பல உடற்பயிற்சி முறைகள், உணவுக்கட்டுபாடுகள், ஆலோசனைகள், மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. "Step with it" - என்பது சிங்கப்பூரில் நான்கு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டம். இதைப் பற்றிய செய்தியைக் காட்டியது சானல் நியூஸ் தொலைக்காட்சி. இதில்   பெய் டோ ங் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கால்களை மாற்றி மாற்றி அடிக்க  பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார் உடற்பயிற்சி ஆசிரியை குமாரி திலா நடராஜன். உடற்பயிற்சி வகுப்பில் மாணவர்கள் அரைமணியில் 500 அடிகள் வைப்பதாகக் கணக்கிட்டார் 'ஸ்டெப்போமீட்டர்' என்னும் கருவியால். மாணவர்கள்  ஆறு மாதங்களில் 10,000 அடிகள் வைக்க வேண்டும் என்பது அவரின் இலக்கு. சிங்கப்பூர் பள்ளிகளில் மாணவர்கள் உடற்கொழுப்பால் அவதியுறுவதை முன்னெச்சரிக்கையாகத்  தடுக்கவே இத்திட்டம்.  சிங்கப்பூரில்  10% பள்ளி மாணாக்கர்கள் அதிக உடற்கொழுப்பால் அவதியுறுகின்றனர்.   நோய்க்கு ஆளாகின்றனர். உடற்பருமனுக்கும் உடற்கொழுப்பிற்கும் வித்தியாசம் உள்ளது. உடற்பருமன் என்பது அதிக எடையால் ஏற்படுவது. தேவைக்கு அதிகமான  அதிக உடல் கொழுப்பு "Obesity". உடற்கொழுப்பால்  ஆண்டுக்கு 200 மாணவர்கள் மருத்துவரிடம் செல்கின்றனர். இவர்களில் கால்வாசிப் பேருக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற அபாயங்கள் வர வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் இன்று உடற்கொழுப்பும்(400.000 பேர்)  சிகரெட் புகைப்பதும்( 35000 பேர் கூடுதல்) மனிதர்களைக் கொல்வதில் ஒன்றுடன் ஒன்று  போட்டியிடுகிறது. உடற்கொழுப்பு மிக அதிக அளவில் சர்க்கரை வியாதியையும் இருதய நோயையும் உண்டாக்குகிறது என்று அமெரிக்காவின் நோய்கள் தடுப்பு மையம் கூறுகிறது.

  பெண்களின் வீட்டு வேலை செய்யும் நேரம் குறைந்து விட்டது என்பதும் அதிகப்படி உடற்கொழுப்பிற்கு இது  ஒரு காரணமாகி விட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நான்கு மணி நேரம் மட்டுமே வேலை செய்கின்றனர் அமெரிக்கப் பெண்கள். இந்தப்  பெண்களின் விகிதாச்சாரம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்போது பல மடங்கு கூடி விட்டது. அமெரிக்கர்களின் செல்வவளத்தை உடற் கொழுப்பிற்கு காரணமாக எடுத்துக்காட்டிப் பேசக்கூடாது என்ற வாதங்களும் நிலவுகின்றன. ஏனென்றால் புதிய செல்வந்தர்கள் உருவெடுத்து வரும் சீனா, இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் உடற்கொழுப்பு மிகுந்து வருகிறது. எனவே   பணக்காரர்களை மட்டும்  பார்த்து " கொழுப்புப் பிடித்தவர்கள்" என்று சொல்வது இப்போது பொருந்தாது.

  இன்று உலகில் கார்கள், ஆடைகள், உணவுகள், பான வகைகள், மின்சார சாதனங்கள், அழகு சாதனங்களின் வகைகள் பல நூறு வகைகளில் கிடைக்கிறது. " The Paradox of Choice: Why more is less." என்னும் புத்தகத்தை எழுதிய மனோதத்துவ நிபுணரான Barry Schwartz தம் புத்தகத்தில் 250 காலையுணவு சிரியல் வகைகளும் 220 கார் மாடல்களும் இன்று இருப்பதாக கூறுகிறார். நம்  தேவைகள் அதிகரித்து விட்டதால் இது நல்லதுதானே! என்று நாம் நினைத்தாலும் நல்ல, தரமானப்  பொருளைத் தேடிக் கண்டுபிடிப்பது  ஜனசமுத்திரத்தில் நம் வீட்டு மனிதரை தேடிக் கண்டுபிடிப்பது போல ஆகிவிட்டது. இதில் நிறைய நேரமும் செலவழிகிறது. நாம் தேர்ந்தெடுத்திருப்பது நல்ல சாய்ஸ்தானா? என்ற சந்தேகமும் வருகிறது. வெறும் சாமான்களைத் தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நடந்தால் பரவாயில்லை. அதை மாற்றிக் கொண்டு விடலாம். ஆனால் வேலைகளைத் தேர்ந்தெடுப்பது, செய்யும் பணிக்கு ஏற்ப குடும்பத்தை அமைத்துக் கொள்வது- இவற்றில் தவறுகள் நடந்தால் அது நம் மனநிலையை பாதிக்கும் எனத் தம் புத்தகத்தில்  ஷ்வார்ட்ஸ்  கூறுகிறார்.

  பணக்காரத்தனத்தால்  அல்லது ஷ்வார்ட்ஸ் சொன்னதுபோல  எதை விடுவது ?  எதை வாங்குவது? என்பதால் வந்த உடற்கொழுப்பு எந்த ஒரு  நாட்டின் பொருளியல்  வளர்ச்சியையும்  பாதிக்காது. எதிர்காலத்தில் இதுவே பணக்கார நாடுகளை அடையாளம் காட்டும் குறீயீடாகக் கூட ஆகலாம்.  ஆனால் உடற்கொழுப்பு நம்  உடலுக்குள் வரவிருக்கும் சர்க்கரை வியாதி போன்றவற்றைக் காட்டும் சத்தமில்லாத  எச்சரிக்கை ஒலி. அது தனிமனிதனின் உடல், உயிர், மனம் ஆகியவற்றை பலிவாங்கும் சக்தி படைத்தது என்பதுதான் உண்மை. எனவே வறுமை கொடுமை. வசதியும் வளமும் அதனினும் கொடுமை என்பது இப்போது புதுமொழி.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |