ஜூன் 24 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
மேட்ச் பிக்சிங்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
பெண்ணோவியம்
வானவில்
உங்க.. சில புதிர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திரையோவியம் : மானஸ்தன்
  - மீனா
  | Printable version |

  ' ஆங்கில மற்றும் வேறு மொழிப் படக்கதைகளைத் தழுவி படம் எடுத்தது போதும்.. பழைய தமிழ் படங்களையே கொஞ்சம் ரீமேக் செய்து பார்த்தால் என்ன?' என்ற எண்ணம் சரத்திற்கும் இயக்குனருக்கும் வந்ததன் விளைவே மானஸ்தன். படிக்காத மேதை கதையைக் கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார்கள். அவ்வளவே!!

  அநியாயத்திற்கு ஜாதி வித்தியாசம் பார்க்கும் விஜயகுமாரின் மகன் சரத். சரத்தின் தம்பி கல்லூரியில் படிக்கும் அப்பாஸ். அம்மா சுஜாதா. முறைப் பெண் சாக்ஷி. அருமையான குடும்பமாக ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறார்கள். விஜயகுமாரின் அண்ணன் காகா ராதாகிருஷ்ணனுக்கு மன்சூர் அலிகான் உள்பட மூன்று மகன்கள். மூவருமே வில்லன்கள். சொத்துத் தகராரில் மகன்களுக்கு விஜயகுமாரையும் சரத்தையும் பிடிக்காமல் போய்விட, காகா மட்டும் தொடர்ந்து தம்பி மீதும், தம்பி குடும்பத்தின் மீதும் அன்பு செலுத்திவருகிறார்.

  மகன் சரத்தின் மீது பாசத்தைப் பொழியும் தந்தையாக இருக்கும் விஜயகுமார் திடீரென்று அவரை கண்மண் தெரியாத அளவிற்கு வெறுக்கிறார். கொலை செய்யும் அளவிற்குப் போகிறார். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று சுஜாதாவும் சரத்தும் கேட்கும் போது,  சரத் தன் மகனே அல்ல என்ற உண்மையை இறக்கும் நிலையில் சுஜாதாவின் தாயார் சுகுமாரி தன்னிடம் கூறியதை அம்மாவிற்கும் - மகனிற்கும் கூறுகிறார் விஜயகுமார்.
  உண்மை தெரிந்த சரத், வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

  இந்நிலையில் சரத்தின் பூர்வீகம் பற்றி அறிந்துகொண்ட சாக்ஷியின் அண்ணன் அவரை சரத்திற்குத் திருமணம் செய்து வைக்க மறுத்துவிடுகிறார். அத்தோடு நிற்காமல், மன்சூர் அலிகானுக்கு சாக்ஷியைத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்கிறார். இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத சாக்ஷி பூச்சி மருந்தைக் குடித்து இறந்துவிடுகிறார். நடந்தது எதுவும் தெரியாமல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பும் அப்பாஸ், தன் தந்தை சரத்திடம் நடந்துகொண்ட விதத்தை அறிந்து மனம் கொதிக்கிறார். அப்பா - மகன் உறவே வேண்டாம் என்று உதறிவிட்டு சரத்தைத் தேடிப் போகிறார். இதற்கிடையே சுஜாதாவின் வார்த்தைகளால் மனம் மாறும் விஜயகுமார், சரத்தை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவர முடிவு செய்கிறார். சரத் மீண்டும் அக்குடும்பத்தில் இணைந்தாரா என்பது கிளைமாக்ஸ்..

  படத்தைத் தூண்போலத் தாங்கிப் பிடித்திருப்பவர் சரத். சந்தேகமே இல்லாத அருமையான நடிப்பு. சாக்ஷியுடனான அளவான காதல் - அம்மா, அப்பா, தம்பி இவர்களுடன் அருமையான வாழ்க்கை வாழும் கட்டங்களிலும், தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப் பட்டாலும் தன் வீட்டு வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் இடங்களிலும், சாக்க்ஷியை இழந்து பரிதவிக்கும் நிலையிலும் - எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார்போல கிளைமாக்ஸிலும் விதம் விதமான உணர்வுகளைக் காட்டி அருமையாக நடித்திருக்கிறார் சரத்.

  தன் நண்பர்கள் தன்னைப் பார்க்கவரும் தன் அண்ணன் சரத்தைக் கேலி செய்வதைக் கண்டு பொங்கும் காட்சியிலும், தந்தைக்கு எதிராக - சரத்திற்கு ஆதரவாக பேசும் காட்சியிலிம் அருமையாக நடித்திருக்கிறார் அப்பாஸ். சமீபகாலத்தில் அப்பாஸிடம் காணத நடிப்பை இப்படம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

  ஹீரோயின் என்றாலே பொம்மை மாதிரி வந்து போவார் - கொஞ்சம் காதல் காட்சிகள் - 2 டூயட் அவ்வளவே என்ற நிலை கொஞ்சம் மாறி இந்தப் படத்தில் கொஞ்சம் நடித்தும் இருக்கிறார் சாக்க்ஷி. ' மாமா.. மாமா..' வென்று சரத்துடன் அவர் முகத்தைப் பார்க்காமலேயே இழையும் சீன்களில் அட்டகாசம். விஷம் குடித்து இறக்கும் போது கண்களில் கண்ணீரை வரவழைக்கும் விதமாக சாக்ஷியின் ஆக்டிங் சூப்பர்.

  காரணமே இல்லாமல் ஜாதி வெறி பிடித்து அலையும் அப்பாவாக விஜயகுமார். அவருக்கு ஏன் அந்த அளவிற்கு ஜாதி மீது பற்றுதல் என்பதை விவரிக்க இயக்குனர் மறந்துவிட்டார். தேவையற்ற வெறுப்பாகவே தோன்றுகிறது. அதேபோல பெற்ற மகனாக நினைத்து வளர்த்த சரத்தை தனக்குப் பிறந்தவர் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்யும் அளவிற்கு எந்தத் தந்தையாவது போவாரா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

  பாசமான அம்மாவாக சுஜாதா - அவ்வளவே. படத்தில் வடிவேலு இருக்கிறார். ஆனால் காமெடியைத் தான் காணோம். மன்சூர் அலிகான் அண்ட் கோவின் அரதப் பழசான வில்லத் தனம் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

  பாடல் - ஒளிப்பதிவு உள்ளிட்ட டெக்னிகல் விஷயங்களும் ரொம்பவே சுமார் தான். இந்தப் படத்திற்கு இதுவே போதும் என்ற எண்ணம் போலும். சரத், அப்பாஸ், சாக்ஷி உள்ளிட்டோர் அருமையாக நடித்திருந்தாலும் - சாரி.. இப்படிப்பட்ட கதையையும் நடிப்பையும் நாங்க ரொம்ப நாளைக்கு முன்னாடியே பார்த்துட்டோம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |