ஜூன் 24 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
மேட்ச் பிக்சிங்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
பெண்ணோவியம்
வானவில்
உங்க.. சில புதிர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : அரசன் சேரன்
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 21

  வளம் மிகுந்த மாந்தை நகரத்தின் தலைவன் சேரன். அவனுடைய ஆட்சியில், எல்லோரும், எல்லா நலன்களும் பெற்று சந்தோஷமாய் வாழ்கிறார்கள்.

  ஆனால், இந்தப் பெண்ணுக்குமட்டும் ஒரு பெரிய மனக்கவலை !

  அந்தக் கவலைக்குக் காரணம், அரசன் சேரன்தான் !

  அவன்மேல் காதல் கொண்டவள் இந்தப் பெண், இப்போது அவனைச் சேரும் வழியறியாமல் தவிக்கிறாள்.

  இவளுடைய பிரச்சனையை அறிந்த ஒரு தோழி, இவளை அணைத்து ஆறுதல் சொல்கிறாள் !

  'நெற்றியில் திலகம் ஒளிவிடும் என் தோழியே, நமக்கு ஒரு பிரச்சனை என்றால், நமக்கு ஒரு மனக்குறை தோன்றினால், நாம் அதை நம்முடைய மன்னனிடம்தான் சொல்லவேண்டும் ! அதுதான் இந்த உலகத்தின் வழக்கம் !', என்கிறாள்.

  'அவன் இந்த நாட்டுக்கு அரசனாக இருக்கலாம், ஆனால், அவனுடைய ஆட்சியில் வாழும் ஒரு பெண் அவனை அணுகி, தன்னுடைய பிரச்சனையைச் சொல்லும்போது, அதைத் தீர்த்துவைக்கவேண்டியது அவனுடைய கடமை !', என்று வலியுறுத்துகிறாள் அவள் !

  இப்படிப் பலவிதமான ஆறுதல் மொழிகளைப் பேசி, தொடர்ந்து அழுதுகொண்டிருக்கும் அந்தக் காதலியின் கண்ணீரைத் துடைத்து, 'தோழி, நீ என்னோடு புறப்படு, நாம் அரசன் சேரனிடம் சென்று, நம்முடைய மனக்குறையை எடுத்துச்சொல்லி, உன் காதலன் சேரனுடன் உன்னைச் சேர்த்துவைக்கும்படி அவனைக் கேட்போம் !', என்று நல்ல உபாயம் சொல்கிறாள் இந்த சிநேகிதி !


  மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக்(கு) ஆயினும்
  சொல்லவே வேண்டும் நமகுறை நல்ல
  திலகம் கிடந்த திருநுதலாய்; அஃதால்
  உலகம் கிடந்த இயல்பு.

  (மல்லல் - வளமை / செல்வம்
  கோ - அரசன்
  நமகுறை - நம் குறைகள்
  நுதல் - நெற்றி
  அஃதால் - அதுதான்
  உலகம் கிடந்த இயல்பு - உலக நடைமுறை)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |