ஜூன் 24 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
மேட்ச் பிக்சிங்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
பெண்ணோவியம்
வானவில்
உங்க.. சில புதிர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : உண்ணாவிரதம் ஒரு தவம்
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  பிரச்சினை ஏதாவது வரும்போது தொண்டர்களை உசுப்பிவிட்டு அவர்களை தவறான செயல்களை மேற்கொள்ளச் செய்துவிட்டு தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதாக சொல்லிக் கொள்வதுதான்  நம்மூர் அரசியல்வாதிகளின் பழக்கம். தொண்டர்களின் தவறான செய்கைகளுக்கு யாரும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு செயல்பட்டதாக சரித்திரம் சொல்லியதில்லை. பிரச்சினைகள் வரும்போதெல்லாம் சந்தோஷப்படும் தலைவர்களைத்தான் அதிகமாக நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தான் நேரில் பார்த்திராத, தனக்கு சம்பந்தமேயில்லாத மக்கள் தன்னுடைய பேச்சை மீறி செயல்பட்டதற்கு தன்னையே தண்டித்துக்கொண்ட ஒரு தலைவரை பார்த்த இந்தியாவின் ஆச்சரியம் இன்று வரை நீடிக்கிறது.  

  1924ம் வருஷம் இந்தியா முழுவதும் ஏற்பட்ட இந்து - முஸ்லீம் கலகங்களுக்கு பிராயச்சித்தமாக காந்திஜி 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
  உண்ணாவிரதம் ஒரு தவமும் பிரார்த்தனையும் போன்றது. உப்புடனோ, உப்பில்லாமலோ தண்ணீர் குடிக்கும் உரிமையை மட்டும் வைத்துக்கொள்கிறேன் என்கிற அறிவுப்புடன் செப்டம்பர் மாதம் 18ம் தேதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். உண்ணாவிரதம் ஆரம்பமான முதல் வாரத்தில் காரியதரிசி ஸ்ரீமகாதேவ தேசாய், மெளலானா ஷவுகத் அலியும் காந்திஜியுடன் நடைபெற்ற விவாதத்திலிருந்து....

  'பம்பாய், செளரிசெளரா சம்பவங்களின் காரணமாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் அர்த்தம் உங்களுக்கு புரிந்ததே... பின் ஏன் இந்த உண்ணாவிரதத்தின் அர்த்தம் உங்களுக்கு புரியவில்லை?'

  'அங்கே நீங்கள் ஏதோ குற்றம் செய்ததாக எண்ணி, அதற்கு பிராயச்சித்தமாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டீர்கள். அதுபோல் இங்கே ஒன்றும் காணோமோ!'

  'இல்லை. செளரி செளரா குற்றவாளிகள் என்னைப் பார்த்ததுமில்லை. என்னை அறிந்துகொண்டதுமில்லை. ஆனால். இன்றைய குற்றவாளிகள் என்னை அறிந்தவர்கள்.  அது மட்டுமல்ல என்னை நேசிப்பதாக சொல்லிக் கொள்ளுபவர்கள். எனவே எனக்கு அதிக பொறுப்பு உண்டு '

  'ஆனால், ஷவுகத் அலியும் முகமது அலியும் தம்மால் முடிந்தவரை இந்த கொந்தளிப்பை அடக்க முயற்சி செய்து வருகிறார்கள். சில மனிதர்கள் அவர்களுக்கும் உங்களுக்கும் உட்படாதவர்களாக இருக்கலாம். அவர்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள்தான் என்ன செய்வீர்கள்? காலம்தான் நிலைமையை சரி செய்தாக வேண்டும்'

  'அது வேறு. அவர்களால் முடிந்ததை அவர்களும் செய்திருக்கிறார்கள். அது எனக்கு நன்றாகவே தெரியும். ஆறுமாதங்களுக்குமுன் நம் கைக்குள் இருந்த நிலைமை இன்று எல்லை மீறிவிட்டது. யார் மனத்திலும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்காக இந்த உண்ணாவிரதத்தை நான் மேற்கொள்ளவில்லை. ஆனால், மறைமுகமாக அவர்களின் மனம் பாதிக்கப்படலாம்...'

  'அது சரி. பிராயச்சித்தத்திற்கு காரணமாக நீங்கள் செய்த குற்றம் எது என்பதுதான் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை...'

  'இந்துக்களுக்கு துரோகம் செய்ததாக நான் குற்றம் சாட்டப்படலாம். முஸ்லீம்களுடன் நட்புரிமை கொள்ளும்படி நான் அவர்களுக்கு சொன்னேன். தங்கள் உயிரையும் உடைமைகளையும் அவர்களுடைய புண்ணிய ஸ்தலங்களைங்களையும் பாதுகாக்க முஸ்லீம்களை அனுசரித்துப் போக சொன்னேன். பிரச்சினைகளை தீர்க்க பிறரை கொல்லாமல்ம தாங்களே சாகவும் அகிம்சையை அனுசரிக்கவும் இன்று கூட நான் அவர்களுக்கு சொல்வேன். ஆனால், நான் காணும் பயன் என்ன? எத்தனை கோவில்கள் அசுத்தப்பட்டிருக்கின்றன? எத்தனை சகோதரிகள் என்னிடம் முறையிடுகின்றனர்?  இந்துப் பெண்கள் முஸ்லீம் குண்டர்களை கண்டு நடுங்குகின்றனர். .......இடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அவருடைய சிறு குழந்தைகள் மானபங்கம் செய்யப்பட்ட விதத்தை நான் எப்படித் தாங்க முடியும்? பொறுமையுடன் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளுங்கள் என்று எப்படி
  நான் கேட்டுக் கொள்ள முடியும்?  பலனை எதிர்பார்க்காமல் அவர்களை நேசிக்கும்படி சொன்னேன். நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற எனக்கு
  சக்தியில்லை. யார் நான் சொல்வதைக் கேட்கிறார்கள்?' 

  '......அகிம்சை முறையை பற்றி சிந்திக்காமல் மக்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர நல்லுணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். காரணம் யார்? நானே முற்றிலும் அகிம்சை தர்மத்தை கைக்கொள்ளவில்லை. இதுதான் காரணம். நான் பூரண அகிம்சையை மேற்கொண்டிருந்தால், என்னைச் சுற்றி நிகழும் ஹிம்சையை பார்க்கும்படி நேர்ந்திருக்காது. ஆகவே, என் உண்ணாவிரதம் ஒரு தவமே. நான் ஒருவரையும் குறை சொல்ல மாட்டேன். என் மீதுதான் நான் குற்றம் சாட்டிக் கொள்வேன். மக்களை கேட்டுக்கொள்ளும் தகுதியை நான் இழந்து விட்டேன்'

  நன்றி  யங் இந்தியா 23.10.1924.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |