ஜூன் 24 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
மேட்ச் பிக்சிங்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
பெண்ணோவியம்
வானவில்
உங்க.. சில புதிர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  உங்க.. சில புதிர்கள் : ஆளுமைக் கோளாறுகள்
  - முத்துராமன்
  | Printable version |

  ஆளுமைக் கோளாறுகளுக்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. ஃபிராய்டு மனப்பகுப்பாய்வு முறையில் இவற்றை தற்காப்புக்காக செயல்படும் சில தவறான முறைகள் என்று குறிப்பிடுகிறார்.

  ஆளுமைக் கோளாறுகள் என்பது மிக அதிகமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றில் முக்கியமானவை மட்டும் இங்கு.

  சந்தேக மனப்பான்மை மிகுந்த ஆளுமைக் கோளாறு (Paranoid Personality Disorder)

  இப்படிப்பட்டவர்களை நாம் அடிக்கடி சந்தித்திருப்போம். இவர்கள் பொதுவாக பிறர் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். இவர்களிடம் எப்போதும் சந்தேகம் மிகுந்து காணப்படும். இவர்களிடம் காணப்படும் சில அறிகுறிகள்.

  > யார் மீதும் நம்பிக்கை இருக்காது.

  > தன்னை ஏமாற்றிவிடுவார்கள் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும்.

  > நண்பர்களாக இருந்தாலும், உறவினர்களாக இருந்தாலும் சந்தேகத்துடனே பழகுவார்கள்.

  > சின்ன தவறுகளுக்குக் கூட கற்பனையில் விபரீத காரனங்களைத் தேடும் மனம் கொண்டவர்கள்.

  > சந்தேகத்தைத் தெளிவுபடுத்தி நிரூபித்தாலும் அதையும் சந்தேகப்படும் மனம் கொண்டவர்கள்.

  > கோபமும் திருப்தியின்மையும் கொண்டவர்கள்.

  சமூகத்தில் பரவலாகக் காணப்படுபவர்கள். அவர்கள் தங்களுடைய வேலைகளை திறம்பட செய்யக்கூடியவர்கள். இவர்களைப் பார்க்க ஒரு நோயாளியைப் போல தோன்றமாட்டார்கள். இவர்கள் யாரையும் நம்ப மறுப்பதால் இவர்களிடம் ஆலோசனை கூறுவதும் பயனளிக்காது.

  இவர்களைப் போலவே இன்னொரு வகையினர் இருக்கின்றனர். அவர்கள்;

  ஒதுங்கி ஒடுங்கும் ஆளுமைக் கோளாறு (Schizoid Personality Disorder)

  இப்படிப்பட்டவர்கள் யாருடனும் சரியாகப் பழகமாட்டார்கள். இவர்களைப் பார்த்தால் திமிர் பிடித்தவர்கள் போலத் தோன்றும். இவர்கள் எதற்கும் கவலைப்படமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் பொதுவாக ஒதுங்கி இருக்க விரும்பக்கூடியவர்கள். பெரும்பாலும் போட்டியை விரும்பாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் உறவினர்கள் கூட நெருக்கமாகப் பழகிவிடமுடியாது.

  சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Anti-Social Personality Disorder)

  முதலில் இவர்களைத் தெரிந்து கொள்வதற்கான அறிகுறிகள் மட்டும். பிறகு, இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

  > தவறு செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால், குற்ற உணர்வில்லாதவர்களாக இருப்பார்கள். தவறுக்கு தண்டனை கொடுத்தாலும் மீண்டும் தவறு செய்யத் தயங்காதவர்கள்.  எதற்கும் பயப்படமாட்டார்கள்.

  > அவர்கள் செய்த தவறுக்காக அவர்களை நீங்கள் கடிந்து கொண்டாலும் உங்களிடம் பேசி அவர்கள் மீதான உங்கள் கோபத்தை மறக்கச் செய்துவிடுவார்கள்.

  > அடுத்தவர்களைப் பற்றிய கவலை இல்லாதவர்கள். எப்போதும் தன்னுடைய சந்தோஷம் மட்டுமே முக்கியமாக இருப்பார்கள்.

  > மிகுந்த அறிவுத்திறான் கொண்டவர்களாக இருந்தாலும், அதை சரியாக திட்டமிட்டு பயன்படுத்தும் எண்ணமில்லாதவர்கள்.

  > இவர்களைப் பொறுத்தவரை பதட்டம் என்பதே கிடையாது. இவர்கள் சோர்வடைந்தும் பார்க்கவே முடியாது.

  > முக்கியமாக செய்யும் தவறுக்கு வெட்கப்படமாட்டார்கள். ஆனால், இனிக்க இனிக்கப் பேசுவதில் இவர்களைப் போல் வேறு யாரும் இருக்க முடியாது.

  இவர்களையும் நாம் அடிக்கடி சந்தித்திருக்க முடியும். இதன் ஆரம்ப நிலை என்பது பள்ளிப் பருவம்தான். பள்ளிப் பருவத்திலேயே இவர்களை அடையாளம் காண முடியும். பொய் சொல்வது. மற்றவர்கள் பொருளை எடுத்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது, இந்த நிலை மாறிப் போய் சொந்த வீட்டுக்குள்ளேயே திருடுவது, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பொய் சொல்வது - இப்படித்தான் ஆரம்பிக்கும் இந்த வகையான ஆளுமைக் கோளாறு.

  பெண்களை விட ஆண்களுக்கே இந்த வகையான ஆளுமைக் கோளாறு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 15 வயதிற்குள் ஒருவனுக்கு இந்த ஆளுமைக் கோளாறு ஏற்பட்டுவிடுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு அந்த நேரத்திலேயே கண்டுபிடித்து கண்டிப்பது ஒன்றே சரியான தீர்வாக இருக்கும்.

  சரி, இதெல்லாம் இருக்கட்டும். Raymond Cattell என்ன சொல்கிறார் தெரியுமா?

  கேள்விப் பட்டியல்கள் மூலமாகவும், நேரடியாக உற்று நோக்குவதன் மூலமாகவும் ஒருவனுடைய வாழ்க்கை முறையினைக் கொண்டும் அவனுடைய ஆளுமைப் பண்புகளைக் கண்டறியலாம் என்று சொல்கிறார். அவர் சொல்லியிருக்கும் ஆளுமைப் பண்புகளைக் கண்டறிவதற்கு 16 அடிப்படையான காரணிகளைக் கொடுத்திருக்கிறார்.

  அவர் கொடுத்திருக்கும் இத்தகைய காரணிகளே ஆளுமைப் பண்புகளுக்குக் காரணமாகின்றன.

  அவர் சொல்லியிருக்கும் அந்த 16 வகையான ஆளுமைக் காரணிகள்

  1. தனியாக தனித்திருத்தல்  - வெளி உலகுடன் கொண்டிருக்கும் தொடர்பு
  2. திடமான சிந்தனை  - சுருக்கமான சிந்தனை
  3. எளிதில் உணர்ச்சிவசப்படல் - நிலையான மனவெழுச்சி
  4. அடங்கிப் போதல்  - அடக்கி ஆளுதல்
  5. சிரத்தையுடன் இருத்தல் - கவலையின்றி ஜாலியாக இருத்தல்
  6. சூழலுக்குத்தக்க செயல்படுதல் - மனசாட்சிக்கு ஏற்ப செயல்படுதல்
  7. கூச்சப்படுதல்   - தைரிய உணர்வு
  8. பாறை போன்ற உள்ளம்  - நெகிழ்ந்து போதல்
  9. நம்புகின்ற தன்மை  - சந்தேக குணம் கொண்டிருத்தல்
  10. நடைமுறை சாத்தியங்களுக்கு உட்பட்டவர்  - கற்பனைச் சிறகை விரித்துப் பறப்பவர்
  11. நேர்மையான நிலை - புத்திசாலித்தனமான நிலை
  12. உறுதியான மனம் படைத்தவர் - பயம் கொள்ளக்கூடிய வகையினர்
  13. பழைமை விரும்பியாக இருப்பவர் - தேர்ந்தெடுத்து ஆய்வு செய்துவிடுபவர்
  14. குழுவினைச் சார்ந்திருப்பவர்  - சுய சார்பு கொண்டவர்
  15. ஒழுக்கமின்மை   - சுயகட்டுப்பாடு
  16. நிதானம் கொண்டவராக இருத்தல்  - படபடப்பு மிகுந்தவர்

  ஒரு மனிதனுடைய முக்கியமான ஆளுமைப் பண்புகளும், தன்மைகளும் இவை சார்ந்தே செயல்படுகின்றன.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |