ஜுன் 29 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : திரு. இல.கணேசனுடன் ஒரு நேர்காணல்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

அய்யப்பனின் சன்னிதானத்தில் யாரும் அய்யப்பனின் சிலையை தொட முடியாது. இந்தப் பிரச்சினையில் அரசியல் பின்னனி உள்ளதா? இதில் சதி திட்டம் நடந்துள்ளதா என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் இல.கணேசன் மதுரையில் கட்சி நிகழ்ச்சியிலும், பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மதுரை வந்தார். மதுரையில் வைத்து அவரிடம் பதிவு செய்யப்பட்ட நேர்காணல் :


தமிழோவியம் :- ஒட்டு மொத்த இந்திய அளவில் பாரதீய ஜனதா கட்சியின் செல்வாக்கு குறைந்து வருகிறது என்று சொல்லப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில் :- அப்படி எல்லாம் இல்லை. இந்திய அளவில் பாரதீய ஜனதா கட்சி பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. ஒரு சில பத்திரிக்கைகள், மற்றும் தொலைக்காட்சிகள் தான் அப்படி செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இன்றைய காங்கிரஸ் தலைமையிலான அரசு மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்து வருகிறது. அந்த வகையில் பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி அபாரமாகத் தான் இருக்கிறது. அதனை இனி வரும் காலங்களில் ஆணித்தரமாக நாங்கள் நிருபிக்கும் வகையில் செயல்படுவோம். இன்றைய சாதாரண மக்கள் தங்களது வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் க~;டப்படுகிறார்கள். அதற்குக் காரணம் விலைவாசிகள் பெருமளவு உயர்ந்து விட்டது. மக்கள் பாரதீய ஜனதா கட்சியின் தன்மையை உணரத் துவங்கி விட்டார்கள்.

தமிழோவியம் :- காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தனது முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்யும் என நம்புகிறீர்களா?

பதில் :- இந்த மன்மோகன் சிங்  அரசு தனது முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தான் எனது எண்ணம். ஆனால் இந்த அரசு செயல்படுவதைப் பார்க்கும் பொழுது மனனன்மோகன் சிங் பிரதமராக செயல்படுவது நமக்கெல்லாம் நல்லதற்கு இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். இந்த அரசு விரைவில் வீட்டுக்கு அனுப்பப் பட வேண்டிய அரசு.

தமிழோவியம் :- தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வியடைய என்ன காரணம்?

பதில் :- நாங்கள் தோல்வி அடைந்தாலும் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குக்களை பெற்றுள்ளோம். எங்களின் தனிப்பலத்தை அறிய முடிந்தது. ஒரு நல்ல கூட்டணியில் பாரதீய ஜனதா இல்லாததால் தான் எங்களின் கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அரசியல் கட்சிக்கு வெற்றியும், தோல்வியும் சர்வசாதாரணம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

Ila Ganesanதமிழோவியம் :- உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு பேசப்படுவதாக சொல்லப்படுகிறதே உண்மையா?

பதில் :- நடிகர் விஜயகாந்த் கட்சியோடு கூட்டணி வைப்பது பற்றி நாங்கள் யோசிக்கவில்லை.

தமிழோவியம் :- இந்துக்களின் புனித தலமான சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண் ஒருவர் நுழைந்து விட்டார் என்று சொல்லப்படும் சர்ச்சை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் ஆண்களின் திருத்தலம் என்று வர்ணிக்கப்படும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வணங்கினார் என்பதை நான் ஒரு சதியாகவே பார்க்கிறேன். அப்படி அந்தப் பெண் வழிபாடு நடத்தி இருந்தால் அது அன்றைக்கே பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இன்று ஏன் திடீரென்று பிரச்சினையை கிளப்பகிறார்கள் என்பது தான் எங்களின் கேள்வி. பிரபலமான இளம் பெண் ஒருவர் அய்யப்பனின் சன்னிதானத்தில் நுழைந்ததாக உன்னிக்கிருஷ்ணண் பணிக்கர் கூறி இருக்கிறார். அவர் பிரபலமானவர் என்று அவர் கூறியிருப்பது சந்தேகத்திற்குரிய ஒன்று. உடனே ஒரு பெண் தான் தான் விக்கிரகிரகத்தை தொட்டு வழிபாடு நடத்தினேன் என்றும் அறிவிப்பு செய்கிறார். அய்யப்பனின் சன்னிதானத்தில் யாரும் அய்யப்பனின் சிலையை தொட முடியாது. இந்தப் பிரச்சினையில் அரசியல் பின்னனி உள்ளதா? இதில் சதி திட்டம் நடந்துள்ளதா என்பதை கண்டு பிடிக்க வேண்டும். சிலர் பணத்துக்காக, புகழுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு இந்து மத்தை திட்டமிட்டே சீர்குலைக்கும் வேலையாகவே இதனை கருதுகிறோம்.

தமிழோவியம் :- திட்டமிட்ட சதியாக எப்படி பார்க்குறீர்கள்?

பதில் :- ஆசியாவில் மத மாற்றத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று போப் ஆண்டவர் சமீபத்தில் கூறி இருக்கிறார். இதன் பின்னனியில் தான் அமர்நாத் பனி லிங்கம் பிரச்சினை, அய்யப்பன் சன்னிதானத்தில் பெண் நுழைந்ததாக சொல்லப்படும் சம்பவம் இருக்கும் என நாங்கள் சொல்கிறோம். இந்து மதத்தின் நம்பிக்கைகளை தகர்க்கும் வகையில் இங்கு சம்பவங்கள் நடக்கின்றன.

தமிழோவியம் :- தமிழ் நாட்டில் தி.மு.க. தலைமையிலான அரசு நிலைத்து இருக்கும் என்று நம்புகிறீர்களா?

பதில் :- தி.மு.க.தலைமையிலான இந்தக் அரசு நிலைத்து இருக்கும் என்று தான் நான் நம்புகிறேன். ஏன் என்றால் அக்கூட்டணியின் முக்கிய கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி மத்தியில் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அதே போல காங்கிரஸ் அரசு நீடிக்க தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதனால் இந்த அரசு நிலைத்து இருக்கும் என்று நான் சொல்லக் கொள்கிறேன்.

தமிழோவியம் :- தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகள், பேச்சுக்கள் இங்கு ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. மூன்றாவது அணி இன்றைய காலக்கட்டத்தில் தேவை தானா?

பதில் :- மத்தியில் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை, இருக்காது. மூன்றாவது அணியை சில அரசியல் தலைவர்கள் உருவாக்கினாலும் அந்த அணி எவ்வளவு தூரம் வெற்றி அடையும் என்பது கேள்விக் குறி தான். இன்றைக்கு மத்திய அரசிற்கு ஆதரவு அளிக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தான் மூன்றாவது அணி பற்றி பேசுகிறார்கள். இவர்கள் தான் இன்றைய ஆட்சியில் அங்கம் வகிக்காமலேயே அதிகமான சலுகைகளை பெற்று அனுபவிக்கிறார்கள். ஆனால் மக்கள் மத்தியல் தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள மத்திய அரசை எதிர்ப்பது போலவும், மாற்று அணி அமைய வேண்டும் என்றும் பேசி வருகின்றனர். இதனை மக்கள் உணர்ந்து தான் இருக்கிறார்கள்.

தமிழோவியம் :- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரிய விடுதலைப்புலிகளை மன்னிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் சொல்லி இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- ராஜீவ் காந்தி கொலையாளிகளை சோனியாகாந்தி மன்னித்துள்ளார். ஆனால் அவர் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ராஜீவ் கொலையாளிகளை இந்தியர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் சோனியா மட்டும் எப்படி மன்னித்தார்?

தமிழோவியம் :- இலங்கையில் இந்தியா தலையிட வேண்டுமா?

பதில் :- கண்டிப்பாக தலையிட வேண்டும். இலங்கைப் பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினையே அல்ல. ஆனால் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் பொழுது, அவர்களை என்று இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டார்களோ, அன்றைக்கே அது நமது பிரச்சினையாகி விட்டது. அதனால் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்கும். இந்திய மீனவர்களும் பயம் இல்லாமல் மீன் பிடிக்க முடியும்.

தமிழோவியம் :- தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் ஆர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- இந்தத் திட்டத்தை பாரதீய ஜனதா கட்சி உட்பட இந்து மத அமைப்புக்கள் வரவேற்றுள்ளன. இந்து மத ஒற்றுமையை வலுப்படுத்த இது உதவும். அனைத்து சாதியினரையும் அhச்சகராக்கும் திட்ட செயல் படுத்த அமைக்கப்பட்ட அமைப்பு ஒரு தலைபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும். மத நம்பிக்கை உள்ள அனைவரையும் கலந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அப்பொழுது தான் இத்திட்டத்தின் நோக்கம் வெற்றி அடையும்.

| |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |