ஜூன் 30 2005
தராசு
வ..வ..வம்பு
டெலிவுட்
முச்சந்தி
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
அறிவிப்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
ஹாலிவுட் படங்கள்
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
கவிதை
துணுக்கு
அடடே !!
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : சமுதாய கூட்டுக் கல்வி (Social learning theory)
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

சமுதாய கூட்டு கல்வி ஒரு சமுதாய தொடர்புடைய கல்வி முறையை வழிப்படுத்துகின்றது. இம்முறை மக்கள் ஒருவரிலிருந்து மற்றொருவர் தம் சொந்த முயற்சியாலேயே கற்றுக்கொள்வர் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. பல உளவியல் அறிவியலார் இதை பற்றி கருத்து தெரிவித்திருந்தாலும் அல்பர்ட் பந்துரா என்பவருடைய ஆராய்ச்சிகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த சமுதாய கல்வி என்ன சொல்கிறது என்பதை கீழ்க்கண்ட சில கருத்துக்கள் தெளிவாக்குகின்றன.

1. மக்கள் அடுத்தவருடைய பழக்கங்களை பார்த்து தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்கிறார்கள். இல்லையெனில் அவற்றால் வரக்கூடிய விளைவுகளை பார்த்து கற்று கொள்கிறார்கள்.

2.  கற்றுக்கொள்வது பழக்கங்களில் மாற்றங்களை அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அடுத்தவரை பார்த்துக் கற்று கொள்வது உடனடியாக பழக்க மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம். எப்போது தேவையோ அப்போது அந்த ஆற்றல் வெளிப்படும்.

3.  மூளியின் புரிதல் இதற்கு அவசியம். கடந்த 30 வருடங்களாக இந்த சமுதாய கல்வியின் புதிய பல பரிணாமங்கள் தெளிவுபட ஆரம்பித்திருக்கின்றன. ஒரு பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளுதலும் அது விளைவிக்க கூடிய நல்ல அல்லது தீய விளைவுகளை பற்றியும் தெரிந்து கொள்ளல் ஒரு மனிதனுடைய பழக்கத்தில் சில மாற்றங்களை விளைவிக்கிறது. உதாரணமாக வேகமாக சாலையில் வாகனம் செலுத்திய ஒருவனை காவலர் ஒ ரம் கட்டி அபராதம் விதிப்பதை கண்டால் நாமும் நமது வேகத்தை குறைக்கிறோம். இல்லையெனில் வேகம் பற்றிய அறிவிப்புகள் இருப்பினும், காவலர் இல்லை எனில் பலர் வேகத்தை குறைப்பதில்லை.

4. அறிவுசார்ந்த கல்விமுறைக்கும் பழகங்களை சார்ந்த கல்விமுறைக்கும் இடையே ஒரு பாலம் போல் சமுதாய  கல்விமுறை அமைகிறது.

இந்த கல்விமுறையை சுற்றுபுர சூழல் எவ்வாறு கட்டு படுத்துகிறது?

1. நாம் அடிப்படையில் அடுத்தவருடைய பழக்க வழக்கங்களை பார்த்து தெரிந்து கொள்கிறோம். வீடுகளில் சிறிய குழந்தை தன்னுடைய மூத்த சகோதரனோ அல்லது சகோதரியையோ பார்த்து கற்று கொள்கிறது. இதை போல வாழும் சூழ்நிலையும் நமது பழக்கத்தை கட்டு படுத்த, மாற்ற எத்தனிக்கிறது. கவனிப்பவர் ஒரு முன்மாதிரியால் ஈர்க்க படுகிறார். உதாரணமாக புதிதாக சேர்ந்த மாணவன் தன் உடை அணியும் பழக்கத்தை மற்றவர்களைப்போல மாற்றி கொண்டு அந்த குழுவில் இடம் பிடிப்பது.

2. கவனிப்பவர் ஒரு மூன்றாம் மனிதனால் பரிந்துரைக்க படுகிறார்: உதாரணமாக நன்றாக படிக்கும் ஒரு மாணவனை போல இன்னொரு மாணவன் தன் பழக்கங்களை மாற்றி முறையே பாடங்களை செய்தால் ஆசிரியர் பாராட்டுவதும் அந்த பாராட்டுக்கள் ஒரு ஊக்கமாகவும் அமைவதும் ஆகும்.

3. சில சமயங்களில் நாம் கற்று கொள்ளும் பழக்கமே நமக்கு ஊக்கத்தை தரும். நாம் ஒரு மனிதன் தினமும் மாடிப்படியேறி மின்வண்டி (elevator) உபயோகிக்காமல் செல்வதை கண்டு, படியேற ஆரம்பித்தோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். சில நாட்களில் நமது எடை குறைந்தது தெரியும் என்றால் அதுவே மேலும் இப்பழக்கத்தை தொடர உற்சாகம் தரும். அதைக் கவனிக்கும் இன்னொருவர் அந்த பழக்கத்தை தொடர முன்வருவார்.

4. சில சமயங்களில் ஒரு முன்மாதிரி பழக்கம் அதிக பாராட்டை பெறும் என்று வைத்துக்கொள்வோம். அதை கவனிப்பவர் தன்னாலே அந்த பழக்கத்தை இன்னும் அதிகமாக கடை பிடிப்பார். உதாரணமாக ஒரு வேடிக்கை காட்டுபவன் ஒரு கோமாளியின் பலூனை அடிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு அதற்கு ஊதியம் கிடைக்கும். ஆனால் அதை பார்க்கும் குழந்தைகள் மனதில் தோன்றும் மகிழ்ச்சி அவர்களை அந்த காரியத்தை செய்ய ஊக்குவைக்கும்.

நவீன சமுதாய கல்வி முறை ஊக்க படுத்துதல், அல்லது தண்டனை விதித்தல் இரண்டும் கற்பதனை மறைமுகமாக அன்றி, நேர்முகமாக பாதிப்பதில்லை என்று கூறுகிறது. ஊக்கமும் தண்டனையும் ஒரு மனிதனை பாதிக்கிறது அ   தன் விளைவாகவே அவன் தன் பழக்கங்களை மாற்றிக்கொள்கிறான்.ஊக்கம் ஒரு மனிதனின் அறிவுசார்ந்த கற்கும் ஆற்றலை தூண்டுகிறது. அந்த தூண்டுதல் அவன் கற்பதற்கும் அதன் அடிப்படியில் தன் பழக்கங்களை மாற்றி கொள்ளவும் வகை செய்கின்றன. ஒரு ஆசிரியை வகுப்பில் மாணவர்களிடம் அடுத்து கற்க போவது தேர்வில் கேட்க பட மாட்டது என்று சொல்லிவிட்டால் மாணவர்களின் கவனம் குறைந்து விடும். இங்கே மாணவர்கள் தாங்களாக அல்லது பாடத்தின் சுவாரஸ்யத்தை கொண்டோ தங்கள் கவனத்தை குறைத்துக் கொள்வதில்லை. மாறாக அ  து தேர்விற்கு வ ராது என்ற ஆசிரியையின் சொல்லே கவன க்குறைபிற்கு காரணம்.

அறிவு சார்ந்த சில எண்ணங்கள் சமுதாய கல்வியை எப்படி பாதிக்கிறது?

சமுதாய கல்வி கற்றல் பழக்கங்களின் தன்மை, அறிவு சார்ந்த சில எண்ணங்கள் இவை இரண்டையும் பிரதிபலிக்கின்றது.

1. செயல் படுத்தாமல் கற்பது ( Learning without Performance): பந்துரா ஒருவன் கவனிப்பதையும் அதன் பின் அதை பிரதிபலிப்பதையும் வேறு வேறாக பிரித்துள்ளார்.

2. கவனித்தல் கற்றலின் முதல் தேவை, இன்றியமையாததும் கூட. ஒரு புதிய பழக்கத்தை கற்கும் போது கூர்ந்து ஒருமுகப்படுத்திய கவனம் வேண்டும்.

3. எதிர்பார்ப்புகள்: மீண்டும் ஒரு பழக்கத்தில் மாற்றம் வலியுறுத்தப்படும் போது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. இதனால் அவர்கள் மனதில் ஒருவித எதிர்பார்ப்புகளை பட்டியிலிடுகிறார்கள். சில பழக்கங்கள் நல்லதையும் சில தீயவற்றையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். கற்றுக்கொள்கிறவர் எந்த பழக்கம் பாராட்டையும், எந்த பழக்கம் தண்டனையும் கொண்டு வரும் என்பதையும் அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

4. விளைவுகளின் விகிதம் (Reciprocal causation): பந்துரா ஒரு பழக்கத்தில் வரும் மாற்றம் சுற்றுப்புர சூழ்நிலையையும் மனிதனையும் ஒரே சமயத்தில் பாதிக்கலாம் என்று கூறுகிறார். உண்மையில் மனிதன், அவனுடைய பழக்கம், சுற்றுப்புரம் ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று பாதிக்கின்றன. உதாரணமாக புகை பிடிப்பதை ஒரு மனிதன் குறைத்து கொண்டால், அது அவனுடைய உடல் நலத்தை பேணுகிறது. சுற்றுபுர சூழலின் மாசினன குறைத்து மேலும் அவன் நலத்தை இன்னும் அதிகமாக பேணுகிறது.

5. முன்மாதிரிகள் ( Model): பலவகை முன்மாதிரிகள் உண்டு. உதாரணமாக ஒரு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதனோ அல்லது இறந்து போன மனிதனோ ஒரு முன்மாதிரியாகி தன் பழக்கங்களை வலியுறுத்தலாம். தந்தை சொல் கேட்டு கானகம் சென்ற இராமனை போல இருக்க வேண்டும் என்று பிள்ளைகளுக்கு இராமனை உதாரணம் காட்டுவது போல் காவிய நாயகன் கூட முன் மாதிரியாகலாம்.

6. இன்னொருவகை குறிப்புகளால் முன்மாதிரி காட்டுவது (Symbolic) : உதாரணமாக தொலைகாட்சியில் இந்த பொருளை பயன் படுத்தினால் வளர்ச்சி அடையலாம் என்று சொல்வதை போல.

முன்மாதிரிகள் கவனித்து குழந்தைகள் கற்று கொள்வதால் தான் பெற்றோருக்கு தாங்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. முன்மாதிரிகளை உருவாக்கும் சூழல், அதன் தேவைகளை வரும் வாரம் பார்ப்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |