ஜூலை 1 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
வானவில்
காந்தீய விழுமியங்கள்
உங்க. சில புதிர்கள்
பருந்துப் பார்வை
பெண்ணோவியம்
முத்தொள்ளாயிரம்
கலைஞருக்கு ஒரு கடிதம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  தராசு : தனஞ்சய் தலை தப்பலாமா?
  - மீனா
  | Printable version |

  14 வயது பள்ளி மாணவியைக் கற்பழித்து, கொலை செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கும் தனஞ்சய் சட்டர்ஜி, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளான் - தன்னுடைய மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி.. இதற்கு நம் ஜனாதிபதி என்ன முடிவு எடுக்கப்போகிறாரோ ? அது தெரியாது. ஆனால் தனஞ்சய் போன்ற மனித மிருகங்கள் இவ்வுலகில் வாழ எந்தத் தகுதியுமே இல்லாதவர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

  மன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பு போன்றவைகள் அவரவர் செய்யும் குற்றங்களையும், அக்குற்றங்கள் நிகழக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் மனதில் கொண்டு தீர்மானிக்கப்படவேண்டியவை. அதற்காகவே நம் நாட்டில் பல மட்டங்களில் நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. ஆனால், பள்ளி மாணவியை தன் ஆசை வெறியைத் தீர்த்துக் கொள்ள வேண்டி கொடூரமாக கற்பழித்துவிட்டு, கொலையும் செய்த தனஞ்சய் போன்றவர்கள் இத்தகைய மன்னிப்பிற்கு லாயக்கற்றவர்கள். 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்திற்கு எல்லா கோர்டுகளிலும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கப்பட்டு கடந்த 25 ஆம் தேதி தூக்கில் தொங்கியிருக்க வேண்டிய இந்தக் கயவன், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய காரணத்தால் இன்னமும் இவ்வுலகில் வாழ்ந்து வருகிறான்.

  மரணத்திற்கு மரணம் ஈடாகாது.. மரண தண்டனை அளிப்பதால் மட்டும் குற்றவாளிகள் என்ன பயப்படப்போகிறார்களா? சட்டம் ஒழுங்கு எல்லாம் சரியாகிவிடுமா? என்று பலர் எதிர் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாலும் - மனமறிந்து இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எல்லாம் மரண தண்டனை ஒன்றே சரியான தீர்ப்பு. கற்பழிப்பு - அதிலும் சின்னஞ்சிறு சிறுமியை கற்பழித்துக் கொலை செய்யும் மனித மிருகங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லாமல் நீதிமன்றங்களும், ஜனாதிபதியும் மரண தண்டனை அளிக்க வேண்டும்.

  இன்று ஒரு தனஞ்சய்க்கு ஜனாதிபதி கருணை காட்டினால் நாளை இதையே சாக்காக வைத்து, பலரும் பலவிதமான கொடூரச் செயல்களைச் செய்துவிட்டு, அப்பாவி முகத்துடன் அனைத்து கோர்ட்டுகளிலும் அப்பீல் செய்து பார்த்துவிட்டு - ஒன்றும் பலிக்கவில்லை என்றால் ஜனாதிபதிக்கு கருணை மனு கொடுத்துவிட்டு நிம்மதியாக ஜெயிலில் தங்கள் காலத்தைக் கடத்திக்கொண்டிருப்பார்கள். ஏன் ஆஸ்திரேலியப் பாதரியாரையும் அவர் குடும்பத்தையும் தீ வைத்துக் கொளுத்திய தாராசிங்கும் ஜனாதிபதியிடம் மனு போடுவான் - தன் தலை தப்பிக்க..

  ஜனாதிபதிக்கு நம் வேண்டுகோள் இதுதான் - தனஞ்சய்யின் வெறியாட்டம் அனைத்து நீதிமன்றங்களிலும் நிரூபிக்கப்பட்டு, ஒருமனதாக மரண தண்டனை கிடைத்தாகிவிட்டது. இதைத் தாங்கள் தயவு செய்து மாற்றவேண்டாம் - உங்கள் முடிவைத் தீர்மானிக்கும் முன்பு கொலை செய்யப்பட்ட அந்தசிறுமியையும், இந்த வழக்கில் தாங்கள் வழங்கப்போகும் தீர்பையே சாக்காக வைத்து கருணை மனு போடக் காத்திருக்கும் கயவர் கூட்டத்தையும் சற்று சிந்தித்துப்பாருங்கள். தவறான ஒரு முன்னுதாரணத்தைத் தாங்கள் ஏற்படுத்தவேண்டாம். நாங்கள் அனுப்பும் இந்த மனுவைப் பரிசீலனை செய்வீர்களா ?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |