ஜூலை 1 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
வானவில்
காந்தீய விழுமியங்கள்
உங்க. சில புதிர்கள்
பருந்துப் பார்வை
பெண்ணோவியம்
முத்தொள்ளாயிரம்
கலைஞருக்கு ஒரு கடிதம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பெண்ணோவியம் : முதுகு வலி
  - மீனா
  | Printable version |

  சமீப காலங்களில்  பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் முதுகு வலி முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது. வீட்டிலிருக்கும் பெண்கள், அலுவலகம் போகும் பெண்கள் என வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் வாட்டி வதைக்கும் இந்நோய்க்கான காரணங்களையும் இதற்கான

  சிகிச்சைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்..

  * உடலுக்கு எந்த வேலையையுமே கொடுக்காத பெண்களுக்கு முதுகுவலி வரும் வாய்ப்புகள் அதிகமாம்.

  * உடல் எடை அதிகாரிக்கும் போதும் முதுகு வலி வரலாம். கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு முதுகு வலி வருவதும் இதனால்தான்.

  * மெனோபாஸ் காலத்தில் பெண்களது உடலில் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். அதனாலும் முதுகுவலி வரலாம்.

  * உடலமைப்பிற்கும், முதுகு வலிக் கும் எந்தத் தொடர்புமில்லை. முதுகு வலி என்பது குண்டான, ஒல்லியான, உயரமான, குட்டையான என எல்லாப்   பெண்களுக்கும் வரலாம்.

  * ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்போருக்கும் முதுகு வலி வரலாம். எனவே அப்படிப் பட்ட வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி எழுந்து   நிற்கவோ, நடக்கவோ வேண்டும்.

  * படுக்கும் போதும் அடிக்கடி திரும்பிப் படுக்க வேண்டும். ஒரே மாதிரித் துரிங்கக் கூடாது.

  இனி சிகிச்சைகள்

  * நிற்கும் போது உடலின் எடையை இரு கால்களும் சம அளவு தாங்கியிருக்கும் படி நிற்க வேண்டும். பைசா கோபுரம் கணக்கில் சாய்ந்து நிற்கும்   வேலை வேண்டாம்.

  * உட்காரும் போது முதுகுப் பகுதிக்கு சப்போர்ட் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னால் குஷன் வைத்த தலையணை வைத்துக்   கொள்ளலாம்.

  * கீழே விழுந்த எதையாவது எடுக்க வேண்டுமானால் அப்படியே வளைந்து குனியாமல், உட்கார்ந்து முதுகை வளைக்காமல் எடுக்கவும்.

  * ஏற்கனவே முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவரானால், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்கவும்.

  * அதிக எடையுள்ள பொருட்களைத் துரிக்க வேண்டாம். கொஞ்சம் எடை அதிகமான பொருளைக்கூட வயிற்றுக்கு மேல் உயர்த்தித் தூக்க   வேண்டாம்.

  * மருத்துவாரின் ஆலோசனையின்றி எந்த உடற்பயிற்சியையும் செய்ய வேண்டாம்.

  * முதுகு வலி இருப்பவர்கள் நிற்கும் போது முழங்கால்களை டைட்டாக வைத்துக் கொள்ளாமல், தளர்வாக வைத்துக் கொள்வது நல்லது.

  * ஹை ஹீல்ஸ் செருப்பு மற்றும் ஷூக் களைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். எப்போதாவது அணிந்து கொள்ளலாமே தவிர தினம் கூடாது.   தவிர அதை அணிந்து கொண்டு நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ கூடாது.

  * நீச்சல் பயிற்சி செய்யலாம். மற்றபடி டென்னிஸ், ஏரோபிக்ஸ் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

  * மல்லாக்கப் படுத்துத் துரிங்குவதே நல்லது. குப்புறப் படுத்துத் துரிங்குவது முதுகு வலிக்கு வழி செய்வதோடு, உங்கள் முகத் தசைகளையும் சீக்கிரமே   முதுமையாக்கி விடும்.

  * ரொம்பவும் மெத்தென்று இருக்கும் படுக்கையில் படுக்க வேண்டாம். கடினமான படுக்கையே நல்லது. அதுதான் முதுகுக்கு இதமளிக்கும். மென்மை யான படுக்கையில் படுத்தால், முதுகின் அடிப்பகுதி அதிகம் பாதிக்கப்படும்.

  * தலைக்குக் கூடியவரை எதுவுமே இல்லாமல் துரிங்கலாம். முடியாத பட்சத்தில் மிக மெல்லிய தலையணை போதும்.

  * திடீரென குனிவது, உடலைத் திருப்புவது போன்ற ஏடாகூடமான அசைவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |