ஜூலை 8 2004
தராசு
வேர்கள்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
வானவில்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
பெண்ணோவியம்
க. கண்டுக்கொண்டேன்
உங்க. சில புதிர்கள்
கடிதங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  தராசு : அமெரிக்காவும் அதிபர் புஷ்ஷும்
  - மீனா
  | Printable version |

  கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக ஈராக்கில் நடந்து வந்த அமெரிக்க ஆட்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. சொன்ன கெடு முடிய 2 நாட்கள் இருக்கும்போதே ஆட்சியைத் தூக்கி ஈராக்கிய மக்கள் கையில் கொடுத்த அமெரிக்காவை அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். ஆனால் அதற்குப் பின்னால் நடந்த திரை மறைவு வேலைகளை, பத்திரிக்கைகள் இப்பொழுதுதான் வெளிச்சம் போட்டுக் காட்ட ஆரம்பித்துள்ளன.

  பாக்தாத் நகரில் இருந்த அணு ஆயுதக் கிடங்கிலிருந்து 1.8 டன் எடையுள்ள யுரேனியத்தை, அமெரிக்கா ஆட்சியை ஒப்படைப்பதற்கு 5 நாட்கள் முன்னதாக ஐ.நா உள்ளிட்ட எந்த அமைப்பிற்கும் தெரியப்படுத்தாமல் தங்கள் நாட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளது. ஐ.நாவின் அனுமதியைப் பெறாமல் அணு ஆயுதப் பொருட்களை எடுத்துச் செல்வது சட்ட விரோதமானது என்று ஒரு சில அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பி வந்தாலும், அவை எல்லாம் அமெரிக்காவின் காதுகளில் விழவேயில்லை.

  இந்த நிலையில், சதாமுக்கும், அல்-கொய்தா அமைப்பிற்கும் இருந்த நெருங்கியத் தொடர்பே ஈராக் மீது படையெடுத்ததற்கான முக்கிய காரணம் என்று அதிபர் புஷ் கூறி வந்தாலும், அதற்கு முற்றிலும் மாறான கருத்தை செப்டம்பர் 11 தாக்குதல் குறித்து விசாரித்துவரும் விசாரணைக்கமிஷன் வெளியிட்டுள்ளது. அதில் மிகத் தெளிவாக சதாமுக்கும் அல்கொய்தா அமைப்பிற்கும் செப்.11 தாக்குதலுக்கு முன்பாக நெருங்கியத் தொடர்பு ஏதுமில்லை என்று வெளியிட்டுள்ளது.

  ஆக, அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்ததன் மூல காரணமாக குறிப்பிட்ட வாதத்தையே அமெரிக்க விசாரணைக் கமிஷன் தவிடு பொடியாக்கியிருக்கிறது. மேலும் அமெரிக்கா எதற்காக ஈராக் மீது படையெடுத்தது என்பதை இன்னமும் உறுதி செய்யும் வகையில் மேற்கூறிய யுரேனிய பதுக்கல் வேறு ! இதையெல்லாம் அதிபர் புஷ் நிச்சயம் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்றாலும், இப்போரால் விளைந்த அனர்த்தங்கள்தான் எத்தனை? ஈராகில் இன்று பெருகியிருக்கும் தீவிரவாத செயல்களுக்கு அமெரிக்கா தான் காரணம் என்ற கூற்று முற்றிலும் சரியே! மொத்தத்தில் தீவிரவாதிகளை அழிப்பதாக சொல்லிக்கொண்டே தீவிரவாதிகளை உருவாகும் உன்னதப் பணியைத்தான் அமெரிக்கா செய்து வருகிறது.

  அதிபர் புஷ் மற்றும் அவரது சகாக்களின் செயல்களால் இன்று ஒட்டுமொத்த தீவிரவாதிகளின் கோரப்பார்வை அமெரிக்காவின் மீது படிந்துள்ளது. தீவிரவாதிகளின் வெறியாட்டங்களுக்கு பலியாகப்போவது அப்பாவி மக்களே அன்றி அதிபர் அல்ல. ஆட்சியாளர்களின் சொந்த நலனுக்காக, மக்கள் கணக்கின்றி சொந்த நாட்டிலும் அந்நிய நாட்டிலும்  பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.

  கடந்த 4 வருடங்களாக மந்த நிலையில் இருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை சீரமைக்கும் வழிவகைகளைப் பார்க்காமல் புஷ் அரசு போரிலேயே கவனம் செலுத்தி வருகிறது. இதை அமெரிக்க மக்களே பரவலாக எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். தன் முதுகில் வண்டி அழுக்கை வைத்துக்கொண்டு அடுத்தவனின் அழுக்கைப் பற்றி பேசும் செயலை அமெரிக்க அதிபர் என்று மாற்றிக்கொள்ளப்போகிறாரோ அன்று தான் அமெரிக்கா மீண்டும் உலக அரங்கில் உண்மையான கெளரவத்தைப் பெறும்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |