ஜூலை 8 2004
தராசு
வேர்கள்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
வானவில்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
பெண்ணோவியம்
க. கண்டுக்கொண்டேன்
உங்க. சில புதிர்கள்
கடிதங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  வேர்கள் : வெடிக்காய் வியாபாரம் - 2
  - ஹரிகிருஷ்ணன்
  | Printable version |

  பாரதி இப்படிச் சொன்னார் அப்படிச் செய்தார் என்று சொல்பவர்கள் ஒருபுறம் இருக்கட்டும்.  ஆயுதக் கலாசாரத்தைப் பற்றி பாரதி என்ன நினைத்தான்?   அவன் எழுத்துக்களை விடவும் வலிமையான ஆதாரம் வேறென்ன இருக்க முடியும்?  அவன் எழுத்தின் அடிப்படையில் பயங்கரவாதத்தையும், வெடிகுண்டு கலாசாரத்தையும் அவன் ஏற்றானா என்பதை ஆய்வோம். 

  வாஞ்சிநாதனை நாமறிவோம்.  கலெக்டர் ஆஷ்துரையைக் கொலை செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இளைஞர் குழுவின் தலைவராயிருந்த நீலகண்ட பிரம்மச்சா¡¢, பாரதி விஜயா பத்தி¡¢க்கையில் ஆசி¡¢யராகப் பணியாற்றியபோது, துணையாசி¡¢யராகப் பணியாற்றியவர்.  வாஞ்சிநாதனுக்குப் புதுச்சோ¢ கரடிக்குப்பத்தில் துப்பாக்கிப் பயிற்சி அளித்த வ.வே.சு. ஐயர், பாரதியின் நெருங்கிய நண்பர்.  ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1911-ல் சிறைத் தண்டனை அனுபவித்த திரு. கே. ஆர். அப்பாதுரை,  பாரதியின் மைத்துனர்.  இவ்வளவு நெருங்கியவர்கள் சம்பந்தப்பட்ட இந்தக் கொலையைப் பற்றி பாரதி என்ன சொல்கிறான்?

  இத்தகையதொரு நிகழ்ச்சி இரண்டாம் முறையாக நடைபெறாதது சென்னை ராஜதானிக்குப் பெருமை சேர்ப்பதாகும் என்றும்,  சென்னை ராஜதானியில் பயங்கரவாதக் குழந்தை இறந்தே பிறந்தது என்றும் திருப்தி தொ¢விக்கிறான்.  கணவனும் மனைவியுமாக (பாரதியின் மொழியில் பார்வதி பரமேஸ்வரர்களைப் போல) கலெக்டர் ஆஷ¤ம் அவன் மனைவியும் விடுமுறைக்காகச் சென்றுகொண்டிருக்கையில், அவர்கள் தனித்திருக்கையில், தங்களுக்குள் அன்பு பாராட்டிக் கொண்டிருக்கையில் இப்படிக் கொன்றதில் தனக்கு உடன்பாடில்லை என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் தொ¢விக்கிறான்.  பாரதியின் சொற்களிலேயே இந்தப் பகுதியைக் காண்போம்:

  "Mr. Ashe, Collector of Tinnevelly, was shot dead by an Indian, Vanchi Iyer.  Now this was a tragedy, which quite apart from its terrible political consequences, had pathetic traits from the social and human points of view also, Collector Mr. Ashe of Tinnevelly who as travelling with none but his wife in his company, was taking a pleasure trip to Kodaikanal, a famous sanatorium situated in the adjacent District of Madura.  Again an outrage to the Hindu religion; for the murdered had his wife by his side.  They were a young, and to all appearance, a loving couple.  They wre having a pleasure trip in each other's company.  A scene like that would very profoundly appeal to the heart of the devout Hindu.......

  ............For let a man and woman but sincerely love each other, you will find them a very edifying and solemn spectacle while in each other's company...."  (The Political Evolution in the Madras Presidency - பாரதியின் ஆங்கிலக் கட்டுரை.) 

  இந்தக் கொலை மட்டுமல்ல.  வேறெந்தக் கொலையும் பாரதியின் கண்டனத்திற்குத் தப்பியதில்லை.

  ஸ்பெயின் அரசர் அல்போன்ஸாவும்,  விக்டோ¡¢யா மஹாராணியின் பேத்தி ஏனாவும் திருமணம் செய்துகொண்டு ஊர்வலமாய்த் திரும்பி வருகிறார்கள்.  அவர்கள் மீது அனார்கிஸ்டுகளால் குண்டு வீசப்படுகிறது.  அரச தம்பதியர் பிழைத்துக் கொண்ட போதிலும் அவர்கள் ஏறிச் சென்ற வண்டி சின்னபின்னமாகிறது.  குதிரைகள் மடிந்து விடுகின்றன.  பொது மக்களில் பலர் இறந்துவிடுகின்றனர்.  உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் ஸான் ஜெனிரோ ஆலயத்திலிருந்து கிளம்பிய அரச தம்பதியர் கண்ணீருடன் அரண்மனையில் நுழைகின்றனர்.

  இந்த நிகழ்ச்சியை செய்திக் கட்டுரையாகத் தருகிறான் பாரதி.  யாருக்கு?  எந்தப் பெண்கள் திமிர்ந்த ஞானச் செருக்குடன் விளங்கவேண்டும் என்று விரும்பினானோ அந்தப் பெண்களுக்கு.  சக்ரவர்த்தினி என்ற பெண்கள் பத்தி¡¢க்கையின் ஆசி¡¢யராக இருந்து கொண்டு.  வெடிகுண்டு என்றால் என்ன, அனார்கிஸ்டுகள் என்றால் யார்,  ராஜதந்திர செளகா¢யங்கள் என்றால் என்ன என்று எல்லாவற்றையும் விளக்குகிறான்.  பின் வரும் வா¢களைக் கவனியுங்கள்.

  "இந்த விவாகத்தின்போது வெடிகுண்டு எறிந்த மாத்யூ மாரல் என்பவன் தன்னைப் பிடிக்க வந்த போலிஸ் சேவகனைச் சுட்டுக் கொன்ற பிறகு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துபோய்விட்டான்.  உயிரை வெறுத்து இந்தக் கூட்டத்தார் இப்படி ஓயாமல் பெரும் பாதகங்கள் செய்வதன் காரணம் என்ன என்பது யோசனை பு¡¢யத் தகுந்த விஷயம்."  இதற்குப் பிறகு அனார்கிஸ்டுகளுடைய நியாயத்தை விளக்குகிறான்.  இந்தச் செய்திக் கட்டுரையின் கடைசி வா¢கள் நோக்கத் தக்கன.

  "இவர்களுடைய நினைப்பு ஒருவேளை நியாயமாயிருந்த போதிலும் இவர்களது செய்கை மிகவும் மிருகத்தனமானது என்பதில் தடையில்லை."

  கிங்ஸ்போர்டு என்ற மாஜிஸ்திரேட் முஸாபர்பூருக்குக் கல்கத்தாவிலிருந்து மாற்றலாகி வந்தார்.  இவர் கல்கத்தாவில் பிரெசிடென்சி மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது தேசபக்தர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கினார்.  எனவே இவரைக் கொல்வதற்காக பிரபுல்லா சக்கி, குதிராம் போஸ் என்ற வங்காள இளைஞர்கள் எறிந்த குண்டு திருமதி கென்னடி என்பவரையும் கொன்றுவிட்டது.  இந்த நிகழ்ச்சியின் தொடர்பாகத்தான் அரவிந்தர் முதலானோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.  அரவிந்தர் இதில் சம்பந்தப்படவில்லை என்று பின்னால் விடுவிக்கப்பட்டார்.  பாரதி இது குறித்து The Political Evolution in the Madras Presidency  என்ற ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடுவது இது.

  'இந்திய பயங்கரவாதிகளால் உபயோகிக்கப்பட்ட முதல் குண்டு திருமதி கென்னடி என்ற பெயர் கொண்ட ஐரோப்பிய மாதின் மீது தவறுதலாக வீசப்பட்டது.  இது ஆங்கிலோ இந்தியாவைக் கொந்தளிக்கச் செய்தது.  என்ன பா¢தாபம்!  புதிய இந்தியாவின் மறுவிழிப்படைந்த ரஜபுதனத்து வீரத்தின் மீது எப்படிப்பட்ட ஒரு விமா¢சனம்!  எப்படிப்பட்ட ஒரு தவறு!  இந்தியாவை விடுவிக்க ஒரு பெண்மணியின் மீது வீசப்பட்ட குண்டு!'  (ஆங்கிலத்தினின்று மொழிபெயர்ப்பு.)

  இந்தியாவை விடுவிக்க ஒரு பெண்மணி மீது குண்டு வீசப்பட்டதே என்று வருந்துகிறான்.  அதுவும் எத்தகைய இந்தியாவில்?  பெண்ணை ஆதிசக்தி (பாரதி ஆங்கிலத்தில் குறிப்பிடுவதுபோல் Primordial Force, the Divine Feminine)  என்று தொழும் இந்தியாவில்.

  இதே சம்பவத்தைப் பற்றி பாரதி தமிழில் எழுதியிருப்பதை சீனி. விசுவநாதன் உள்நாட்டுப் பத்தி¡¢க்கை அறிக்கையிலிருந்து எடுத்துத் தருகிறார்.  "இந்தக் காட்டுமிராண்டித் தனமான கா¡¢யங்களில் வங்க மாநிலத்தில் இருக்கும் நம் மக்களில் சிலர் ஈடுபட்டிருப்பது நமக்கு வருத்தம்தான் என்பதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது.... இந்நாட்டில் உயிர்ச்சேதம் உண்டாக்கும் அழிவுமுறைகளை அனுமதிக்கக் கூடாது என்ற அரசாங்கத்தின் கருத்திற்கு - இந்த நாட்டிலே உயிர்ச்சேதம் விளைவிக்கும் கருவிகளை உபயோகிக்கக் கூடாது என்ற கருத்திற்கு நாமும் உடன்படுகிறோம்."  இந்த பாரதியா பெட்டி பெட்டியாகக் கைத்துப்பாக்கிகளை வினியோகித்திருப்பான்?

  மதன்லால் திங்ரா என்றொரு இளைஞன் லன்டனில் கர்சன் விலியைக் கொன்றான்.  மதன்லால் திங்ரா தூக்கிலிடப்பட்டு சிறைச்சாலையிலேயே புதைக்கப்பட்டான்.  இதற்குச் சில நாட்கள் கழித்து கிளாஸ்கோவில் ஒரு பருத்தி ஆலை தீ விபத்துக்குள்ளானது.  இரண்டரை லட்சம் பவுன்ட் நஷ்டம் ஏற்பட்டது.  மதன்லால் திங்ராவின் உடலைக் கொடுக்க மறுத்ததால் அக்னி பகவான் சீற்றமுற்று இவ்வாறு செய்தார் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் வ.வே.சு. ஐயர் இந்தியா பத்தி¡¢க்கைக்குச் செய்தி எழுதினார்.  இதனை வெளியிட்ட அடுத்த வாரம் பாரதி ஒரு துணைத் தலையங்கம் எழுதினான்.  அதில்,

  "அற்பத்துக்கெல்லாம் ஸந்தோஷித்துப் பழி வாங்கும் இழிவான குணம் ஆ¡¢யர்களுடையதல்ல.  நமது நாட்டில் ஒரு நாளும் கேட்டிருக்க முடியாத வெடிகுண்டு முதலிய பயங்கரமான செயல்கள் அநாகா¢கமானவை..." என்று குறித்தார்.  இது தொடர்பாகக் கிளம்பிய விவாதமே பாரதியை இந்தியா பத்தி¡¢க்கையை விட்டு விலக வைத்தது என்று ரா. அ. பத்மநாபன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  மேலும் பாரதியையும் வ. வே. சு. ஐயரையும் ஒத்திட்டுச் சொல்கையில் ரா. அ. ப. அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "பாரதிக்கு வெடிகுண்டு மார்க்கத்தில் நம்பிக்கை இல்லை.  வெறுப்பு.  சட்டபூர்வமான முயற்சிகளில் பா¢பூர்ண நம்பிக்கை கொண்டவர் அவர். " (நூல்: வ. வே. ஸ¤. ஐயர் - ரா. அ. பத்மநாபன் - பக்கம் 79.)   இவரைப்போய் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்துவது பொருந்துமோ?

  தமிழ் நாட்டாருக்கு இறுதி விண்ணப்பம் என்ற தலைப்பில் பாரதி சூர்யோதயம் பத்தி¡¢க்கையில் எழுதியதன் இந்தப் பகுதியைப் பாருங்கள்:

  "சகோதரர்களே, ஒரு வார்த்தை மட்டும் சொல்லுகிறேன்.  இன்னொரு முறை சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடைக்காதோ - அதுவே சந்தேகத்திலிருக்கிறது.  ஆகையால் இந்த ஒரு வார்த்தையை மனத்தில் பதிய வைக்கும்படி உங்கள் பாதங்களில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். 

  அதாவது, எது வந்தாலும் அதைர்யப்படாதேயுங்கள்.  மாதாவை மறந்துவிடவேண்டாம்.  நியாயந் தவறான செய்கைகள் செய்யவேண்டாம்.  .. .. .. .. நியாயமான சட்டங்களை மீற வேண்டாம்.  அநியாயமான சட்டங்களை எடுத்து விடுவதற்கு இயன்ற முயற்சியெல்லாம் செய்ய வேண்டும்."

  அதிதீவிரவாதியான வ.வே.சு. ஐயர் காந்தியைச் சந்தித்த பின் (இரண்டாவது சந்திப்பில்) தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.  காந்தி இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரேயே பாரதி கொலைவழியை மறுத்தார்.  எதிர்த்தார்.  அதனால்தான்,

    பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
     அதனினும் திறன்பொதுடைத்தாம்
    அருங்கலைவாணர் மெய்த்தொண்டர் தங்கள்
     அறவழி யென்றுநீ யறிந்தாய்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |