ஜூலை 8 2004
தராசு
வேர்கள்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
வானவில்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
பெண்ணோவியம்
க. கண்டுக்கொண்டேன்
உங்க. சில புதிர்கள்
கடிதங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    காந்தீய விழுமியங்கள் : தென்னிந்திய மோகம் - I
    - ஜெ. ரஜினி ராம்கி
    | Printable version |

    தென்னிந்தியா தனக்கு சொந்த வீடுபோல் தோன்றுவதாக தனது சுய சரிதையிலேயே காந்திஜி எழுதியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்திலேயே அங்கிருந்த தமிழர்களின் நட்பு அவரை தமிழை பற்றி அதிகமாக சிந்திக்க வைத்திருந்தது.

    '1893க்கு பின்னர் நான் அதிகமாக படித்ததெல்லாம் சிறையில்தான். தமிழ் கற்றுக் கொள்வதில் நல்ல
    " தமிழர்களை உள்ளடக்கிய திராவிடர்கள் இந்தி கற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது "
    முன்னேற்றம் அடைந்து வந்தேன். இதைச் சொல்லிக் கொடுக்க யார் உதவியும் பெறவில்லை. ஆனால், 'தமிழ்ச் சுயபோதினி' நன்றாக எழுதப்பட்ட புத்தகம். இன்னொருவர் உதவி அவசியம் தேவை என்று எனக்கு தோன்றாமலே போய்விட்டது'  (சுய சரிதையிலிருந்து...)

    இந்தியாவுக்கு திரும்பியதும் தமிழையும் தெலுங்கையும் முதலில் கற்றுக் கொள்ளவேண்டும் என்றுதான் தீர்மானம் செய்திருந்தார். ஆனாலும் காந்திஜியால் தமிழ் முழுவதும் படிக்க முடியாமல் போய்விட்டது. தான் படித்த கொஞ்ச நஞ்ச தமிழும் பயிற்சி இல்லாததாலும் அவசியம் இல்லாததாலும் துருப்பிடித்துக் கொண்டிருந்தது என்பதையும் அதே சுயசரிதையில் சொல்லியிருக்கிறார்.

    காந்திஜிக்கு தென்னிந்தியர் மீது தனிப்பாசம் வந்ததற்கு காரணம் என்ன என்பதை ஆராயும்போது நாம் கொஞ்சம் தென்னாப்பிரிக்க தேசத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். 1893 ஏப்ரல் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த காலத்தில் அவருக்கு அனுசரணையாக இருந்த இந்தியர்களில் அதிகமாக பேர் தமிழர்களும் தெலுங்கர்களும். அதற்கு காரணம் தமிழர்களின் பூர்வீக குடியினர் பிழைப்புக்காக பல நூறு வருடங்களுக்கு முன்பே தென்னாப்பிரிக்காவுக்கு போய் செட்டிலாகியிருந்தனர். கிட்டதட்ட தமிழர்கள் அங்கே போன பிறகுதான் மற்ற இந்தியர்களெல்லாம் தென்னாப்பிரிக்காவுக்கு வர ஆரம்பித்தார்கள்.  வெள்ளையர்-கருப்பர் என நிறவெறி உச்சத்தில் இருந்த காலத்திலேயே இந்தியர்கள் அங்கே போய் நிரந்தரமாக தங்குவதற்கும் தயாராக இருந்தார்கள் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். தென்னாப்பிரிக்க இந்தியர்களில் தமிழர்களின் எண்ணிக்கை ஜாஸ்தி என்பதாலேயே தமிழும் தெலுங்கும் தெரியாமலிருப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை காந்திஜி உணர்ந்து கொண்டார்.

    தென்னாப்பிரிக்க தமிழர்கள்தான் காந்திஜியை அசத்தினார்கள் என்றால் இந்தியாவிலிருக்கும் தமிழர்களும் காந்திஜியை ஆச்சரியப்படுத்த தவறவில்லை. இந்தியாவிற்கு வந்த பின்பு பம்பாயில் சில காலம் இருந்துவிட்டு பூனா வந்தவர், அதற்கு பின்னர் போக நினைத்த இடம் சென்னைதான்.

    சென்னைக்கு வந்த காந்திஜி தனக்கு இப்படியொரு கூட்டம் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை. தனது பிரசங்கத்தை அச்சிட்டு கையோடு எடுத்து வந்திருந்தார். தான் அந்த பிரசங்கத்தை வாசித்து காட்டும்போதும் மக்கள் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேட்டுக்கொண்டதாகவும் போகும்போது மறக்காமல் பச்சைத் துண்டில் அச்சடித்த பிரசுரத்தை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு போனதாகவும் காந்திஜி சொல்கிறார். அப்போதே 10,000 பிரதிகள் விற்பனையானதாம்! ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்த காந்திஜிக்கு, இந்தியாவிலேயே ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகமாக இருப்பது சென்னையில்தான் என்கிற நினைப்பையும் தந்தது அந்த பிரசங்க கூட்டம்தான்.

    தென்னிந்தியாவில் தான் போகுமிடமெல்லாம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டியிருந்ததாக காந்திஜிக்கு லேசான மன வருத்தமுண்டு. தென்னாப்பிரிக்காவிலிருக்கும் தமிழர்களாவது ஆங்கிலத்தின் துணையோடு கொஞ்சம் கொஞ்சம் இந்தியாவது பேசுகிறார்கள். இந்தியர்களுக்கு தன்னுடைய தேசத்திலிருக்கும் பிற மொழிகளை கற்று கொள்ளக் கூட ஆங்கிலத்தை நாட வேண்டியிருக்கிறதே என்று சொல்லும் காந்திஜி கூடவே தனது சத்திய சோதனையில் சொல்லும் ஒரு வார்த்தையை கவனித்தாக வேண்டும்.

    'தமிழர்களை உள்ளடக்கிய திராவிடர்கள் இந்தி கற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |