ஜூலை 8 2004
தராசு
வேர்கள்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
வானவில்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
பெண்ணோவியம்
க. கண்டுக்கொண்டேன்
உங்க. சில புதிர்கள்
கடிதங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திரையோவியம் : திரை விமர்சனம் - ஜோர்
  - மீனா
  | Printable version |

  சத்யராஜும் அவர் மகன் சிபியும், அப்பா - மகனாகவே நடித்திருக்கும் படம் ஜோர். பட டைட்டில் தான் ஜோராக இருக்கிறதே தவிர கதை ஒன்றும் அப்படி ஜோராக இல்லை.

  சொந்தமாக ஒரு தியேட்டரும், பள்ளிக்கூடமும் நடத்தி வருபவர் சத்யராஜ். இளம் வயதில் தன் தந்தை பாலாசிங்கின் பிடிவாதத்திற்காக தன் காதலி பானுப்பிரியாவைத் துறந்து, மற்றொரு பெண்ணை மணக்கிறார். தனது தந்தையுடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், தன்னால் தனது மகனுக்கு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்திலேயே அப்பா சத்யராஜும் மகன் சிபியும் நண்பர்கள் போலப் பழகுகிறார்கள்.

  இளம் வயதில் காதலித்த சத்யராஜை மறக்க முடியாமல், "மாமா! மாமா!!" என்று அவர் பின்னாடியே

  இவரா அவரா

  ஜனநாயக கட்சி வேட்பாளர் கெர்ரி துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட எட்வர்ட்ஸ் (Edwards) அவர்களை தேர்வுசெய்தார். ஆனால் 'நியூயார்க் போஸ்ட்' தினசரி இந்த செய்தியை தவறுதலாக கெர்ரி துணை ஜனாதிபதை பதவிக்கு 'டிக் கெப்ஹார்ட்' அவர்களை தேர்வுசெய்துள்ளார் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. இந்த தவறான செய்தியால் கடந்த மூன்று நாட்களாக 'ஈபே.காம்' வியாபாரிகளின் காட்டில் மழைதான்.  இந்த செய்தித்தாளை (குறிப்பாய் முதல் பக்கத்தை) செய்தி வெளியான அன்று அறுபது ($60) அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள். செய்தித்தாளின் அசல் விலை 25 செண்ட்கள். இப்பொழுது கூட இதன் விலை பத்து அமெரிக்க டாலர்களுக்கு மேல் உள்ளது. என்ன ஆச்சரியமாக இருக்கா? இங்கே சொடுக்குங்கள் விவரம் புரியும்.

  சுற்றுகிறார் பானுப்பிரியா. இந்நிலையில் உள்ளூர் எம்.எல்.ஏ கோட்டா சீனிவாசன் மகன் கல்லூரியில் சிபியுடன் தகராறு செய்ய, கோட்டா சத்யராஜுடன் தகராறு செய்கிறார். தன்னை எதிர்த்து மனு கொடுத்த சத்யராஜை பழிவாங்கும் விதமாக அவரது பள்ளியை மூடவைக்கிறார் கோட்டா. இந்த கலாட்டாக்களுக்கு இடையே சிபி, கோட்டாவின் மகள் கஜலாவைக் காதலிக்கிறார்.  வழக்கம்போல கோட்டாவும், சத்யராஜும் இக்காதலை எதிர்க்க, எதிர்ப்புகளை முறியடித்து காதலர்கள் எவ்வாறு ஒன்று சேர்ந்தார்கள்? சத்யராஜ் தனது பள்ளிக்கூடத்தை மீண்டும் திறந்தாரா? கோட்டாவும் அவர் மகனும் என்ன ஆனார்கள் என்பதே மீதிக்கதை.

  தன் மகனை படத்தில் பிரமாதமாகக் காட்டவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், சத்யராஜ் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார். அவரது வழக்கமான நடிப்பு, குசும்பு, நக்கல், ஆக்ஷன் எல்லாமே இந்தப் படத்தில் ரொம்பவே கம்மி!! மகனின் காதலை முதலில் எதிர்க்கும் அவர், படத்தின் முடிவில் " நான் ஏன் அப்படிச் செய்தேன் தெரியுமா ?" என்று கூறும் காரணம் குழந்தை கூட எளிதாக யூகிக்கக் கூடியது.

  முந்தைய படத்துக்கு இதில் சிபியின் நடிப்பு தேவலை. ஆக்ஷன் ஓக்கே. அப்பாவின் குசும்பு கொஞ்சமும் குறையாமல் அப்படியே சிபியிடன் இருக்கிறது. இவரும் சத்யாராஜும் சேர்ந்து வடிவேலுவை வம்புக்கிழுக்கும் காட்சி நன்றாக இருக்கிறது. வழக்கமாக பொம்மை போல வந்துபோகும் கஜலா, ஜோரில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

  எம்.எல்.ஏ வாக சும்மா உறுமிக்கொண்டே இருக்கிறார் கோட்டா. மற்றபடி புத்திசாலித்தனமான வில்லனாக ஒன்றும் செய்யவில்லை. இவருக்கு, இவர் மகனாக வரும் ரமணா கொஞ்சம் தேவலை.

  கதையில் ஓட்டைகளும் குறைகளும் ஏராளம். மேலும் பல படங்களிலும் பார்த்து அலுத்துப்போன காட்சிகளையே இதிலும் வைத்து, ஆளை விட்டால் போதும் என்று ஓடச்செய்திருக்கிறார் இயக்குனர் செல்வா. பாடல்கள் சுமார் ரகம் தான்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |