ஜூலை 13 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : பயங்கரவாதத்தை வேரறுக்க இயலுமா?
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

உலகம் முழுவதும் பயங்கரவாதம் பரவி வரும் இந்நாளில் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக முயன்று கொண்டிருக்கிறது. உள்ளூர் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் பயங்கரவாதிகளைத் தடுக்க நாம் இது வரை என்ன செய்துள்ளோம் என்று யோசித்தால் பதில் தீவிரவாதத்தை எதிர்த்து அறிக்கை விடுவதைத் தவிர ஒன்றுமே இல்லை.

எங்காவது குண்டு வெடிப்பு சம்பவம் போன்றவை நடைபெற்றால் உடனே நம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று கூடி ஒரு இரங்கல் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். பிறகு ஆளும் கட்சியைப் பற்றி எதிர்கட்சிகள் வசைமாறி பொழிய ஆரம்பிக்கிறார்கள். இதைத் தவிர்த்து வேறு ஏதாவது உருப்படியாக ஏதாவது நாம் செய்துள்ளோமா? மும்பை, காஷ்மீரில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்துவிட்டோம் என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். உலக நாடுகள் அனைத்தும் இத்தகைய பயங்கரவாதச் செயல்களை எதிர்க்க வேண்டும் என்று உலக நாடுகள் மாநாடுகளில் பிரதமர் வேண்டுகோள் விடுக்கிறார். நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது - பயங்கரவாதத்தை தடுக்க இன்னும் தீவிர சட்டங்களை அரசு இயற்ற வேண்டும் என்று எதிர்கட்சிகள் ஆர்பாட்டம் நடத்திவருகின்றன.

பொடா சட்டம் அமுலில் இருந்தபோதுதான் நாடாளுமன்றத் தாக்குதல், காஷ்மீரில் தினந்தோறும் வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. பொடாவில் மாட்டிக்கொண்டு உள்ளே போன அரசியல்வாதிகள் ஆட்சி மாறியதும் ஜாம்ஜாமென்று வெளியே வந்து அந்தச் சட்டத்தையே ரத்து செய்ய வைத்ததுதான் மிச்சம். தீவிரவாதத்தைப் பற்றி அறிக்க விடுவதைத் தவிர வேறு ஒன்றுமே செய்யத்தெரியாதவர்கள் தான் நம் ஆட்சியாளர்கள். நம்முடைய இத்தகைய மெத்தனத்தினால்தான் நம் நாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.

தீவிரவாதிகளால் அப்பாவி மக்களைத் தங்கள் பேச்சின் மூலம் திசைதிருப்பி ஒன்றும் அறியா மக்களையே தீவிரவாதிகளாக மாற்றமுடியும் என்றால் தீவிரவாதிகளின் அராஜக செயல்களால் மக்களுக்கு ஏற்படும் விளைவுகளை விரிவாக எடுத்துச் சொல்லி பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களைத் திருப்ப அரசாங்கத்தால் ஏன் முடிவதில்லை? மக்களோடு மக்களாக கலந்துவிடும் தீவிரவாதிகளை ஒடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு அவசியம் தேவை. மேலும் உலகம் முழுவது வேர் விட்டு பரவிவரும் இப்பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி ஒத்துழைத்தால்தான் முடியுமே தவிர அறிக்கை விடுவதால் மட்டும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாது.

ஆக ஒவ்வொரு நாட்டிலும் பொதுமக்களை அரசாங்கத்திற்கு எதிராக திசைதிருப்பி தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் பயங்கரவாதிகளை அம்மக்களைக் கொண்டே ஒடுக்கும் வழியைப் பார்க்க அரசு முன்வரவேண்டும். முன்வருவார்களா?

|
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |