ஜூலை 13 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : Albudhadweep & Hanuman - படவிமர்சனம்
- ராமசந்திரன் உஷா
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

Albudhadweep - ப்ரித்திவிராஜ், மல்லிகாகபூர் நடித்தது. ப்ரித்திவிராஜ் யார் என்றால் இன்று பாக்யராஜ் மகளுடன் பாரிஜாதம் படத்தில் டூயட் ஆடிக்கொண்டு இருக்கிறாரே அவர்தான். நாயகி மல்லிகாகபூருக்கு லேசாய் ஒன்றரைகண். ஆனால் கதைக்கு தகுந்தப்படி அழகான ராஜகுமாரியாய் வலம் வருகிறார். படத்தின் கதை, இந்திய கப்பல் படையை சார்ந்த நாயகனும் அவனுடைய நண்பர்களும் விபத்தில் தப்பி தீவு ஒன்றில் ஒதுங்குகிறார்கள். அல்புதவீப் என்றால் மாயாஜாலதீவு என்று பொருள். அத்தீவில் ஆண்கள் அனைவரும் குள்ளர்கள். பெண்கள் சாதாரண உயரத்தில் இருக்கிறார்கள். நாயகி கண்ணில், உயரத்தில் உயர்ந்த ப்ரிதிவிராஜ் கண்ணில் படுகிறார், காதல் பிறக்கிறது. அவரையும் மற்றவர்களையும், தீவினர் கண்ணில் இருந்து மறைக்க நாயகி பாடுப்பட, கடைசியில் அவர்கள் மாட்டிக் கொள்ள, முடிவு சுபமாய் முடிகிறது. ஆனால்  கடைசி அரைமணி நேரம் அறுத்துவிட்டார்கள். ராட்சர்கள் தீவின் மீது படையெடுத்து, அனைவரையும் பிடித்து தின்பதை திரும்ப திரும்ப காட்டி பொறுமையை சோதித்துவிட்டார்கள்.

இப்படத்தில் மிகவும் பாராட்ட வேண்டிய நடிப்பு, நாயகியின் முறை மாப்பிள்ளையாய் வரும் குள்ளன்தான். அவர்தான் டிஷ்ஷூம் படத்தில் அமிதாப் என்ற பெயரில்  நடித்த குள்ள மனிதர் பக்ரூ (Pakru). மனுஷன் அந்த குள்ள உருவத்திலும் என்ன கம்மீரம். அது என்ன குள்ளனிடம் எப்படி கம்பீரம் வரும் என்று கேட்கிறீர்களா? அந்த குள்ளர், முகபாவனையிலும், உடல் மொழியிலும் கம்மீரத்தைக் காட்டி, நடிப்பில் பிளந்துக் கட்டுகிறார்.

இப்படம் ஹாலிவுட்டுக்குப் போகிறது. இப்படத்தில் நடித்த நூற்றுக்கணக்கான குள்ளர்களுக்கும் ஹாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. எடுக்கப்போவது, Ron Howard. அவர்தாங்க, டாவின்சி கோர்ட் புகழ் டைரக்டர். 

HanumanHanuman - அனிமேஷன் படமாய் வந்துள்ளது. சின்னவயதில் கோகுலத்தில்  வாண்டுமாமா எழுத, வினுவின் படத்துடன் (தகவல் சரியா?) படித்த அனுமான் படக் கதையை நினைத்தும், விளம்பரத்தில் குழந்தை அனுமானின் அழகு முகத்தைப் பார்த்தும், காசட் எடுத்தால் ! என்ன சொல்ல?

அனிமேஷன் படமான டாம் அண்டு ஜெரியில், பூனையும், எலியும் காட்டும் முகபாவங்களால்தானே, அறுபது வருடம் கடந்தும் இன்றும் அந்த கார்ட்டூன்கள் ரசிக்கப்படுகின்றன.  எந்தவித உணர்வுகளையும் காட்டாமல் வெறும் படங்கள் நகர்த்தி, அனிமேஷன் என்று எடுத்திருக்கிறார்கள். கதையும் சில இடத்தில் நாம் இதுவரை படித்த அனுமார் கதை மாதிரி இல்லாமல், புதியதாய் இருந்தது. என்னவோ, படம் ஆரம்பித்து அரைமணி நேரத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. எம்.ஜி.எம் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, நம் புராண படங்களை எப்படி எடுக்கலாம் என்று பயிற்சிப் பெறலாம்.

|
oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |