இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
ஹல்வா
திரையோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
கவிதை
நையாண்டி
சிறுகதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : கொஞ்சம் கேளுங்க
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

1. தி.மு.க தலைவர் சொல்கிறார்

தி.மு.கவினருக்கு என்னையே நான் தந்திருக்கும் போது வேறு எதுவும் தரவில்லை என்ற எண்ணம் வருவது தீது என்று கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.கவில் பரம்பரையாம இருப்பவர்கள் மட்டுமே பதவி பெறுவது குறித்து கட்சியினர் மத்தியில் எழுந்துள்ள அதிருப்திக்கு பதில் அளித்து கருணாநிதி கூறியிருப்பதாவது:

அதிமுக போன்ற பணத்தை வாரி இறைக்கும் கட்சியல்ல திமுக. என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்பு என்ற பாசமிகு சொற்களுக்கு இணையான பாராட்டு வேறு எதிலும் இருப்பதாக நான் கருதவில்லை. தொண்டர்களை மறக்கவில்லை என்பதன் அடையாளமே சமீபத்தில் 1 லட்சம் பேருக்கு பரிசுத் தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அது ஏழைக்கேற்ற எள்ளுருண்டை. இதைப் பெற்றுக்கொண்டவர்களோ கட்சிக்காக வியர்வை மழையில் நனைந்து கட்சியைக் காப்பவர்கள். இந்த இணைப்பு லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் இணையாகுமா என்று உண்மைத் தொண்டர்கள் எண்ணிட மாட்டார். எண்ணவும் கூடாது என்னையே நான் தந்திருக்கும் போது அந்த எண்ணம் வருவது தீது.

நம்ம கவலை: இதே டயலாக்கை கருணாநிதி தன் குடும்பத்தினரிடம் விடுவாரா? அப்படி விட்டால் அவங்க ரியாக்ஷன் என்னவா இருக்கும்?

நீதி : சாதாரண தி.மு.க தொண்டர்கள் அடிமுட்டாள்கள் என்பதை தலைவர் எவ்வளவு சூசகமாக சொல்லிவிட்டார் பார்த்திங்களா? ஆனால் இத ஒரு பெரிய பாராட்டா நினைச்சு சந்தோஷப்படர சராசரித் தொண்டன்....இவங்களப் பத்தி என்னத்த சொல்ல.


2. தாஜ்மகால் யாருக்கு சொந்தம்?

தாஜ்மகால் தங்களுக்கே சொந்தம் என்று வக்பு வாரியம் கூறியிருந்தாலும் தாஜ்மகாலின் உண்மை வாரிசு என்று கருதப்படும் மைசுதீன் தூசி தாஜ்மகால் ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தம் என்று கூறியிருக்கிறார்.

நம்ம கமெண்ட் : சீக்கிரமா நாட்டில் உள்ள நினைவுச்சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் கோவில்களுக்கான உண்மை வாரிசுகளை சீக்கிரமா கண்டிபிடிங்க. கவர்மெண்டுக்கு சாதகமா குரல் கொடுக்க அவங்கள தயார் பண்ணுங்க. எப்ப எந்த பிரச்சனை கிளம்பும்னே தெரியல.



3. சல்மான்கானுக்கு லாலு கட்சி ஆதரவு.

நடிகர் சல்மான்கானுக்கு எதிராக பா.ஜனதா சிவசேனா போன்ற கட்சிகள் போராட்டம் நடத்திவரும் வேளையில் சல்மானுக்கு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து  ராஷ்டிரிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் சிவானந்த் கூறுகையில் "டேப்பில் பதிவான பேச்சை வைத்து சல்மான் தான் குற்றவாளி என்று கூறிவிட முடியாது. பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தான் இதைப் பிரச்சனையாக்கி வருகின்றன. எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பியான சகாபுதீன் மீதும் இதுபோலத் தான் குற்றம் சாட்டினார்கள்."

நம்ம கமெண்ட்:  நண்பர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செஞ்சுக்கறதுங்கறது இது தானோ? யார் என்ன சொன்ன என்ன. அடுத்த தேர்தல்ல ராஷ்டிரிய ஜனதா கட்சி சார்புல சல்மான் எம்.பி.யாகறது நிச்சயமாயிடுச்சு..

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |