ஜூலை 15 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
வேர்கள்
சிறுகதை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
டாக்டர் பட்டம்
பெண்ணோவியம்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : தென்னிந்திய மோகம் - II
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  பொதுவாக வட இந்திய தலைவர்களுக்கு தென்னிந்திய விசிட் அடிப்பதென்றாலே வேப்பங்காய்தான். அதுவும் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் யாரும் தமிழ்நாட்டு பக்கம் பெரும்பாலும் எட்டிப் பார்ப்பதில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களோடு சேர்ந்து கையசைக்கும் காட்சிகளெல்லாம் வேறு ரகம். திருப்பதிக்கும் ஊட்டிக்கும் வந்து போக ஆர்வமாய் இருப்பவர்கள் கூட சென்னை என்றாலே கொஞ்சம் அசெளகரியமாய் நினைக்க பல காரணங்கள் இருக்கலாம்.

  காந்திஜியோ சென்னை விஜயம் என்றாலே ஆர்வமாக இருந்திருக்கிறார். அவரது சுய சரிதையில் பல இடங்களில் தமிழர்களைப் பற்றியும் சென்னையையும் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.அதற்கு முக்கியமான காரணம் தென்னாப்பிரிக்க வாழ் தமிழர்கள்தான் என்றாலும் சென்னைவாசிகளின் ஒத்துழைப்பும் ஒரு காரணம். 

  காந்திஜி முதன் முதலாக சென்னைக்கு வந்து செய்த பிரசங்கங்களை வெளியிடுவதற்கு உதவியாக இருந்தவராக 'மதராஸ் ஸ்டாண்டர்டு' பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த பரமேஸ்வரன் பிள்ளையை குறிப்பிட்கிறார். தொடர்ந்து காந்திஜி எழுதியதை தனது பத்திரிக்கையில் பிரசுரிப்பதிலும் உறுதியாக இருந்திருக்கிறார். கூடவே காந்திஜி 'ஹிந்து' பத்திரிக்கையின் ஜி. சுப்ரமணியமும் டாக்டர் சுப்ரமணியமும் தனது எழுத்துக்களை பெற்று அவற்றை பத்திரிக்கையில் பிரசுரித்து வந்ததற்காக சுயசரிதையில் தனது நன்றியையும் தெரிவித்திருக்கிறார். சென்னையில் காந்திஜி சந்தித்தவர்களிடமெல்லாம் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருந்தது பற்றி காந்திஜிக்கு வருத்தம் இல்லையென்றாலும் இந்தியில் பேச முடிந்திருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக சந்தோஷப்பட்டிருப்பார் என்பது மட்டும் உண்மை.

  காந்திஜிக்கு தமிழகத்தில் நெருக்கமான இருந்தவர்கள் லிஸ்ட்டில் முதலிடம் ராஜாஜிக்குத்தான். காந்திஜியையும் ராஜாஜியையும் முதன் முதலில் சந்திக்க வைத்தது கஸ்தூரிரங்க ஐயங்கார். சேலத்தில் வக்கீல் தொழிலை நடத்திக் கொண்டிருந்த ராஜாஜியை சென்னைக்கு வரவழைத்தது கஸ்தூரிரங்க ஐயங்கார்தான். ராஜாஜி சென்னையிலிருந்தபோது காந்திஜியை பற்றி கேள்விப்பட்டு கஸ்தூரிரங்க ஐயங்கார் மூலமாக கடிதமெழுதி காந்திஜியை சென்னைக்கு வரவழைத்து பிரசங்கம் பண்ண வைத்ததாக சுயசரிதையில் ஒரு குறிப்பும் இருக்கிறது.

  சென்னைக்கு வந்த காந்திஜியும் கஸ்தூரிரங்க ஐயங்காரின் பங்களாவிலேயே தங்கி ராஜாஜியுடன் ரெளலட் சட்டம் பற்றிய விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். அகிம்சை முறையில் சட்ட மறுப்பு செய்யவது என்கிற முடிவில் காந்திஜி இருந்தாலும் அதை எப்படிச் செய்வது என்பதை முறைப்படுத்தி காந்திஜிக்கு நிறைய ஆலோசனைகள் சொன்னது ராஜாஜி, கஸ்தூரிரங்க ஐயங்கார், விஜயராகவாச்சாரியர் போன்றவர்கள்தான். ஒரு வழியாக 1919ம் ஆண்டு ஏப்ரல் 6ம்தேதி சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்துவிடலாம் என்கிற முடிவை காந்திஜி எடுத்தது சென்னையில்தான்.

  கூடிச் 'சாட்டலாம்' வாப்பா

  இதுவரை எம்.எஸ்.என், யாஹூ, அமெரிக்கா ஆன்லைன் (AOL) வாடிக்கையாளர்கள் அந்த அந்த நிறுவன மென்பொருளை நிறுவி உடனுக்குடன் கருத்து பரிமாறி (chat) வந்தனர். இதனால் யாஹூ வைத்திருப்போர் மற்ற யாஹூ நண்பர்களுடனும், எம்.எஸ்.என் வைத்திருப்போர் மற்ற எம்.எஸ்.என் நண்பர்களுடனும் தான் பேச முடிந்தது.

  இந்தப் பிரச்சனைக்கு முடிவுகட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. அது இந்த ஆண்டு இறுதியில் வெளிவரும் தகவல்பொறியில் (Live Communications Server) யாஹூவையும், அமெரிக்கா ஆன்லைனையும் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனால் யாஹூ முகவரி வைத்திருப்போர் யாஹூ அல்லாத மற்றவர்களுடனும் உடனடியாக கருத்து பரிமாறிக் கொள்ளலாம்.
  மேலும் விவரங்களுக்கு

  http://www.cnn.com/2004/TECH/internet/07/15/microsoft.messaging.reut/index.html

  அதற்கு பின்னர் காந்திஜி-ராஜாஜியின் நட்பு நெருக்கமாகி சம்பந்தி ஆகுமளவுக்கு போனதெல்லாம் தெரிந்து விஷயம்தான். சத்திய மூர்த்தி போன்றவர்கள் தீவிர காந்தீயவாதிகளாக இருந்தாலும் ராஜாஜி அளவுக்கு நெருக்கமாக இருக்க முடியவில்லை. இருந்தாலும் காந்திஜி எடுத்த ஒவ்வொரு அரசியல் முடிவையும் ஆதரித்து 'தென்னாட்டு காந்தி'யாக தமிழ்நாட்டு மக்களை காந்திஜியின் பின்னால் அணிவகுத்தது ராஜாஜி மட்டும்தான்.

  தென்னிந்தியாவுக்கு வந்த காந்திஜி, மதுரையில் தான் அணிந்திருந்த சட்டையை துறந்துவிட்டு இனிமேல் மேலாடை உடுத்தப் போவதில்லை என்று முடிவெடுத்தாக சொல்லப்படுவதுண்டு. அதை விட முக்கியமான விஷயம், காந்திஜியை மகாத்மா என்றும் அவரை கடவுளுக்கு சமமான இடத்தில் வைத்து மக்களை காக்க வந்த அவதாரம் என்றெல்லாம் முதன் முதலில் சென்னவர்கள் மதுரை மக்கள்தான்!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |