ஜூலை 15 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
வேர்கள்
சிறுகதை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
டாக்டர் பட்டம்
பெண்ணோவியம்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  க. கண்டுக்கொண்டேன் : அன்பு காட்டுங்கள்! இல்லையேல் பர்ஸ் காலி!
  - ரமா சங்கரன்
  | Printable version |

  சிங்கப்பூரில் மாதந்தோறும் கொண்டாட்டம்தான். புத்தாண்டு தொடங்கி பின் சீனப்புத்தாண்டு, ரம்ஜான் (மலாய்-முஸ்லீம்கள் புத்தாண்டு) என்று மார்ச் வரை விழாக்கால சிறப்பு விற்பனைகள் நடைபெறும். பிறகு மே மாதம் தொடங்கி ஜூலை வரை The Great Singapore Sale விளம்பரங்களும் செய்த்¢த்தாள் சிறப்பிதழ்களும் சுற்றுலா வாரியத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளும் மீண்டும் சிங்கப்பூரில் கலகலப்பூட்டும். இவ்வாண்டு சிங்கப்பூர் மாபெரும் விற்பனை வரும் 25 ஜூலையுடன் நிறைவு பெறுகிறது. 70% வரையிலான தள்ளுபடிகள்.  டிசைனர் ஆடையகங்களில் உண்மையிலேயே வாங்குவதில் லாபம் உண்டு. சாதாரணக்கடைகளில் பெரிய லாபம் ஒன்றுமில்லை. பழைய ஸ்டாக்குகளை அல்லது இதுவரை விலை போகாத சாமான்களை தள்ளுபடி செய்து விற்கிறார்கள் என்று தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் சிங்கப்பூரர்கள் கையில் பெரிய பெரிய பைகளுடன் நகர் மையத்தில் உள்ள ஆர்ச்சர்ட் ரோடு ஷாப்பிங் மால்களில் எறும்புகள் போல ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூரர்களை "கியாஸ¤" (Kisasu)  என்று கிண்டல் செய்வது உண்டு. கியாஸ¥ கார்ட்டூன்களும் கதைகளும்  இங்கு பிரபலம்.  கியாஸ¥ என்றால் ஏதாவது இலவசமாகக் கிடைக்கும் என்றாலோ தள்ளுபடி என்றாலோ முந்திக் கொள்வது. பொதுவாக, எதற்கெடுத்தாலும்  முந்திக் கொள்வது என்று சொல்லலாம். எனக்கென்னவோ இச்சொல் சிங்கப்பூரர்களை "அல்பம்" என்று மட்டம் தட்டுவதாகத் தோன்றும். 

  சிறப்பு விற்பனை போது மட்டுமில்லை. எப்போதும் ஷாப்பிங் போவது; பார்த்ததையெல்லாம் வாங்குவது; தேவையில்லை என்றால்கூட  வாங்குவது; சிலசமயங்களில் வாங்கிய பொருளின் விலை கூட கிழிக்கப்பாடாமல் இருக்கும். அதை அப்படியே போட்டுவிட்டு புதிதாக வந்துள்ள பேஷன்கள், அணிமணிகள், செருப்புகள், எலக்ட்ரானிக் சாமான்கள் என எல்லாம் வாங்கிக் குவிப்பது- 'உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? இப்படி கடை கடையாக அலைகிறாயே?" என்று இவர்களைக் கோபித்துக் கொள்வோம். ஆனால் இது உண்மையிலேயே ஒருவகை  மனநோய்தான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். வாழ்க்கையில் மன வருத்தம்,  சலிப்பு, மன உளைச்சல், சோர்வு, தீராக்கோபம் -இப்படி பாதிக்கப்படும்போது சில மனிதர்கள் ஷாப்பிங் செய்கிறார்கள் என கண்டறிந்துள்ளார்கள். இவர்களை நாம் வேடிக்கையாக 'shopaholic' என்று சொல்வோம். இதை மனோதத்துவரீதியாக  'Oniomania' அதாவது ஷாப்பிங்கை கட்டாயப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் என்று கூறுகிறார்கள். இவ்வகையான மனபாதிப்பு பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

  இவர்கள் விரைந்து போய், பரவசப்பட்டு போய், பெருமிதத்துடன் ஷாப்பிங் செய்வார்கள். பின்  அதையும் விட அதிகமாக குற்றவுணர்வு, தம்மையே தாம் வெறுப்பது, புலம்புவது போன்ற உணர்வுகளும் இவர்களிடம் வரும். பின் மீண்டும் பணம் வரும்போது அல்லது மன உளைச்சல் வரும்போது மீண்டும் செலவு செய்வார்கள் என மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஏ. எல். பென்ஸன் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். உலகில் 1% முதல் 6% வரையிலான மக்கள் 'ஓனியோமனியாவால்' பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார். "I shop therefore I am"  என்னும் புத்தகத்தையும் எழுதியுள்ளார். 'ஓனியோமானியாக்'  என இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். மனபாதிப்பும் மீண்டும் ஷாப்பிங் போவதும் என இவர்கள் மாறி மாறி  இதைச் செய்வார்கள். இது ஒன்றும் கவலைப்பட வேண்டிய அளவிற்கு ஒரு பெரிய வியாதி இல்லை. ஆனால் கடன் தொல்லை, குடும்ப உறவுகள் பாதிக்கப்படுவது ஆகியவை நடைபெறலாம்.

  நான் ஜனவரி 2004 மாத இதழ் " Emirates Woman" படித்தபோது அபுதாபியில் வசிக்கும் ஓனியோமானியா தெராபிஸ்ட்( நிபுணர்)  கிரிஸ் லாயிட் எழுதிய கட்டுரை ஒன்று படித்தேன். அவர் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் பெண்மணிகளின் சில பேரைப் பற்றியும் அவர்களது  ஷாப்பிங் முறைகளையும் விமர்சித்து எழுதியிருந்தார். நாம் இவர்களை தினசரி வாழ்க்கையில் நிறையப் பார்க்கிறோம். இவர்களுக்கு தேவைப்படுவது ஷாப்பிங்கிற்கு மாற்றாக மற்றொரு சுவாரஸ்யமான, அவர்கள் நேரத்தைச் செலவழிக்கக் கூடிய நல்ல பொழுதுபோக்கு. குறிப்பாக, பெண்களுக்குத் தேவைப்படுவது அவர்கள் பெற்றோர், கணவர், குழந்தைகள், குடும்பத்தினரிடமிருந்து மனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அன்பும் ஆதரவும். அபுதாபியில் கிரிஸ் லாயிட் ஒரு ஓனியோமானியா ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். 'Gulf Diagnostic Centre"  என்று ஒரு கிளினிக்கும் வைத்து நடத்துகிறார். சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் இதுபோல ஸ்பெஷல் கிளினிக்குகள் இருப்பதாக நான் கேள்விப்படவில்லை. ஆனால் ஆலோசனைகள் வழங்க நிபுணர்கள் இருக்கக்கூடும்.

  ஷாப்பிங் ஆசை கொண்ட பெண்கள் குறைவாகக் கையில் பணம் வைத்திருப்பது, கடன் அட்டைகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது, window shopping போகாமல் இருப்பது, தேவைகளை வாங்க மட்டுமே கடைகளுக்குச் செல்வது போர்ற ஆலோசனைகளைக் கூறுகிறார் கிரிஸ். அதே சமயம் மனதில் உற்சாகம், தெம்பு அளிக்கும் மருந்துகளையும் சாப்பிடலாம் எனக் கூறுகிறார் அவர்.

  இத்தகைய பெண்களின் மனநிலையைப் பாதிப்பது விளம்பரங்களும் ஆகும். சிங்கப்பூரில் கூட ஆங்கில நாளிதழான ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் தவறாமல் வாரந்தோறும் சிங்கப்பூர் மாபெரும் விற்பனை பற்றி சிறப்பிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. இவையெல்லாம் பெண்களை கவர்ந்திழுக்கின்றன என்பது உண்மை. ஆனால் கிரிஸ் தன் கட்டுரையில் ஒரு பெண்ணை பேட்டி எடுத்திருந்தார். அந்த பெண்ணின் கணவர் பணக்காரர். மிகவும் பிஸியான வர்த்தகர். அதனால் தன் கணவரால் தன்னுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போகும்போது அவருடன் தான்  சண்டையிடுவேன் என்றும் அப்போது  அவரே தனக்கு பணம் கொடுத்துத் தன்னை ஷாப்பிங் போகச் சொல்லுவார் என்றும் அந்த பெண் தன் பேட்டியில் குறிப்பிடுகிறார். தான்  அதனால் வங்கிகளின் கடன் அட்டைத் தொல்லைகள், பணச்சிரமங்கள் வந்து தொல்லைக்கு ஆளானதாகக் குறிப்பிடுகிறார்.

  எனவே ஷாப்பிங் சுகத்தைத் தராது.  நாடாளாவிய மாபெரும் விற்பனை  ஒரு விழாக்கால சந்தோஷம் போலத்தான். மனதிற்கு நிரந்தர  சுகத்தைத் தர முடியாது.  திருப்தியும் காணமுடியாது. அத்தருணத்தில் வந்து போகும் ஒரு  சந்தோஷம் மட்டுமே. அப்போதைய  வலியை மறக்க டைகர் பாம் அல்லது யூகலிப்டஸ் ஆயில் தடவிக் கொள்வதைப் போலத்தான் ஷாப்பிங்கில் மனத்தைப் பறிகொடுப்பது.

   

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |