Tamiloviam
ஜூலை 17 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : மீனவர் பிரச்சனையும் தமிழக முதல்வரும்
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

 

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுள்ளது. "தமிழக கடற்கரையோர பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போது, சிங்கள ராணுவ வீரர்களால் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் மற்றும் இப்பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தென் சென்னை-வட சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் முதல்-அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்திட, பொதுசெயலாளர் அமைச்சர் அன்பழகன் முடித்து வைத்திட, பொருளாளர் ஆற்காடு வீராசாமி தலைமையில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.." என்று அரசு தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சியும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், படகுகளையும், மீன்பிடிக்கும் வலைகளையும் சேதப்படுத்தி கொடுமைப்படுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. தற்போது உள்ள பிரச்சனைகள் அனைத்திற்கும் மூல காரணம் 1974-ம் ஆண்டில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பம்தான் காரணம். அப்போது தமிழகத்தில் தி.மு.க. அரசுதான் பதவி வகித்தது. இன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதிதான் அன்றைக்கும் முதல்-அமைச்சர்.

கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அன்றும் சரி, அதன் பிறகு 3 முறை தமிழகத்தில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்ட போதும் சரி, குறைந்தபட்சம் கச்சத்தீவை சுற்றி நம்முடைய மீனவர்களுக்கு பாரம்பரியமாக இருந்து வந்த மீன் பிடிப்பு உரிமையை பெற்றுத் தர எத்தகைய நடவடிக்கைகளை முதல்-அமைச்சரும், அவரது அரசும் மேற்கொண்டனர் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். விஜயகாந்த் உள்ளிட்டோர் ஏகமாய் போராட்டங்களை எல்லாம் நடத்தி எங்கே மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் தான் தற்போது முதல்வர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளாரோ என்ற சந்தேகம் தான் மக்கள் மனதில் எழுந்துள்ளதே தவிர இந்த உண்ணாவிரதத்தால் உருப்படியாக ஒரு பிரயோஜனமும் இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

மீனவர்களின் வாழ்க்கை நித்ய கண்டம் பூர்ணாயிசு என்று இருக்கும் இந்நிலையில் அவர்களுக்கு கடலில் கூண்டு அமைத்து மீன்களை வளர்ப்பது எப்படி என்ற பயிற்சிக்காக 7 மீனவர்களை தேர்வு செய்து அவர்களை வியட்நாமிற்கு அனுப்பியுள்ளது தமிழக அரசு. உயிருக்கே உத்திரவாதம் இல்லாத நிலையில் - வியட்நாம் போய் பயிற்சி பெற்று என்னத்தைச் சாதிக்கப் போகிறார்கள் இவர்கள்??

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்.. நீங்கள் திரைப்படத்துறையினருக்காகவும், குடும்ப அரசியலுக்காவும், மத்திய அரசை வைத்து எப்படியெல்லாம் ஆதாயம் பெறலாம் என்பதை பற்றி யோசிப்பதற்கு நீண்ட நேரம் ஒதுக்குவதைப் போல இல்லாவிட்டாலும் கொஞ்ச நேரமாவது ஒதுக்கி உண்மையாக இப்பிரச்சனையை எப்படித் தீர்க்கலாம் என்ற வழியைக் கண்டுபிடியுங்கள். அதை விட்டுவிட்டு அவ்வபோது நீங்கள் கொடுக்கும் நிவாரண நிதி உதவி மீனவர்கள் மனதில் நிற்காது.. அது உங்கள் அரசைக் காப்பாற்றாது.

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |