Tamiloviam
ஜூலை 19 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : கவிஞர் மதுமிதா அவர்களின் பேட்டி - 3
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

அவர் காலத்திலும் சரி இப்ப வரைக்கும் சரி அவரின் படைப்பின் வெற்றியை யாரும் தொட முடியலங்கிறது உண்மை. மனித மனசு இருக்குதில்லியா? அதனுடைய எல்லா பரிமாணத்தையும் தன்னுடைய படைப்பில பின்னி எடுத்திருப்பாரு.

சென்ற இதழ் தொடர்சி

தமிழோவியம் :- ஜரோப்பிய நாகாரிகத்தை தொ¢ந்து கொள்ள லத்தினும் கிரேக்கமும் உதவுவதாக  சொல்கிறார்கள். அதேபோல் இந்திய நாகரீகத்தை வரலாற்றை தொ¢ந்து கொள்ள சமஸ்கிருதம் ஏற்ற மொழி என்பதை நம்புகிறீர்களா?

பதில் :- கண்டிப்பாக. எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் எல்லா மொழிகளையும் படித்து விட்டு இதை சொல்கிறேன்னு இல்லை. நான் படித்த மொழிகளில் எனக்கு கண்டிப்பாக இருக்கு. நான் அதை உணர்கிறேன். இதற்கு எதிரணியான கருத்துக்களும் இருக்கு. அதுக்குள்ள நான் போக விரும்பல. ஒரு மொழியின் சிறப்பு என்று ஒன்று உண்டு. ஆங்கிலத்தை கமாண்டிங் லாங்குவேஜ்  என்று சொல்கிறோம். ஒரு பெரிய கூட்டம் இருக்கு. தள்ளுங்கய்யா கொஞ்சம் என்று சொல்வதற்கு பதிலாக அங்கே ஒரு ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினால் உடனடி பலன் இருக்கும்.

அது மாதிரி சமஸ்கிருதம் ஒரு கமாண்டிங் லாங்குவேஜ். ஒரு மொழிக்குரிய சிறப்பில் சமஸ்கிருதம் நிற்கிற இடமே வேற. அந்த மொழி அதனுடைய சிறப்பு அதனுடைய அழகு அதை நெருங்கவே முடியாது. சமஸ்கிருதம் படித்ததினாலேயே ஏன் படித்தோம் என்ற எதிர்வினையான கருத்துக்களையும் நான் அடைந்திருக்கிறேன். அந்த வித சர்ச்சைகளுக்குள் இப்போது நான் போக விரும்பல. ஆனால் அந்த மொழிக்கான வலிமையும் செழுமையும் செறிவும் அலாதியானது. உச்சா¢த்து பார்த்தோமானால் தொ¢யும். வேறு காரணங்களுக்காக சமஸ்கிருதத்தை எதிர்க்கலாம். நான் அதைத் தொடல. நான் மொழியை மட்டும் தொடுகிறேன். அந்த வகையில் சமஸ்கிருதம் எனக்கு இஷ்டமான மொழி. அந்த மொழியை எதிர்ப்பவர்களின் காரணத்தை சாரினு கூட சொல்லலாம். அது மொழியின் தவறல்ல. அந்த மொழியை உபயோகப்படுத்திய மற்றவர்கள் பண்ணிய தவறு அது.

இந்தியாவின் மற்ற மொழிகளின் படைப்புகள் போன்றே சமஸ்கிருத மொழி மூலமாயும் முந்தைய இந்தியாவின் நாகரீகத்தை வரலாரை தெரிந்து கொள்ளலாம்.

தமிழோவியம் :-  ப்ரான்ஸிஸ் பேகான் எழுதிய பேக்கான் எஸ்ஸேஸ் பற்றி உங்களுக்கு உயர்வான மதிப்பீடு உண்டுனு சொல்லி இருக்கீங்க. தமிழ்ல அந்த மாதிரி பார்த்ததில்லைன்னு சொல்லி இருந்தீங்க அதைப் பற்றி சொல்லுங்களேன்?

பதில் :- நான் படிப்பதற்கு மூல காரணமாக எனது தந்தையார் இருந்திருக்கணும்னு எனக்குத் தோணுது. புகுத்துதல்  இல்லாமல் விளையாட்டுத் தனமா அவர் வாசிப்பை எனக்கு சொல்லித் தந்திருக்கணும். அவர் எப்படியோ என்னை எடுத்துக்கிட்டு வந்திருக்கணும்னு நான் நம்புறேன். ஏன்னா சின்ன வயதில் நடந்த எல்லா விஷயங்களும் எனக்கு ஞாபகமில்லை. சில விஷயங்கள் ஞாபகமிருக்கு. அதுல ஒன்னு திடீர்னு வருவார். என்ன ஸ்கூல் பாடம் படிச்சீங்களா இல்லையானு கேட்பார். எல்லாமே விளையாட்டுத் தனமா இருக்கும். புகுத்துறது இருக்காது. ஒரு புக்கை காட்டி இந்த பக்கத்தை உன்னால் எவ்வளவு நேரத்துல வாசிக்க முடியும் என்பார். நான் பார்ப்பேன் எதுக்காக கேட்கிறார்னு எனக்கு தொ¢யாது. கடிகாரத்தை பார்த்து விட்டு இத்தனை நிமிடம் ஆகும் என்பேன். இவ்வளவு நிமிஷத்துல உன்னால வாசிக்க முடியாதோனு கேட்டு வாசிக்க வைப்பார்.

இதெல்லாம் குழந்தைங்ககிட்ட விளையாட்டுத் தனமா சுலபமா வாசிக்க கத்துக் கொடுக்குறதுனு நான் நினைக்கிறேன்.   

இரும்புக்கை மாயாவி மந்திரவாதி மாண்ட்ரெக் காமிக்ஸ் போன்ற எல்லா புத்தகங்களும் எங்க வீட்டில் கிடைக்கும். பினாச்சியோ போன்ற கதைகள் இந்தக் காலத்து குழந்தைகளுக்கு தொ¢யுமானு எனக்கு தொ¢யல. மரக்கட்டையில பொம்மை மாதிரி செய்து மூக்கு முன்னாடி நீண்டு இருக்கும் அந்தக் கதையில. அந்த மாதி¡¢ கதைகளை அப்பா படிக்க ஆர்வத்தை உண்டாக்கினார். இப்ப அதை நான் என்னுடைய பையன் பெண்ணிடம் டெஸ்ட் பண்ணி பார்த்து இருக்கிறேன். இரண்டு பேருமே புக்ஸ் நிறைய படிப்பாங்க.

எனக்கு திருமணமாகிப் போன உடனே என்ன பண்றதுனு எனக்குத் தெரியல. எனக்கு படிப்பில்தான் ஆர்வம்.  திருமணமான உடனே சென்னைக்கு போயிடுறோம். அவர் வேலைக்கு போயிடுவார். நான் வீட்டில் இருக்கும் பொழுது சென்னை பல்கலைக் கழகத்தில் பி.ஏ ஆங்கிலம் படிக்கிறேன்.

சேக்ஸ்பியரை அங்க படிக்கிறேன். பின் பையன் பிறக்குறான். பின்பு மதுரை பல்கலையில் எம்.ஏ. ஆங்கிலம் பண்றேன். அப்போ நான்  வார இதழ்கள் மாத இதழ்களும் படிக்கிறேன். நான் பாடப்புத்தகங்களை படிக்கும் பொழுது சேக்ஸ்பியர் பேகான் பற்றியும் கவிதைகளையும் படிக்கிறேன்.  வித்தியாசம் தெரியுது. ஆர்வம் கூடுது. சேக்ஸ்பியரை மொழிபெயர்க்கும் ஆர்வமும் சேருது. இதுல அப்போ மொழிபெயர்ப்பு  எனக்கு அவ்வளவு விருப்பம். முதன் முதலில் நான் தமிழில் மொழி பெயர்க்க நினைத்தது பிக்மேலியன் பேகான் எஸ்ஸேஸ் தான். இரண்டையும் இன்னும் பண்ணல.

நான் வாசித்த பேகானின் முதல் கட்டுரை சில புத்தகங்கள் சுவைக்கலாம்; சில விழுங்கலாம்; சில புத்தகங்கள் மட்டுமே செரிக்க முடியும் என வரும் 'ஆப் ஸ்டடீஸ்' என்னும் கட்டுரை. அவருடைய கட்டுரைகள் எல்லாமே ஆப் மேரேஜ் ஆப் லவ் என்றே இருக்கும். இத்தனை எழுதிய அவர் பதவியில் இருக்கையில் லஞ்சம் வாங்கிய குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்குப் போனதா படித்த ஞாபகம். சேக்ஸ்பியர் பிக்மேலியன் பேகான் தான் எனக்கு விருப்பம். பிறகு ஆங்கில புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். இப்ப முழுவதும் தமிழை மட்டும் தான் படிக்கிறேன். ஒரே தமிழ் கிறுக்கு பிடித்து அலைகிறேன்.
 
தமிழோவியம் :- சேக்ஸ்பியர் பயன்படுத்திய மொத்த வார்த்தைகள் மொத்தமே 24,000 தான். ஆனால் அவர் சாதித்ததைது வரை யாரும் சாதிக்கவில்லை என்று முத்துலிங்கம் போன்றவர்கள் சொல்கிறார்கள். இது பற்றி?

பதில் :- அவர் காலத்திலும் சரி இப்ப வரைக்கும் சரி அவரின் படைப்பின் வெற்றியை யாரும் தொட முடியலங்கிறது உண்மை. மனித மனசு இருக்குதில்லியா? அதனுடைய எல்லா பரிமாணத்தையும் தன்னுடைய படைப்பில பின்னி எடுத்திருப்பாரு. இன்னொன்று அவருக்கு ஜனங்களின் பல்ஸ் நல்லா தொ¢ஞ்சுருக்கு. பா¢ச்சார்த்தாக எல்லாமே செய்து இருக்கார். வேற வேற மொழிகளில் இருந்து எடுத்து ஆங்கிலத்தில் கையாண்டிருக்கார். அது தான் அவருடைய வெற்றிக்கு காரணமாக இருக்கும்னு நான் நினைக்கிறேன். அவருடைய ஒவ்வொரு படைப்பையும் சொல்றப்ப இவரின் இந்தப்படைப்பு  இந்த மொழியில் இருந்து இந்த படைப்பை ஆதாரமாக வைத்து இருக்குதுனு ஆராய்ச்சிகள் தனி தனியாகவே சொல்லப்பட்டிருக்குது. அவர் அப்படி மற்ற படைப்பிலிருந்து ஆங்கிலத்தில் தன்னுடைய படைப்பில் கொண்டு வந்து கொடுத்திருக்கார். தமிழ் சினிமால இரட்டை வேடத்தை  பார்க்குறோம். ட்வெல்த் நைட்டில் சேக்ஸ்பியர் பண்ணிணது. ஜூலியஸ் சீஸரின் நெருங்கிய நண்பன் ப்ரூட்டஸ் எதிரிகளோட சேர்ந்து சீஸரைக் கொல்ல குத்துறான். யூ டூ ப்ரூடஸ்? அப்படினு சீஸர் கேட்கிறார். தமிழ்ல இப்ப உள்ள குழந்தைங்க கூட சொல்றாங்க. யூ டூ ப்ரூடஸ்னு சொல்றாங்க. தமிழில் என்ன எட்டப்பனா நீ? என்று சொல்ற மாதி¡¢. அவரோட இந்த வேலையை முறியடிக்க மற்ற யாராலயும் இன்னும் முடியல.

இப்ப வரைக்கும் எத்தனையோ திறனாய்வுகள் ஷேக்ஸ்பியர் படைப்பு குறித்தும் ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்புகளில் யார் என்பது குறித்தும் பல படைப்புகள் இன்னும் வந்துட்டே இருக்குது. இதுவே சாதனைதானே. பின்னால் எழுத வந்தவங்களுக்கு அவர் ஆதர்ஸமா இருந்திருக்கார்.

ஷேக்ஸ்பியர் படைப்பு குறிச்சு இன்னும் 2 மணிநேரத்துக்கு மேல பேசலாம்.
 
தமிழோவியம் :- பெண்கள் முக்கியமாக படித்து முன்னேற வேண்டும். ஒரு பெண் நன்றாகப் படிப்பது பத்து ஆண்களுக்கு சமமானது. எதிர்காலத்தில் பெண்கள் கட்டுப்பெட்டியாக இல்லாமல் எல்லாத் துறைகளிலும் முன்னேற வேண்டும். பொதுப் பணியிலும் தேசப் பணியிலும் பெண்கள் பங்கு கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நமது நாடு விரைவில் சுதந்திரம் பெறவும் பல துறைகளிலும் முன்னேற முடியும் என்று தங்கள் தாத்தா காந்தி அரங்கசாமி ராஜா 1920களில் கூட்டங்களில் பேசி இருக்கிறார். அவை தவிர காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்கள் அன்னிப்பெசன்ட் அம்மையாரை அழைத்து வந்து ஹோம்ரூல் இயக்கத்தை எல்லாம் நடத்தி இருக்காரு. காந்தி கொள்கையை பரப்பினதால் அவருடைய அரங்கசாமி என்கிற பெயருக்கு முன்னாடி காந்தி அரங்கசாமி ராஜா என்று பொதுமக்களே சேர்த்து கூப்பிட்டு இருக்காங்க. இது எல்லாம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. யாரும் மறுக்க முடியாது. இந்த மாதி¡¢ ஒரு மனிதா¢ன் வரலாறு ஏன் வெளி உலகிற்கு அதிகமாக தொ¢யவில்லை. அவருடைய வரலாறுகள் ஒரு குறிப்பிட்ட நூலகத்திலேயே முடங்கிக் கிடப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள். அதற்கான காரணங்கள் என்ன?

(தொடரும்..)

oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |