ஜூலை 21 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
ஹல்வா
டெலிவுட்
கவிதை
பேட்டி
கட்டுரை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : ஞாபகமறதி ஜாஸ்தி?
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முதல்வர் ஜெ எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முழு ஒத்துழைப்புஅளிக்கும் என்று அதன் மாநில தலைவர் சூரியமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு அலுவலர் மாநில மாநாடு விரைவில் நடக்க இருப்பதாகவும் அதில் தமிழக முதல்வர் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இம்மாநாட்டில் மத்திய அரசுக்கு இணையாக 3%சதவீத அகவிலைப்படி வழங்கியதற்கும், 1003 பேரின் டிஸ்மிஸ் காலத்தை பணிக்காலமாகவும் மாற்றியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவுள்ளோம் என்றும் சூரியமூர்த்தி கூறியுள்ளார்.

சூரியமூர்த்தி உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு ஞாபகமறதி அதிகமாகிவிட்டதோ? ஊதிய உயர்வு குறித்து இதே அரசு ஊழியர்கள் போராட்டம் செய்த காலத்தில் டெஸ்மா, எஸ்மா என்று எல்லா மாக்களையும் போட்டு இவர்களை உள்ளே தள்ளியவர் யார்? அரசு ஊழியர்களுக்கு இருந்த பல சலுகைகளையும் பிடிங்கி பல் போன பாம்பாக இவர்களை உலாவவிட்டவர் யார்? டிஸ்மிஸ் செய்தி கேட்டு உயிரை விட்ட ஏகப்பட்ட அரசு ஊழியர்களின் சாவுக்கு காரணம் யார்? சிகரம் வைத்தார் போல அரசு ஊழியர்களை அடக்குவதற்காக ஏகப்பட்ட வேலையில்லாப் பட்டதாரிகளை தற்காலிக ஊழியர்களாக மாற்றி அழகு பார்த்துவிட்டு தன் தேவை தீர்ந்ததும் அவர்களை சக்கை போல தூக்கி எறிந்தவர் யார்? போன்ற ஏகப்பட்ட யார்களுக்கு சொந்தக்காரர் நம் தமிழக முதல்வர் ஒருவரே.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கஜானா காலி என்று கூறி அரசு ஊழியர்கள் மீது ஏகப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுத்த அதே முதல்வர் இன்று வரப்போகும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் இவ்வளவு சலுகைகளையும் வாரி இறைக்கிறார் என்பது பச்சைக் குழந்தைக்கு கூட தெரிந்த நிலையில், தங்களிடமிருந்து பறித்த பல சலுகைகளில் சிலவற்றை திருப்பிக் கொடுத்ததற்கே மனம் மகிழ்ந்து முதல்வரைப் போற்றும் சூரியமூர்த்தி போன்றவர்களை என்னவென்பது?

முதல்வர் அறிவிக்கும் ஏகப்பட்ட சலுகைகளைப் பார்த்து கலவரமடையும் எதிர்கட்சிகளும் அரசு ஊழியர்களை கவரும் வகையில் தங்கள் பங்கிற்கு ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசப்போகிறார்கள். வரப்போகும் தேர்தலில் ஜெ ஜெயித்தால் மீண்டும் தன்னுடைய டிரேட்மார்க்கான ஏகப்பட்ட "மா" சட்டங்களைக் கொண்டு வந்து அறிவித்த சலுகைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல் திரும்பவும் மக்கர் செய்வார். தோற்றால் - கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது ஜெயித்த தி.மு.க கூட்டணியின் கடமை என்பார். ஆக மொத்தத்தில் கையில் திருவோடு ஏந்தப் போவதென்னவோ அரசு ஊழியர்கள் தான். எனவே அரசு ஊழியர்களே - அவர்களை ஆட்டி வைக்கும் சங்கத் தலைவர்களே!! உங்கள் ஆர்பாட்டங்களை எல்லாம் கொஞ்சம் அடக்கி வையுங்கள். நிஜம் சீக்கிரம் வெளிவரும்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |