ஜூலை 21 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
ஹல்வா
டெலிவுட்
கவிதை
பேட்டி
கட்டுரை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : உப சேவைகள் - 2
- எழில்
| Printable version | URL |

 இவ்வாரம் மேலும் சில உப சேவைகளைப் பற்றிக் காண்போம்.

அழைப்பு நிராகரித்தல் (Call Barring)

உங்கள் செல்பேசியைப் பிறர் பயன்படுத்தா வண்ணம் தடுக்கவும், அழைப்புகளின் அளவைக் கட்டுப்படுத்தவும் அழைப்பு நிராகரித்தல் சேவை உதவுகிறது . உங்களுக்கு வரும் அழைப்புகளையும் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். நீண்ட தூர அழைப்புகளை ஏற்படுத்தும் (ISD) வசதியையும் நிறுத்தி வைக்க முடியும். அழைப்பு நிராகரித்தல் பல வகைப்படும். ஒவ்வொன்றாய்க் காண்போம்.

1. எல்லா வகை அழைப்புகளையும் நிராகரித்தல் ( Barring All calls) இவ்வசதியை ஏற்படுத்திக்கொண்டீர்களேயானால் உங்களால் எந்த எண்ணையும் அழைக்க முடியாது. யாரும் உங்களுக்கு அழைப்பு ஏற்படுத்தவும் முடியாது.

இச்சேவையை ஏற்படுத்த *330* நிராகரித்தல் குறியீடு# என்று அழுத்தி அனுப்புங்கள் . நிராகரித்தல் குறியீடு என்பது நான்கு அல்லது எட்டு இலக்க எண், உங்களது சேவை வழங்குனரிடமிருந்து நீங்கள் இவ்வெண்ணைப் பெற்றுக்கொள்ளலாம் .

இச்சேவையை நீக்க : #330 * நிராகரித்தல் குறியீடு# வசதி உள்ளதா

/இல்லையா என அறிய : *# 330#

2. வருகின்ற எல்லா அழைப்புகளையும் நிராகரித்தல் (Barring Incoming calls) இவ்வசதி மூலம் உங்களுக்கு வரும் அழைப்புகளை மட்டும் நிறுத்திக்கொள்ளலாம்; உங்களால் எல்லா எண்களையும் அழைக்க முடியும். இவ்வசதியை நீங்கள் ஏற்படுத்திக்கொண்டால், உங்களை அழைப்பவர்களுக்கு நெட்வொர்க் "அழைத்த எண்ணைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையைச் " சொல்லிவிடும்.

இந்த உப சேவையை ஏற்படுத்தும் குறியீடு : *35*நிராகரித்தல் குறியீடு #

இச்சேவையை நீக்க : #35 *நிராகரித்தல் குறியீடு#

வசதி உள்ளதா /இல்லையா என அறிய: *#35#


3. அழைப்பு ஏற்படுத்துவதை நிராகரித்தல் (Barring Outgoing calls) இவ்வசதியயை ஏற்படுத்திக் கொண்டால் எந்த எண்ணையும் உங்களால் அழைக்க முடியாது. ஆனால் உங்களுக்கு வரும் அழைப்புகளைப் பெற்றுப் பேசத் தடையில்லை . நீங்கள் அறியா வண்ணம் உங்கள் செல்பேசியினைப் பிறர் உபயோகித்துப் பேசுவதைத் தடை செய்ய இச்சேவை பெரிதும் உதவும்.

இந்த உப சேவையை ஏற்படுத்தும் குறியீடு : *333*நிராகரித்தல் குறியீடு #

இச்சேவையை நீக்க : #333 *நிராகரித்தல் குறியீடு#

வசதி உள்ளதா/இல்லையா என அறிய: *#333#

4. வெளிநாட்டு அழைப்பு ஏற்படுத்துவதை நிராகரித்தல் (Barring Outgoing International calls) இவ்வசதியை ஏற்படுத்திக் கொண்டால் வெளிநாடுகளுக்கு அழைப்பு ஏற்படுத்திப்பேசுவது தடை செய்யப்படும். உள்ளூர் எண்களை அழைத்துப் பேச எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை .

இந்த உப சேவையை ஏற்படுத்தும் குறியீடு : *331*நிராகரித்தல் குறியீடு #

இச்சேவையை நீக்க : #331 *நிராகரித்தல் குறியீடு#

வசதி உள்ளதா/இல்லையா என அறிய: *#331#


குறுகிய பயனாளர் குழு (Closed User Group ,CUG) இவ்வசதியை ஏற்படுத்த உங்களது சேவையாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஒரு சிறு குழு ஏற்படுத்தி அக்குழுவில் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொண்டு பேசவோ /அழைப்புப் பெறவோ இதன் மூலம் வசதி ஏற்படுத்திக் கொள்ளலாம். இக்குழுவிற்கென ஒரு எண் வழங்கப்படும்(CUG index) . நீங்கள் அழைப்பு ஏற்படுத்த முயற்சிக்கையில் நீங்கள் அழைக்கும் எண் இந்தக் குழுவினைச் சேர்ந்ததாக இருந்தால் மட்டுமே உங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும் . அதே போல் நீங்கள் இடம் பெற்றிருக்கும் குழுவிலுள்ளவர்கள் அழைத்தால் மட்டுமே அவ்வழைப்பு உங்களுக்குத் தெரிவிக்கப்படும். அலுவலகங்கள் தங்கள் பணியாளர்களுக்கு இவ்வகை வசதி ஏற்படுத்தப்பட்ட செல்பேசிகளை அளித்து , செல்பேசிச் செலவினை வெகுவாய்க் கட்டுப் படுத்த இயலும்.

கட்டண அறிவிப்பு (Advice of Charge, AoC) முன்பணம் செலுத்திச் சேவை வாங்கியிருக்கும் செல்பேசிகளுக்கு இச்சேவை அவசியம். நம் ஊர்களில் ஒவ்வொரு அழைப்பு முடிந்தவுடன் இன்னும் எவ்வளவு பணம் மீதி உள்ளது என்பதை ஒரு குறுந்தகவல் மூலம் நெட்வொர்க் தெரிவிப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும் . கட்டண அறிவிப்பு உப சேவையும் இது போலத்தான். ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு கட்டணம் , எவ்வளவு பணம் உங்களது கணக்கில் உள்ளது போன்ற தகவல்கள் ஸிம் அட்டையில் சேமித்து வைக்கப்படும். ஒரு அழைப்பு ஏற்படுத்திப் பேசி முடித்தபின் எவ்வளவு செலவானது என்பதை செல்பேசியே கணக்கிட்டுக் கொள்ளும் . பின்னர் கட்டண விபரங்களை செல்பேசித்திரையில் தெரிவிக்கும். அல்லது இதற்கென இருக்கும் பட்டியைச் சுட்டி , நீங்கள் கட்டண விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் இந்தியாவிலுள்ள செல்பேசி நெட்வொர்க்குகள் இச்சேவையைப் பயன்படுத்துவதில்லை . குறுந்தகவல் வழிக் கட்டண அறிவிப்பு முறையையே பின்பற்றுகின்றன.

இதுவரை குறிப்பிட்ட உப சேவைகளைத் தவிர சேவையாளர் வழங்கும் ஒரு சில உப சேவைகளும் உண்டு. இச்சேவைகள் எல்லா நெட்வொர்க்குகளுக்கும் பொதுவானதல்ல . அமைப்பிலாத உப சேவைகள் (Unstructured Supplementary Services Data , USSD) என்றிதற்குப் பெயர் . ஒவ்வொரு வலையமைப்பிற்கும் இது வேறுபடும். உதாரணமாய் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்குத் தனியாக ஏதேனும் உப சேவையை வழங்கலாம் . *100# என்று அழுத்திச் செலுத்தினால் அன்றைய வெப்ப நிலையைத் தெரிவிக்கும்படி அமைத்திருக்கலாம். அல்லது *99# என்று அழுத்திச் செலுத்தினால் இன்னும் எவ்வளவு கட்டணம் மீதியுள்ளது என்று தெரிவிக்கலாம். ஜி எஸ் எம் சேவைகளின் பொதுவான உப சேவைகளோடு இவ்வகை உப சேவைகளும் பயனாளர்களிடையே வரவேற்புப் பெற்றுள்ளது.சந்தை நிலவரம்

சென்ற காலாண்டின் வரவு செலவுக்கணக்குகளை எல்லாக் கைக்கருவி தயாரிப்பாளர்களும் வெளியிட்டுள்ளனர். செல்பேசி விற்பனை சென்ற காலாண்டில் ஏறுமுகமாகவே இருந்திருக்கிறது. செல்பேசியின் விற்பனை இனி வரும் ஆண்டுகளிலும் ஏறுமுகமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.விற்பனையில் வழக்கம் போல் நோக்கியா முதலிடம் வகிக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் முடிய உள்ள சென்ற காலாண்டில் அது 60 மில்லியனுக்கும் மேலான செல்பேசிகளை விற்பனை செய்துள்ளது. சென்ற வருடம் இதே காலாண்டில் செய்த விறபனையை விட 17 சதவீதம் இவ்வருடம் அதிகம். மோடரோலா 33 மில்லியன் செல்பேசிகள் விற்று இரண்டாவது இடத்தைத் தக்க வைத்திருக்கிறது, மூன்றாம், நான்காம் ஐந்தாம் நிலைகளில் முறையே ஸாம்ஸங், எல்ஜி மற்றும் ஸோனி எரிக்ஸன் ஆகிய நிறுவனங்கள் வருகின்றன. இம்மூன்று நிறுவனங்களும் இந்தக் காலாண்டில் லாபம் பார்த்தாலும் சென்ற வருடம் இதே காலாண்டை ஒப்பிடுகையில் லாபம் சற்றுக் குறைவுதான். ஸோனி எரிக்ஸன் 11.8 மில்லியன் செல்பேசிகளையும் எல்ஜி 14 மில்லியன் செல்பேசிகளையும் சென்ற காலாண்டில் விற்பனை செய்துள்ளன. சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டியில் , நோக்கியாவும், மோடரோலாவும் செல்பேசி விலையைக் குறைத்து விற்க ஆரம்பித்துள்ளன, இவ்விலைக்குறைப்பு மற்ற நிறுவனங்களின் விறபனையை வெகுவாகப் பாதித்துள்ளது.

சந்தையில் விற்கப்படும் செல்பேசியின் நிலவரம்: (அதாவது 100 செல்பேசிகள் விறகப்பட்டால் அவை எந்த நிறுவனத்தின் செல்பேசிகள் என வகைப்படுத்தல்)

நோக்கியா: 33 %

மோடரோலா : 18 %

ஸாம்ஸங் : 13%

எல்ஜி : 8 %

ஸோனி ஏரிக்ஸன்: 7 %

இந்த வருடம் மட்டும் 760 மில்லியன் செல்பேசிகள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 2009 ஆம் வருடம் இந்த அளவு ஒரு பில்லியன் என்ற அளவை எட்டும் என்றும் , இந்தியா மற்றும் சீனாவில் செல்பேசி விற்பனை இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்றும், சந்தையைத் தீர்மானிப்பதில் இவ்விரு நாடுகளும் முக்கிய இடம் வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தை ஒரு நிறைவு நிலையை எட்டி விட்டது (அதாவது ஒருவருக்கு ஒரு செல்பேசி என்ற நிலையை ஏற்கனவே எட்டி விட்டது). இந்தியாவில் பத்து பேருக்கு ஒருவர் செல்பேசியைப் பயன்படுத்துகிறார். சீனாவில் எட்டு பேரில் ஒருவரிடம் செல்பேசி உள்ளது.

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |