ஜூலை 21 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
ஹல்வா
டெலிவுட்
கவிதை
பேட்டி
கட்டுரை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : மருந்து குறிப்பு
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

தலைவலிக்கோர் மாத்திரை
தடுமனுக்கோர் மாத்திரை
தவறுதலா துன்னுப்புட்டா
தர்மலோக யாத்திரை

என்பது வேடிக்கையாக இருப்பினும் கண் சரியாக தெரியாத முதோரிடம் கேட்டால் தெரியும் அதில் எத்தனை உண்மை என்பதை. உடல் நலம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வது எல்லோருடைய உரிமையும் ஆகும். மருத்துவரின் குறிப்புக்கள், எப்படி மருந்தை 4 வேளை எடுத்துக்கொள்ளா வேண்டும் போன்ற குறிப்புகளை பின்பற்ற நோயாளிக்கும், இவர் நாம் சொன்னதை சரியாக புரிந்து கொண்டாரா என்பது மருத்துவருக்கும் தெரிய வேண்டியது முக்கியம்.

  •  உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆபத்தை தருவது.
  •  கிட்டதட்ட $10 பில்லியன் ஒரு வருடத்திற்கு செல்வை வரவழைப்பது.
  •  இரத்த பரிசோதனை போன்றவற்ரால் கண்டுபிடிக்க முடியாது.
  •  பல உயிர்களை குடிப்பது.
  •  இன்னமும் மெத்தனமாக இதன் சக்தியை புரியாமல் இருப்பது.


இது எது என்று கேட்டால், குறைந்த உடல் நலன் பற்றிய அறிவே அகும்( Low Health literacy). நிறைய மருத்துவர்கள், தன்னார்வ தொண்டர்கள்,இது ஒரு தொற்றுநோயாக பரவுவதை சொல்கிறார்கள்.

உடல்நல அறிவு என்றால் என்ன? ஒரு மனிதனால் மருத்துவர் சொல்வதை புரிந்து கொள்வதும், அவர் தரும் குறிப்புகளாஇ படித்து அதை கிரகிக்க கூடிய அறிவும் ஆகும். இதற்கும் கல்லூரி படிப்பிற்கும் சம்பந்தமே இல்லை. மெத்த படித்த மேதாவிகளே பல சமயங்களில் தவறுதலாக புரிந்து கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்திருகிறார்கள்.

உலகில் உள்ள நோயாளிகள் பலரும் இந்த அபாயத்தில் இருக்கிறார்கள். தற்காலத்தில் மருத்துவ செய்திகள் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக, சிக்கலாக இருக்கின்றன. நிறைய செய்திகள், தொழில் நுட்பங்கள் இதில் எது சரி தவறு என்று எதுவுமே சரியாய் புரிவதில்லை.

மருத்துவர்களும் அதிக நேர கட்டுப்பாட்டில் இருப்பதாலும், காப்பீடு சட்ட சிக்கல் இவை தவிர்க்க அதிக சோதனைகள் என எல்லாமே குழப்ப மயம்.அவசரத்தில் நோயாளிக்கு புரிந்ததா இல்லையா என்பதை கண்டு கொள்வதில்லை. அதேபோல நோயாளிகளும் இனையத்தில் படித்தது, திரைப்படத்தில் பார்த்தோ, விளம்பரத்தில் வருவது என தேவைக்கு அதிகமாக செய்திகளை குவித்து கொண்டு தெரிந்தவர் மாதிரி இருப்பதும், இன்னும் சிலர் கேட்க சங்கோசப்பட்டு வாளா இருப்பதும் உண்டு.சரியாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருப்பின் பல விளைவுகள் வரும்.

உதாரணமாக அண்டிபையாட்டிக் சாப்பிட்டால் பால் அருந்த வேண்டும். ஒரே நேரத்தில் மறக்காமல் சாப்பிட வேண்டும். மருந்தின் அளவு இரத்ததில் சரியாக சமநிலையில் இருக்க வேண்டும். 8 மணிக்கு ஒருமுறை என்றால் 8 மணிக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல முழுதும் உட்கொள்ள வேண்டும்.என்னப்பா, இருமலா சளி வருதா, எரித்ரோமய்சின் 4 சாப்பிடு என்பதெல்லாம் அதற்கான எதிர்சக்தியை அதிகரிக்கிறது. இரும்பு டானிக் சாப்பிட்டால், விடமின் சி கட்டாயம் வேண்டும். இல்லைஎனில் அது உறிஞ்சப்படாது.

மிக சிறிய எழுத்து அமைப்பில் மருந்தின் பெயர் இருந்தால், எல்லா மாத்திரைகளும் ஒரே நிறத்தில் இருந்தால் பல மாத்திரைகள் எடுத்து கொல்ளும் முதியவர் தவறான மருந்தை எடுத்து கொள்ள சாத்தியமாகிறது.” ஏன் எழவெடுக்கிற, மாத்திரைதான் வாங்கி அழ முடியும், எடுத்தா தர முடியும் என்று சத்தம் போடுவதை கேட்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு தேவை ராஜமரியாதை இல்லை. தவறாக எடுத்து கொண்டுஇறந்து விடுமோ என்ற பயம்தான்.

கண்ணும் தெரியாமல், காதும் கேளாமல் தவறிழைத்து விட்டு இன்னும் கஷ்டம் தரப்போகிறோமே என்ற பயம்தான். இதில் பெண்கள் பாடு இன்னும் திண்டாட்டம். ஹார்மோன்கள் நின்று எலும்பின் சக்தி குறைந்து, சிறுநீர் அடக்க மாட்டமல், கருப்பை சற்றே வெளிவர படும் அவஸ்தைகள்….

இதில் படிக்க தெரியாதவர்கள் மட்டும் முட்டாள் என்று எண்ணாதீர்கள். படித்தவர்களே மிகவும் கடினமான பரிசோதனைக்கு செல்லும் போது தவித்து போவார்கள். அதுவும் ஆயிரத்தெட்டு இணைக்கப்பட்டு பயமுறுத்தும். அதில் ஒன்று இரத்தம் செலுத்த, ஒன்று மருந்து செலுத்த ஒன்று சலைன் செலுத்த என்றாலும் பயந்துபோவார்கள். இதில் சரியாக சொல்ல வேண்டிய கட்டாயம் அம்மருத்துவருக்கு உண்டு.அதேபோல அமெரிக்காவில் உள்ள 44 மிலியன் பேருக்கு 4அம் வகுப்புக்கு மேல் கிரகிக்க சக்தி இல்லை என்பதும் 2 சிலபிள் வார்த்தைகளுக்கு மேல் புரியாது என்பதும் தெரிய வந்திருகிறது.பள்ளி அல்லது கல்லூரியில் படித்திருந்தால் நல்ல புரிந்து கொள்ளும் திறன் இருக்கும் என்பதும் ஒரு தவறான கருத்து. அதிலும் மருத்துவ கருத்துக்கள் இயற்கையிலேயே கடினம் என்பதும், மனம் கவலைப்படும் போது புரிகின்ற திறன் குறைவு என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள். நீரிழிவு, ஆஸ்த்மா, இரத்த கொதிப்பு போன்ற உயிர்கொல்லி நோய்மருந்துகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு பலர் உயிர் இழக்கிறார்கள். 50% நோயாளிகள் சரியாக மருத்துவரின் குறிப்புகளை பின்பற்றுவதில்லை.

அமெரிக்காவில் உள்ள 33% ஆசியர்கள் இதில் பலவித தவறுகளை செய்கிறார்கள். இந்நிலையில் மருத்துவரின் மொழியும் நோயாளியின் மொழியும் மாறுபட்டால் எப்படி இருக்கும்? உலகையே ஆட்டிவைக்கும் நிலையில் மருத்துவ உலகு சென்று கொண்டிருக்கிறது. இப்போது சற்றே விழித்து கொண்டு அமெரிக்கா, கனடா போன்ற இடங்களில் மொழி பெயர்ப்பாளர்களும், 4 ஆம் வகுப்பு நிலையில் புரியும் வண்ணம் எழுதப்பட்ட கையேடுகளும், எழுத்து 20 வடிவில் இருப்பதும் நடக்கிறது.

அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் போது நமக்கிருக்கின்ற அவஸ்தையில், கவலையில் காத்து இருக்கின்ற எரிச்சலில் அவர்கள் நீட்டும் படிவத்தில் கையெழுத்து போடுகிறோம். உயிர் போனாலென்ன, சட்டப்படி எல்லாம் சரியாய் இருக்கிறதா என்றூ கடைசிவரை படிப்பதில்லை. இந்த கட்டளைகள் அறிவுறைகள் எழுத்துரு வடிவம் 8 இல இருப்பதும் படிக்க கஷ்டமாக இருக்கும். எல்லாம் முடிந்து வீடிற்கு வந்த 10 நாளில் ஒரு கடிதம் வரும். நீங்கள் 1000$ கட்ட வேண்டும் என்று. என்னுடைய காப்பீடு தரவில்லையா என்றால், நீங்கள் தான் கையொப்பமிட்டிருக்கிறீகள். வந்து பாருங்கள். காப்பீடு தராத போது வேறு எந்த முயற்சியும் வேண்டாம். நான் பணம் கட்டுகிறேன் என்று” பார்க்கும் போது மயக்கமாக வரும்.
இன்னும் சிலர் மருத்துவனையின் அறுவை சிகிச்சை போது ஏதும் பக்க விளைவுகாள் வந்தால் நான் பொறுப்பாளி என்று விசாரிக்காமலேயே கையெழுத்திடுகிறார்கள்.

மருந்து குறிப்பாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் பெற்று கொள்ளும் போது மருந்து தருபவர் எல்லா குறிப்புகளும் சொன்னார், நான் அதை புரிந்து கொண்டேன் என்று கையொப்பம் இட வேண்டும். இது மருந்து கடையை ஒரு சட்ட பிரச்சினையிலிருந்து காப்பாற்றும். நாம் அ வரிடம் எந்த கேள்விகளும் கேட்காமல் கையொப்பமிட்டு வந்து கஷ்டப்படுவோம். உதாரணமாக இரத்த அழுத்ததிற்கு மருந்து எடுத்து கொண்டால், இந்த மருந்தை உட்கொண்டால் அது பக்க விளைவுகளை தரும் என்று வைத்து கொள்வோம். நாம் அதை சொல்லாமல் மருந்தும் பெற்று கொண்டுவிட்டு பக்க விளைவுகளால் துன்பப்பட்டால் யார் பொறுப்பு?

நோய் நாடி நோய் முதல் நாடி
வாய் நாடி வாய்ப்ப செயல்

என்பது உண்மைதான் என்றாலும் 2 மணிக்குள் 200 நோயாளிகளை சந்திக்கும் அவசரத்தில் அல்லவோ மருத்துவர் இருக்கிறார். சமீப காலமாக அமெரிக்காவில் கார்போஹ்ய்ட்ரேட் உறிஞ்சும் சக்தியை தடுத்து உடல் இளைக்க சில உணாவு பொருட்கள் வந்துள்ளன. அதேபோல கொழுப்பை விரைவாக செரிக்க வைக்க சில உணவுப்பொருட்கள் உண்டு. இவை அமெரிக்க மருந்து சட்டதின் கீழ் அனுமதி பெறுவதில்லை. உணவுதுறையின் கீழ் அனுமதி பெறுவதால், இவற்றிற்கு எளிதில் அனுமதி கிடத்துவிடுகிறது. இந்த சில உணவுப்பொருட்களால் உயிர் இழந்தவர்கள், மற்றும் நரம்பு தொல்லையால் அவஸ்தை படுகிறவர்கள் ஏராளம். இவையும் பரவலாக சொல்லப்படுவதில்லை.

இதைப் பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |