ஜூலை 21 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
ஹல்வா
டெலிவுட்
கவிதை
பேட்டி
கட்டுரை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
டெலிவுட் : சுப்ரமணியை அடிக்கணும்
- சில்லுண்டி [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

காமிரா லாங் ஷாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. சைடு பாத்திரங்கள் ஏதோ கேட்க, சிலிர்த்துக்கொண்டு எழும் ஹீரோவை குளோஸப் ஷாட்டில் காமிரா லவுட்டுகிறது. பன்ச் டயலாக் திருவிழா ஆரம்பம். 'மனைவி முக்கியமா தாய் முக்கியமான்னு கேட்டா மனைவிதான் முக்கியம்னு சொல்வேன். ஏன்னா எல்லா மனைவிக்குள்ளேயும் ஒரு தாய் உண்டு' அட்ரா சக்கை.. அட்ரா சக்கை! ஞாயித்துக்கிழமை சாயங்காலம் சிட்டிஸன்னு ஒரு படம். நாயகன், பாட்ஷா படத்துக்கெல்லாம் டயலாக் எழுதின பாலகுமரன்தான் இதுக்கும் டயலாக் எழுதியிருக்காராம். மேற்சொன்ன டயலாக் மாதிரி ஆங்காங்கே அள்ளிவிட்டிருக்கிறார். படத்தில் காமெடி இல்லாத குறையை போக்குவதற்காகவோ என்னவோ? சாம்பிளுக்கு இன்னொரு டயலாக். 'ஏன் பண்றோம்ங்கிறது முக்கியமில்லை... எதுக்காக பண்றோங்கிறதுதான் முக்கியம்'. தேவுடா, காப்பாத்து!

ஜெயசித்ராவை ஞாபகமிருக்கிறதா? நாப்பதை நெருங்கும் ஆசாமிகளுக்கு ஜெயசித்ரா ஒரு காலத்தின் கனவுக்கன்னி. இப்போது சின்னத்திரையில் பயமுறுத்துகிறார். டி.டியில் தினமும் எட்டரை மணியிலிருந்து ஒன்பது மணிவரை மெகா தொடரில் சகலமும் ஜெயசித்ராதான். காமிரா மத்த விஷயங்களை பற்றி கவலையேபடாமல் அம்மிணியையே குளோஸப்பில் உரித்து எடுக்கிறது. குடும்ப தயாரிப்பாம்! சீரியலில் அம்மிணியின் சொந்தங்களிலிருந்து வீட்டு வேலைக்காரர் வரை சகலரும் நடிக்கிறார்கள். நான் பார்த்த எபிஸோடில் யாரோ ஜெயசித்ராவை போனில் மிரட்டிக்கொண்டிருந்தார்கள். மாமியாராக இருக்கலாம். கேபிள் கனெக்ஷன் இல்லாதவர்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

கே டிவியில் 'பிரியாத வரம் வேண்டும் படம்' காதலுக்கு மரியாதை ஸ்டைலில் மலையாளத்து டைரக்டர்கள் ஒரு அரை டஜன் படமாவது பண்ணியிருப்பார்களா? இருக்கலாம். இது கூட அந்த ரகம் மாதிரிதான். வருஷக்கணக்காக நெருக்கமாக இருந்துவிட்ட நண்பர்களிடையே காதல் வருகிறதாம். காதல் வந்தால் சந்தோஷம் வருமென்று யார் சொன்னா? அழுது தீர்க்கிறார்கள். சீரியலே தேவலை. இப்பவே இப்படியென்றால் நிச்சயம் கிளைமாக்ஸில் கதறி கதறி அழுவார்கள் என்று நினைத்தால் கூலாக படிக்கட்டிலிருந்து எழுந்து வருகிறார்கள். படத்தில் அதுதான் எதிர்பாராத திருப்பமாம்!

ஒரு பத்து வருஷமாக நடந்து வரும் விஷயம். எல்லா டிவியும் மாசாமாசம் இந்தப் படத்தை காட்டியே ஆகணுங்கிற அக்ரிமெண்ட் இருக்குது போலிருக்கு. இந்த வாரமும் அ·தே. எங்கெங்கு காணினும் 'ராஜாதிராஜா'டா! ஒரு காமெடி படத்துக்கு டயலாக் எழுதுவது ரொம்ப கஷ்டமான விஷயம். சிரிக்க வைக்க தெரியணும். இல்லாட்டி கடிக்கவாது தெரியணும். ஜனகராஜ் பேசுவதெல்லாம் வடைகறி, ரிக்ஷா ரொம்ப சர்வ சாதாரண வசனங்கள்தான். அவ்வப்போது பல்டியடிக்கிறார், வசனத்திலும்தான். நடுநடுவே பட்லர் இங்கிலீஷ். Nonsense of the Stupid of the Idiot. அர்த்தம் யாருக்கு வேணும்? வசனம் எழுதியவர் ·புல் பார்மில் இருந்திருக்கவேண்டும். அதே படத்தில் இன்னொரு காட்சி.

'மாமா, இதை கையில் கட்டிக்கிட்டா யாரை வேணும்னாலும் அடிக்கலாம்'

'காங்கேயன்?'

'ம்...'

'சுப்ரமணி?'

'யாரு அது?'

'பக்கத்து வூட்டு நாய்'

'ஐயோ, மாமா யாரை வேணும்னாலும் அடிக்கலாம்'

'மொதல்ல அந்த சுப்ரமணியை அடிக்கணும்'

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |