ஜூலை 22 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
வானவில்
திரைவிமர்சனம்
சிறுகதை
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
இசை உலா
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : விமர்சனங்களும் விளக்கங்களும் - I
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு காந்திஜியிடமிருந்து வரும் ரீயாக்ஷனை எந்த தலைவரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது. ஓன்று விமர்சனங்களை மறுத்து பக்கம் பக்கமா பதில் எழுதுவார் அல்லது விமர்சனங்களை அப்படியே ஒப்புக் கொள்வார். உடனடியாக விஷயத்தை அரசியலாக்குவது அல்லது நோ கமெண்ட்ஸ் சொல்லி ஒதுங்கிக் கொள்ளும் இந்த காலத்து தலைவர்களை காந்திஜியுடன் பக்கத்தில் வைத்து பார்க்கவே முடியாது. பார்க்கவே கூடாது.

  காந்திஜியை பற்றிய காட்டமான விமர்சனங்கள் பெரும்பாலும் கடிதங்களாக அவரது பெயருக்கு மட்டுமே அஞ்சலில் வரும். அத்தகைய தனிப்பட்ட விமர்சன கடிதங்களையும் யாரிடமிருந்து வந்தது என்கிற விபரங்களை எடுத்துவிட்டு பகிரங்க கடிதமாக்கிவிடுவார். இன்று காந்திஜியை பற்றி உலாவரும் வதந்திகளும் குற்றச்சாட்டுகளும் அவரது காலத்திலேயே இருந்திருந்தால் தகுந்த விளக்கத்தை அவரே கொடுத்திருப்பார்.

  40களில் இந்திய சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்தபோது காந்திஜியின் போராட்ட முறையை பலரும்

  ஸ்பைடர்மேன்

  Spiderman 2 Filming at Newyorkவெள்ளித்திரையில் 'சர் சர்' என்று தனது வலையை விரித்து பறக்கும் ஸ்பைடர்மேன் படப்பிடிப்பில் (மூன்று கனமான கயிற்றில்) எப்படி தொங்குகிறார் பாருங்கள்.

  இந்தப் புகைப்படம் நியுயார்க்கில், ஸ்பைடர்மேன்-II படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது.

  விமர்சித்தார்கள். அவையெல்லாம் பெரிய விமர்சனக் குரல்கள் அல்ல; வெறும் முணுமுணுப்புகள் மட்டுமே. இருந்தும் காந்திஜியோ மெனக்கெட்டு அவற்றிற்கு தகுந்த விளக்கங்களையும் பதில்களையும் யங் இந்தியா, ஹரிஜன் போன்ற பத்திரிக்கைகளில் எழுதி வந்தார். மதக் கலவரங்கள் போன்ற பிரச்சினைகளில்சமூகப் பிரச்சினைகளை காந்திஜி அணுகும் முறை குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தது 1930களின் இறுதியில் நாடெங்கும் நடந்த மதக் கலவரங்களின் போதுதான். காந்திஜியும் வழக்கம்போல அகிம்சை வழியில் அமைதி காக்கவேண்டும் என்று எழுதி வைக்க அதை தொடர்ந்து முதல் முறையாக காங்கிரஸ் கட்சிக்குள்ளே விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு காந்திஜியும் பதில் சொல்லி எழுதினார்.

  'என் எழுத்துக்களில் இருக்கும் படபடப்பு இன்னும் எனக்குள் இருக்கிறது. கண்டனங்களை கவனமாக படித்த பின்னர் என் வாதத்தை மாற்றுவதற்கான எந்தக்காரணமும் எனக்கு தோன்றவில்லை. நான் எழுதுவது குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட காரியத்தை பற்றியது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. எனக்கு கிடைத்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதினேன். கலகங்கள் சிறிய அளவில் நடந்தன. காங்கிரஸ்காரர்களால் அகிம்சை நெறியில் அவற்றை அடக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

  நான் மிதவாதிகளின் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று வரும் விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. அவர்கள் எனது நண்பர்கள். ஆனால், அவர்களுக்கு பலம் இல்லை. என்னிடம் என்றும் தவறாத பலம் இருக்கிறது. கலகங்கள் நடந்தபோது தவறியது அந்த பலம் அல்ல. ஆக்கப்பூர்வமான உண்மையான பலத்தை கொண்டிருக்கும் அகிம்சையை அதை ஏற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் ஸ்தாபனம் சரியாக அனுசரிக்க தவறியதுதான் காரணம்'  (ஹரிஜன், 2.4.1938 இதழிலிருந்து)

  கட்டுங்கடங்காத தொண்டர் படையை வைத்திருக்கும் எந்த தலைவனுக்கும் காந்திஜியின் கவலையிருக்கும். அப்படியொரு தொண்டர் படை இருப்பதற்கு பதிலாக இல்லாமலேயே இருந்துவிடலாம். தனது இயக்கத்தை சார்ந்தவர்கள் அகிம்சையை சரியாக அனுசரிக்கவில்லை என்று சொன்னதோடு நின்றுவிடாமல் கலவரங்களை கட்டுப்படுத்தமுடியாமைக்கு தன்னுடைய இயலாமையும் ஒரு காரணம் என்பதையும் ஒப்புக் கொள்கிறார் காந்திஜி. 

  கிலாபத் கிளர்ச்சி நடந்த காலத்திலேயே எல்லாவற்றுக்கும் காரணம் காந்திஜிதான் என்று குற்றம் சாட்டி  இந்துக்களும் முஸ்லீம்களும் இருதரப்பிலிருந்தும் காந்திஜிக்கு கடிதம் எழுத ஆரம்பித்தார்கள். அதையெல்லாம் அப்படியே தனது பத்திரிக்கையில் வெளியிட்டு வைத்தார்.29.5.1924 நாளிட்ட யங் இந்தியாவில் காந்திஜி எழுதியதிலிருந்து...

  'மாப்பிள்ளைமார்கள் செய்ததாக சொல்லும் அட்டூழியங்களுக்கும் கிலாபத்து கிளர்ச்சிக்கு பின் ஹிந்துக்கள் நஷ்டமடைந்ததாக சொல்லப்படும் எல்லா கலவரங்களுக்கும் நான்தான் பொறுப்பு என்கின்றனர். கிலாபத் பிரச்சினையில் முஸ்லீம்களுடன் தோழமை கொள்ளுமாறு சொன்னீர்கள். முஸ்லீம்களை ஐக்கியப்படுத்தி விட்டு விழிப்புற்ற முஸ்லீம்களும் இந்துக்களுக்கு விரோதமாக ஜிஹாத்தை ஆரம்பிக்க காரணமாகிவிட்டீர்கள் என்று குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், இருதரப்பிலும் மனக்கசப்பு இருந்தபோதிலும் இரு சாரருமே லாபமடைந்திருக்கிறார்கள். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதை சரியான வழியில் பயன்படுத்துவதில்தான் நமது திறமை இருக்கிறது. கலவரங்களைப் பற்றி நான் தீர்ப்பளிப்பேன் என்று மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். தீர்ப்பளிக்கவும் எனக்கு இஷ்டமில்லை. அப்படியே நான் விரும்பினாலும் என்னிடம் உண்மையான விபரங்கள் இல்லை'

  '....அதிதீவிரமான அகிம்சையை எக்காலத்திலும் நான் இந்தியாவில் போதித்ததில்லை. அந்த புராதனமான தத்துவத்தை மீண்டும் போதிப்பதற்கு எனக்கு தகுதியும் இல்லை. எனது வாழ்க்கையில் பலதடவை என்னால் அனுஷ்டித்து பாராத ஒன்றை மற்றவர்கள் செய்யும்படி நான் சொன்னதே கிடையாது'

  தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் காந்திஜிக்கு நிறைய உண்டு. அரசியல், ஆன்மீகம், சமூகம் என்று பல துறைகளில் உழலும் காந்திஜி எதற்கும் தயாராகவே இருந்தார்.  கடவுளையும் ஒழுக்கத்தையும் அறியாமல் வெளிப்படையாக நாத்திகம் பேசும் போல்ஷிவிசத்தை மதத்தின் பெயரால் காந்திஜி இந்தியாவில் புகுத்துவதாக அமெரிக்கர்கள் எழுதிய கடிதத்துக்கு காந்திஜி,  21.8.1924 நாளிட்ட யங் இந்தியாவில் எழுதிய பதில்...

  'என்னுடைய இயக்கம் நாத்திக இயக்கமல்ல. கடவுளை மறுக்காமல் கடவுளின் பெயரால் பிரார்த்தனையுடன் நடத்த்ப்படும் பொது ஜன இயக்கம்தான். உண்மையில் எனக்கு போல்ஷிவிசத்திற்கு பொருள் தெரியாது'.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |