ஜூலை 22 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
வானவில்
திரைவிமர்சனம்
சிறுகதை
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
இசை உலா
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திரையோவியம் : சினிமா செய்திகள்
  - என்.டி. ராஜன்
  | Printable version |
  அன்பு சகோதரன்

  அர்ஜுன் நடித்து, கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வரவிருக்கிறது அன்பு சகோதரன். தன் சகோதரிக்காக தன் வாழ்வை அர்பணிக்கும் அன்பு அண்ணனாக வருகிறார் அர்ஜுன். இத்திரைப்படத்தைப் பற்றிக் குறிப்பிட்ட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா, ஒரு காட்சியில் அர்ஜுன் எம தர்மனாக வந்து, தன் தங்கையின் ஜாக்கெட்டைத் தராவிட்டால் டெய்லரைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இக்காட்சிக்காக அர்ஜுனுக்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் மேக்-அப் செய்தார்கள். கொளுத்தும் வெய்யிலிலும் நகைகள் மற்றும் ஹெவி-மேக் அப் அணிந்து நடிக்க அர்ஜுன் சற்றும் தயங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணன் - தங்கை பாசபிணைப்புக் காட்சிகள் தவிர படத்தில் நகைச்சுவை காட்சிகளிலும் அர்ஜுன் வெளுத்துவாங்கியிருக்கிறாராம். அர்ஜுனுக்கு ஜோடி மீனா. மேலும் இப்படத்தில் மணிவண்ணன், மோகன் ராஜ், செந்தில், பிரகதி மற்றும் ஷக்கீலாவும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அஜய் குமார் கதைக்கு ஆரூர் தாஸ் வசனமெழுத, S.A. ராஜ்குமார் இசையில் பா.விஜய் பாடல்களை எழுதியுள்ளார்.


  White Rainbow

  இக்கால கைம்பெண்களின் அவல நிலையை சுட்டிக்காட்டும் ஹிந்திப்படம். இப்படத்தை நடிகர் திலகம் சிவாஜியின் மகன் (சகோதரனின் மகன்) திரு.தரண் இயக்கியுள்ளார். இந்தப் படத்தைப் பற்றி அவர் கூறும் போது 'ஒரு பெண் கணவனை இழப்பது அவள் தவறல்ல. பலர் அதை விதி என்கிறார்கள். விதி என்பது மற்றவர்கள் சொல்வதல்ல நாமே ஏற்படுத்திக்கொள்வது.'

  இப்படத்தில் ப்ரியா என்ற பெண் தன் கணவனை இழந்து, அந்த அதிர்ச்சியில் வயிற்றில் வளரும் கருவும் கலைந்து, கணவன் குடும்பத்தினரால் கைவிடப்படுகிறாள். அதனால் வேறு வழியில்லாமல் 'விருந்தாவனம்' (கைம்பெண்களின் நகரம்) வந்து சேறுகிறாள். அங்கே மேலும் மூன்று பெண்களுடன் நட்பாகி எப்படி போராடுகிறாள் என்பதே மீதிக் கதை.

  இப்படம் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெளிவருகிறது. இப்படத்தை 'பிரபு மூவீஸ்' தயாரித்துள்ளது. இப்படத்தில் சொனாலி குல்கர்னி, விரேந்திர சக்சேனா, கௌரவ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

   

  - சென்னையிலிருந்து என்.டி. ராஜன்

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |