ஜூலை 22 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
வானவில்
திரைவிமர்சனம்
சிறுகதை
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
இசை உலா
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  வானவில் : தருமர் கற்ற பாடம்
  -
  | Printable version |

  அந்தக் காலத்தில் மாணவர்கள் குருகுலவாசம் செய்து தங்கள் பாடங்களைக் கற்பது வழக்கம். ஆசிரியருடைய ஆசிரமத்திற்குப் போய் அவருக்கு வேண்டிய தொண்டுகள் செய்வார்கள். குப்பையைப் பெருக்குவார்கள், துணிகளைத் துவைப்பார்கள், ஆசிரியர் தூங்கும் பொழுது காலை பிடித்துவிடுவார்கள்; ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களைக் கற்றுக்கொள்ளுவார்கள். அவைகளை ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்துக்கொள்ளுவார்கள்.

  குருகுலவாசம் இப்படியாக மனத்தையும், அறிவையும் பண்படுத்தும் பயிற்சியாக அமைந்துவிடும்.

  இதைப்போல ஒரு குருகுலத்தில் கல்வி கற்கப் பாண்டவர்கள் போனார்கள். அங்கே அவர்களைத் தவிரப் பதினைந்து மாணவர்கள் இருந்தார்கள். இருபது பேரும் அந்த முனிவரிடம் ஆர்வத்தோடு கல்வி கற்றார்கள். இரண்டு ஆண்டுகள் போனது தெரியாமல் ஓடி மறைந்துவிட்டன. முனிவர் மாணவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பவேண்டிய  நாளும் வந்தது. அவர்கள் என்ன கற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை அறிய விரும்பினார் ஆசிரியர்.

  ஒவ்வொரு மாணவனையும் அழைத்து அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்று கேட்டார். அவரிடம் பயின்ற மாணவர்கள் எல்லோருமே புத்திசாலிகள். இளவரசர்களாக இருப்பவர்கள். அதனால் அவர்களிடம் அபாரமான கல்வி அறிவை எதிர்பார்த்தார் ஆசிரியர்.

  ஒரு மாணவன் முன்னால் வந்து அவன் கற்றுக்கொண்ட சரித்திரப்பாடத்தைப் பற்றிக் கூறினான். இன்னொருவன் அவன் அறிந்திருந்த பூகோளப் பாடத்தை விளக்கினான். இவ்வாறு ஒவ்வொருவரும் தாங்கள் அறிந்தவற்றைப் பற்றி விளக்கிக்கொண்டே போனார்கள்.

  தர்மரின் முறை வந்தது. அவர் தன் கையிலிருந்த ஓலைச்சுவடிக் கட்டை பிரிக்கவே இல்லை. மற்ற மாணவர்களைக் காட்டிலும் அவர் அதிகம் கற்றுக்கொண்டிருப்பார் என்று ஆசிரியர் நினைத்திருந்தார். அதனால் தர்மரிடம், " நீ கற்றுக்கொண்டதைச் சொல்! ஓலைச்சுவடியைப் பிரித்து படி! " என்றார் முனிவர். தர்மர் ஓலைச்சுவடிக்கட்டை பிரிக்கவே இல்லை.

  "ஐயா! நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்றுதான். அதுவே வாழ்க்கையில் என்னக்கு மிகவும் முக்கியமான பாடமாக அமையும்! " என்றார் தர்மர்.

  "ஒன்றே ஒன்றுதானா? இரண்டு ஆண்டுகளாக பாடங்களைப் படித்து கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்றுதானா? " என்று திரும்ப திரும்ப கேட்டார் முனிவர். அவருக்கு தருமரின் பேச்சு ஒன்றும் புரியவில்லை. வயதில் மற்ற மாணவர்களைவிட மூத்தவர். பண்புகளில் உயர்ந்தவர். அவர் இப்படிச் சொன்னால் மற்ற மாணவர்களின் நிலை என்ன?

  "தர்மா! நன்றாகச் சிந்தித்து பதில் சொல்! நான் உன்னிடம் நீ இந்த இரண்டு ஆண்டுகளாகக் கற்றுக்கொண்டது என்ன என்று கேட்கிறேன்! " என்று சீறினார். தர்மரின் முகத்தில் சிறு மாறுதல் கூட இல்லை. " இல்லை ஐயா! நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் ஒன்றே ஒன்றுதான்! " என்றார்.

  முனிவருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. " உனக்கு வெட்கமாக இல்லையா? உன்னைவிட வயதில் இளையவர்கள் எவ்வளவு பாடங்களைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்? எவ்வளவு விரிவாக எடுத்துச்சொன்னார்கள்? நீயும் ஓலைச்சுவடியில் நிறைய குறித்து வைத்திருக்கிறாய். அவற்றை எடுத்தாவது படிக்கக்கூடாதா? இப்போதாவது மனத்தெளிவுடன் பதில் சொல்லு!" என்று கூறினார்.

  "ஐயா! இது உங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதானால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆனா, மிக முக்கியமானதாக நான் கற்றுக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான். மற்ற எதையும் எடுத்துச்சொல்ல நான் விரும்பவில்லை. " என்று மிக உறுதியாகக் கூறினார். இதைக் கேட்டு எல்லா மாணவர்களும் சிரித்தார்கள். முனிவரின் கோபம் எல்லையைக் கடந்தது. கையை நீட்டி தர்மரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

  தர்மரின் கன்னம் சிவந்துவிட்டது. கண்கள் கலங்கிவிட்டன். ஆனால் அவர் தன் அமைதியை இழக்கவில்லை. தலையைக் குனிந்துகொண்டு நின்றார். அவருடைய செய்கை முனிவருக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது. மற்ற கன்னத்திலும் ஓங்கி அறைந்தார். இதைக் கண்ட மாணவர்களுக்குப் பயமாகப் போய்விட்டது. ஆனால் தர்மர் நின்ற நிலையிலேயே பேசாமல் தலையைக் குனிந்துகொண்டு நின்றார்.

  "அப்படி நீ கற்றுக்கொண்ட முக்கியமான பாடம்தான் என்ன? அதை எல்லோருக்கும் புரியும்படி நீயே எடுத்துச்சொல்லு! " என்று இடிபோன்ற குரலில் முழங்கினார் முனிவர்.

  "ஐயா! அதை மட்டும் நான் ஒரு ஓலைச்சுவடியில் எழுதித் தனியாக வைத்திருக்கிறேன். தாங்களே படியுங்கள்!! " என்று அந்தச் சுவடியை எடுத்து முனிவரிடம் நீட்டினார் தர்மர். அதை வாங்கி உரத்த குரலில் படித்தார் அந்த முனிவர்.

  " எப்படிப் பட்ட சோதனை ஏற்பட்டாலும், நிதானம் இழந்து கோபத்திற்கு ஆளாகிவிடக்கூடாது! "

  அந்த ஒரு கணத்தில் முனிவரும், மற்ற எல்லா மாணவர்களும் தர்மரைப் புரிந்துகொண்டார்கள். அவர் கற்றுக்கொண்டது ஏட்டுச்சுரைக்காய் அல்ல என்பதை உணர்ந்துகொண்டார்கள். வாழ்க்கையில் பயன்படக்கூடிய மிக முக்கியமான அனுபவப் பாடம் அது.

  முனிவரின் கண்களில் நீர் நிறைந்தது. தர்மரை அன்போடு அணைத்துக்கொண்டார். " தர்மா! என்னை மன்னித்துவிடு! நீ மாணவன் அல்ல! நீயே ஆசிரியன்! நான் தெரிந்துகொள்ளாத, இதுவரை அனுபவமுறையில் கற்றுக்கொள்ளாத மிக முக்கியமான பாடத்தை நீ எனக்குக் கற்றுக்கொடுத்துவிட்டாய். நான் உனக்கு ஆசிரியன் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமைப்படுகிறேன்! " என்று கனிந்த குரலில் கூறி தர்மரைப்
  பாராட்டினார்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |