ஜூலை 22 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
வானவில்
திரைவிமர்சனம்
சிறுகதை
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
இசை உலா
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திரையோவியம் : பியானோ ஒளிர்வதும் மிளிர்வதும்
  - வந்தியத்தேவன்
  | Printable version |

  நீங்கள் ஊசியேற்றினால்
  நாங்கள் உதிரம் சிந்த மாட்டோமா?
  கிச்சு கிச்சு மூட்டினால்
  விலா நோக சிரிக்க மாட்டோமா?
  விடமூட்டினால்
  மடிய மாட்டோமா?
  தீங்கிழைத்தால்
  பழிவாங்க மாட்டோமா?

  -- ஆகஸ்ட் ஸ்ட்ரீண்ட்பெர்க் [August Strindberg, The Father (1887) (A Play)]

  போலந்தின் தலைநகரமான வார்சாவில் யூதர்கள் மந்தை மந்தையாக அடைபட்டு, மரணப்படுகையை அடைவதற்கு முன்னர் சொல்லப்பட்டும் கவிதை.

  நாம் எல்லோரும் வாழ்கிறோம். ஆனால் இலட்சியத்திற்காக வாழ்வது மிகச் சிலரே. 1939 - 44 வரை ஜெர்மனி நாஜிக்கள், போலந்தை சூறையாடியபோது, பியானோ வாசிப்பதையே இலட்சியமாய்க் கருதிய
  கலைஞன் ஒருவன் பல்வேறு தடைகள் தாண்டிப் பிழைத்தான். தப்பிப் பிழைத்த கதையை காவியமாய் (கதையாய்) செதுக்கினான். 

  ஏழு வயது யூத சிறுவன் ஒருவன் நாஜிக்கொடுமைகளுக்கு ஆட்பட்டு மீள, சங்கல்பம் செய்கிறான். வருங்காலத்தில் இச்சம்பவங்களை வரலாறாய்ப் படைப்பேன் என்று. தக்க சமயத்தில் பியானோ கலைஞனின் காவியம் கையில் கிட்ட, அதை காப்பியம் ஆக்கியதே "பியானிஸ்ட்" (The Pianist) திரைப்படம். ரோமன் போலான்ஸ்கி (Roman Polanski) தான் அச்சிறுவன். வ்லடிஸ்லாவ் ஸ்பீல்மேனே (Wladyslaw Szpilman) பியானோ கலைஞன்.

  அரங்கேற்றம் செய்யா விடினும் ஓரளவுக்கு பியானோ வாசிக்கத் தெரிந்த ஆட்ரியன் ப்ரோடி (Adrien Brody)'தான் வெள்ளித் திரையில் வ்லடிஸ்லாவ் ஸ்பீல்மேன். கம்பீரமாய் வானொலி நிலையத்தில் பியானோ வாசிப்பதும், மென்மையாய் காதலிப்பதும், குடும்பத்திற்காக உருகுவதும், பின்னர் பிரிந்து ஏங்குவதும், தன்னந்தனியே பிணக்குவியல் நடுவே கதறுவதும், பிழைத்திருக்க வேண்டுமேயென்று மிரளுவதும், மிரட்சியிலிருந்து வெறுமையாகுவதும், கடைசியில் அதே கம்பீரமாய் வானொலி நிலையத்தில் வாசிப்பதும் என்று மனிதர் கலக்கியிருக்கிறார்.

  இரண்டாம் உலகப்போரில் தனது குடும்பத்தினர் அனைவரையும் ப(லி)றி கொடுத்து, மீண்டு வந்து கலைச்சேவை புரியும் ஒரு பியானோ கலைஞனின் நிஜ வாழ்க்கையை, இதை விடச் சிறப்பாக சித்தரிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

  படத்தின் பஞ்ச் டயலாக்குகளில் கவர்ந்தவை:

  நாஜிக்கள் யூதர்களின் கழிவறைகளை உபயோகிக்க மாட்டார்கள். ஏன் தெரியுமா? அவை அதி சுத்தமாக இருக்கும். இசைக்கலைஞன் புரட்சிக்கலைஞன் ஆகமுடியாது.

  ஸ்பீல்பெர்க்கின் ஷின்ட்லேர்ஸ் லிஸ்ட் (Schindler's List) போல் பேரழிவை (holocaust) இப்படம் சித்தரிக்காவிட்டாலும், மனதை உலுக்கும் சம்பவங்கள் அநேகம். சக்கர நாற்காலியோடு பெரியவரை மாடியிலிருந்து வீசுதல், ஓட விட்டு சுடுதல், நடுரோட்டில் படுக்க வைத்து சுடுதல், வண்டியேற்றி கொல்லுதல், புது வருடம் கொண்டாட யூதர்களை சாட்டையால் விளாறுதல்... இன்னும் பல.

  யூதர்கள் மத்தியிலும் கெட்டவர் உண்டு. போலீஸ் உடையில் சொந்த சந்ததியினரை வெறியோடு தாக்கும் தருணங்களில். நாஜிக்கூட்டத்திலும் நேயம் உண்டு. ஜெர்மனிக் கேப்டன் யூதக் கலைஞனைக் காக்கும் கட்டத்தில்.  

  இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் ரோனால்ட் ஹார்வுட் (Ronald Harwood). கலை மற்றும் ஆடையலங்காரம் கண்களை உறுத்தாமல் இயல்பாய் இருக்கிறது.

  தலைசிறந்த இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதைக்கு ஆஸ்கர் விருதுகள் இப்படத்திற்கு கிட்டின. மற்ற விருதுகளை பட்டியல் போட தனிப் பதிவு தேவைப்படும்.  

  படம் முடிந்த போது என்னுள் நியாயமான கேள்வி எழுந்தது. காந்தியைத்தான் கோட்டை விட்டோம். பொன்னியின் செல்வன், மருதநாயகம் நம்மால் திரையில் காட்ட முடியும். செய்வார்களா?

  பியானிஸ்ட்டில் பியானோ மிளிர்கிறது.  

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |