ஆகஸ்ட் 03 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : கின்னஸில் பெயர் வர வேண்டும் - ராஜசேகர்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

இதனை விட முக்கிய காரணம் பொதுவாக பயிற்சிகள் எடுத்து ஒரு செயலை செய்யும் பொழுது அவைகள் சாத்திமாகின்றன.

தன்னம்பிக்கையே தனது பற்களின் பலம் என்கிறார் ராஜசேகர். பொதுவாக நாம் இரண்டு  கைகளால் தூக்க முடியாத பொருட்களை, இவர் பற்களினால் சைக்கிள், காஸ் முழுவதுமாக  நிரப்பப்பட்ட கேஸ் சிலிண்டர், மோட்டார் சைக்கிள், அரிசி மூட்டைகளைத் தூக்கி சாதனை செய்து வருகிறார். இவரது வயது 34. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வரும்  இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.

Lifing Gas Cylinderஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலில் லேசான பொருட்களை எனது பற்களினால் தூக்க ஆரம்பித்தேன். அப்படி தூக்க ஆரம்பித்த பிறகு சைக்கிள், மோட்டார் சைக்கிள், கேஸ் சிலிண்டர், அரிசி மூட்டைகள் வரை தூக்கி வந்திருக்கிறேன். எந்தத் துறையிலாவது எதையாவது செய்து நாலு பேரிடம் நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என சிறு வயதில் இருந்தே எண்ணமாக கொண்டிருந்தேன். எனது எண்ணத்தை செயல்படுத்த முதலில் கராத்தே கலையை முறையாக கற்றுக் கொள்ள துவங்கினேன். இப்படி பயிற்சி செய்து பிளாக் பெல்ட் பெற்றுள்ளேன். இதன் பின்னர், சாதாரணமாக எல்லோராலும் செய்ய முடியாத சில கடினமான செயல்களை செய்ய விரும்பி பற்களால் பொருட்களை தூக்க ஆரம்பித்தேன். இதில் சாதித்து எனது பெயரை முதலில் லிம்காவிலும், பின் கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார்.

காதலித்து கலப்பு திருமணம் செய்துள்ள இவருக்கு இரண்டு குழந்தைகள்.Rajashekar இவரது சாதனையை பற்றி இவரது மனைவி சொல்லும் பொழுது எனது கணவர் வீட்டில் ஓய்வு நேரத்தில் கூட சும்மா இருப்பதில்லை. ஒரே துறு துறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பார். இது சில சமயம் நன்றாக இருந்தாலும் சில சமயம் எரிச்சலை உண்டு பண்ணும். இப்படி இருந்த இவர் ஒரு நாள் திடீரென்று சைக்கிளை தனது பற்களால் தூக்க முயற்சி செய்தார். இவர் இப்படி செய்வதை பார்த்து பற்கள் அனைத்தும் உடையப் போகிறது என்று தான் நான் நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை. கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர்கள் வீட்டிற்கு வெளியே அதனை வைத்து விட்டுச் சென்று விட்டனர். இவர் அதனை கைகளால் தூக்காமல் பற்களால் தூக்கி வந்து வைத்தார். இப்படியே இவர் செய்து கொண்டிருக்கிறார். கேட்டால் சாதிக்கணும், பெயர் கின்னசில் வரணும் என்கிறார். இவர் இப்படி செய்வது எனக்கு பயமாக இருந்தாலும் பற்கள் புட்டுக்காம இருக்க எல்லா சாமிகளையும் கும்புடுகிறேன் என்று சொல்லி சிரிக்கிறார்.

Lifting Mopedஇவரது இச்செயலுக்காக தனது பற்களை விஷேசமாக கவனிப்பதெல்லாம் இல்லை என்கிறார். சாதரண டூத் பேஸ்ட் தான்  உபயோகப்படுத்துகிறேன். டீ, காபி, பால் இவைகளை குடிப்பேன். அனால் ஒரு நாளைக்கு 3 முறை பல் துலக்குவேன். எனது முயற்சிக்கெல்லாம் முக்கிய காரணம் தன்னம்பிக்கையும், விடா முயற்சி மற்றும் மனநிலையை ஒரு நிலை படுத்துதலும் தான். இன்னும் பல சாதனை முயற்சிகளை செய்து வருவதாகவும், நிச்சயமாக பெரிய அளவில் சாதனை பட்டியலில் இடம் பிடிப்பேன் என்கிறார் யதார்த்தமாக.

இவர் செய்வது எல்லாம் எப்படி சாத்தியம் என்று பல் மருத்துவர் ஜெயசூர்யாவிடம் கேட்டபொழுது நம்ம முடியாமல் அப்படியா என்கிறார். பொதுவாக ஒரு சில மனிதர்களுக்கு பற்களை கிரிமிகள் தாக்குதல்கள் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட பற்கள் அதிகமாக உறுதித் தன்மையுடன் இருப்பது இயல்பு தான். நீங்கள் சொல்லும் நபர் தனது பற்களை சுத்தமாக வைத்திருக்கலாம். அதனால் அவரால் பற்களினால் எதையும் தூக்க முடிகிறது. இதனை விட முக்கிய காரணம் பொதுவாக பயிற்சிகள் எடுத்து ஒரு செயலை செய்யும் பொழுது அவைகள் சாத்திமாகின்றன. அப்படி அவர் பற்களால் தூக்கி தூக்கி பயிற்சி எடுத்து செயல்படலாம். மற்றபடி ஒரு கட்டத்தில் பற்கள் தங்களது உறுதித் தன்மைகளை இழக்கும் பொழுது, அவர் எதையாவது தூக்கினால் பற்கள் கண்டிப்பாக உடையும். அதனை தடுக்கவே முடியாது என்கிறார்.

| | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |