ஆகஸ்ட் 03 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : ஸ்கேட்டிங்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

காலில் சக்கரங்களை மாட்டிக் கொண்டு ரோட்டில் செல்லும் பொழுது மனதில் ஏற்படுகின்ற ஒருவித உற்சாகம், புத்துணர்ச்சி, மகிழ்ச்சி போன்றவை வேறு எந்த வேலையிலும், விளையாட்டிலும் நமக்கு ஏற்படாது.

இரண்டு கால்களிலும் உருளும் சக்கரங்களை கட்டிக் கொண்டு போனால் ஒரு வித திரில்லாகவும்,  பரவசமாகவும் இருக்கும். நடப்பதற்கு பதில் இரு கால்களிலும் சக்கரங்களை கட்டிக்கொண்டு சாலைகளில் செல்லும் முறைக்கு ஸ்கேட்டிங் பயிற்சி என்று சொல்லப்படுகிறது. இந்த ஸ்கேட்டிங் பயிற்சி பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் தமிழ்நாடு விவேகானந்தா யோகாசனம் மற்றும் ஸ்கேட்டிங் கழக பயிற்சியாளர் அழகுமுருகனிடம் கேட்ட பொழுது........

ஸ்கேட்டிங் என்பது விளையாட்டுக்களில் ஒரு வகை. பிற விளையாட்டுக்களில் நமது இரண்டு கால்களையும் பயன்படுத்தி விளையாடுவார்கள். ஆனால் இந்த விளையாட்டில் கால்களில் சக்கரங்களை மாட்டிக் கொண்டு விளையாடுவது தான் தனிச்சிறப்பு. இந்த ஸ்கேட்டிங் பயிற்சி பெற வெளிநாடுகளில் குறிப்பாக ஜரோப்பா கண்டத்தில் பிரபலமான ஒன்று. ஆனால் இந்தியாவில் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் சுவாமி விவேகானந்தா யோகாசனம் மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் ஸ்கேட்டிங் விழுப்புணர்ச்சி மற்றும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஸ்கேட்டிங் சிறந்த உடற்பயிற்சி. இதனை கற்றுக் கொள்ள குறைந்தது 1 மாதம். இதனை தற்பொழுது 4 வயது குழந்தைகள் முதல் 40 வயது பெரியவர்கள் வரை கற்றுக் கொள்ளகின்றனர். இதனை கற்றுக் கொண்டால் 120 கிலோ மீட்டர் வேகம் வரை சாலைகளில் வேகமாக செல்லலாம்.

Skatingதமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் விழுப்புணர்வு மற்றும் ஆர்வம் மக்களிடம் அதிகளவு ஏற்பட்டு வருகிறது. இது வரை எங்கள் அமைப்பின் சார்பில் சுமார் 50,000 பேர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி சொல்லிக் கொடுத்து இருக்கிறோம். பொது சேவை அடிப்படையில் செயல்படும் எங்கள் அமைப்பிற்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து இப்பயிற்சி அளிக்கப்படுவதால் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங்கை எளிதில் கற்றுக் கொள்கின்றனர். அதே போல பிசினஸ் பார்க்கும் பெரிய மனிதர்கள், மருத்துவர்கள், மற்றும் உடல் உழைப்பு சாராத மனிதர்கள் தான் இதனை கற்றுக் கொள்ள வருகின்றனர். உடல் உழைப்பு சார்ந்த மனிதர்கள் இதனை ஒரு பணக்கார விளையாட்டு, அல்லது பயிற்சி என்பதால் இதனை கிராமப்புறங்களில் கற்றுக் கொடுக்க முடியவில்லை. முதன் முதலில் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் பொழுது கீழே விழந்தான் செய்வார்கள்.அதே போல பயிற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் வேகமாகச் சென்று தனக்கு முன் செல்பவர்களின் மேல் மோதி இருவரும் கீழே விழும் சம்பவங்களும் நடக்கும். இவைகளை பார்ப்பதற்கு சுவராய்ச்சியமாக இருக்கும்.

காலில் சக்கரங்களை மாட்டிக் கொண்டு ரோட்டில் செல்லும் பொழுது மனதில் ஏற்படுகின்ற ஒருவித உற்சாகம், புத்துணர்ச்சி, மகிழ்ச்சி போன்றவை வேறு எந்த வேலையிலும், விளையாட்டிலும் நமக்கு ஏற்படாது. அதே போல இந்த ஸ்கேட்டிங் முறையை கற்றுக் கொண்டு உடற்பயிற்சி எடுத்துக் கொண்டால் காலில் நீர் பிடிப்பு, முட்டு நீர் பிடிப்பு, மூட்டு வலி போன்ற நோய்கள் வர வாய்ப்பில்லை என்பதை அனுபவப்பூர்வமாக நிருபிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கேட்டிங்கை வைத்து  ஸ்கேட்டிங் முன்னோக்கி ஓட்டம், ஸ்கேட்டிங் பின்னோக்கி ஓட்டம், ஸ்கேட்டிங் ஹாக்கி, ஸ்கேட்டிங் கண்ணை கட்டிக் கொண்டு செல்லுதல், ஸ்கேட்டிங் பரத நாட்டியம், ஸ்கேட்டிங் கார் இழுத்தல் போன்ற பல வகைகளில் போட்டிகளும் வைத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்த அமைப்பின் மூலம் தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் ஸ்கேட்டிங் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு, அனைவருக்கம் கல்வி,  கண்தானம் விழிப்புணர்ச்சி, காசநோய், மழைநீர் சேகரிப்பு போன்ற அரசின் திட்டங்களை பற்றி ஸ்கேட்டிங் மூலமாக பொது மக்களுக்கு சாலையில் சென்று எடுத்துரைக்கப்படுகிறது.  ஸ்கேட்டிங் மூலம் மாணவ, மாணவிகளின் சாதனைகளும் படைக்கப்பட்டு இருக்கின்றது. உலக அமைதிக்காக ஸ்கேட்டிங் மூலம் விருதுநகர் முதல் சென்னை வரை  சென்று மாணவர்கள் சாதனை படைத்தனர். அதே போல் கொடைக்கானல், முதல் பாண்டிச்சேரி வரை சென்றும் சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.

எங்களது மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் முறையை பற்றி அனைத்து பயிற்சிகளையும் சொல்லிக் கொடுக்கப்பட்டு சிம்லாவில் உள்ள ஜஸ் பனிக்கட்டி மலைகளில் ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கு பெறச் செய்து உலக அளவில் ஸ்கேட்டிங்கில் தமிழக வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் அமைப்பின் நோக்கம். இதற்கான உதவிகளை இந்திய அரசின் நேரு யுகேந்திரா அமைப்பு செய்து வருகிறது எது எதற்கோ நமது நேரங்கள் வீணாக்குவதை குறைத்து அனைவரும் ஸ்கேட்;டிங் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களின் ஓட்டம் நிறைந்த இன்றைய வாழ்க்கைக்கு புத்துணர்வும், பதட்டத்தை குறைக்கவும், உள்ளத்தின் உறுதியை வளப் படுத்தும் என்கிறார்.

| | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |