ஆகஸ்ட் 04 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
திரைவிமர்சனம்
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அடடே !!
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : மருத்துவ அறிவு அவசியம்
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |
"தனிப்பட்ட ஒருத்தரின் உடல் நல பழக்கத்தை மாற்றுவதைவிட ஒரு குழுவாக மாற்றுவது எளிது."

மக்களிடையே மருத்துவம் பற்றிய கருத்துக்களை பரவலாக்க பலவகைகளிலும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதனால் நல்ல உடல் நலம் பேணும் பழக்கங்களை கொள்ளவும், தங்களின் கருத்துக்களை மாற்றிக்கொள்ளவும், உற்சாகப்படுத்திக்கொள்ளவும் முடிகிறது.

சாலையில் கார் ஓட்டி செல்லும் போது சுவரொட்டிகளில் மீண்டும் மீண்டும் உடல் எடையை குறைக்க செய்யவேண்டிய முறைகளையும், அதனால் வரும் நன்மைகளையும் பார்க்கும் ஒருவன் மனதில் அவனையும் அறியாமல் அடுத்த முறை உண்ணும் போது அதை பற்றிய நினைவு வந்து போகிறது. நாளாவட்டத்தில் இது அதிக கலோரிகள் இல்லாத உணவை சாப்பிட தூண்டுகிறது. இதனால் தற்போது அமெரிக்காவின் மெக்டொனால்டு மற்றும் இதர அவசர உணவகங்களில் கலோரி பற்றிய பட்டியல் கட்டாயம் வைக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாகி இருக்கிறது.

மருத்துவக்குறிப்புகள் பலரையும் சென்றடையும் வண்ணம் தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள் இவை மூலமாக மட்டும் அல்லாமல் தற்காலத்திற்கு ஏற்றார்போல இணையத்திலும் பரவலாக கிடைக்கிறது. வீடுகளில் கையேடுகள் அனுப்புவதும், இன்னும் நூலகங்களில் பார்வையில் படும் வண்ணம் வைப்பதுமாய் கருத்துக்கள் பரவலாக அனைவரும் அறியும் வண்ணம் தெரிவிக்கப்படுகிறது.

புகைபிடிப்பதை தவிர்க்க, நிறுத்த பல  தளங்களில் இலவசமாக ஆலோசனை, மற்றும் நுகர்வோருக்கு ஏர்றார்போல மாற்றியமைக்கப்பட்டு உதவுவவும் செய்கிறார்கள். உதாரணமாக் நியுஜெர்ஸியின் அரசை சார்ந்த “quit center” களில் ஒருவரின் பழக்கங்களுக்கு ஏற்றார்போல அட்டவணை தயாரிக்கப்பட்டு அது பயன்படுத்தும் வண்ணம் ஆலோசனையும், இடையில் தேவைப்பட்டால் திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு பயனளிக்கும் வண்ணம் உதவுகிறார்கள். எப்படி ஒரு பொருளை விற்க விளம்பரம், மற்றும் அதன் தன்மை, அது பார்க்கப்படும் விதம் பற்றி பலரும் ஆராய்ந்து அதை சந்தைக்கு அனுப்புகிறார்களோ அது போலவே தற்போது மருத்துவ குறிப்புகளும் கேட்பவர்களை கவரும் வண்ணம் எளிதில் புரியும் வண்ணம் செயல்பட துவங்கிவிட்டன.

உடற்பயிற்சி, நல்ல சத்துள்ள உணவு, மற்றும் நல்ல பழக்கங்கள் இவை ஒரு மனிதனின் அறிவு அதை செயல்படுத்த மன உறுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவையாகும். உதாரணமாக புகையிலை பயன்படுத்துவது வாயில் புற்றுநோய் உருவாக்கும் என்பதுடன் பொது இடங்களில் புகையிலை  சாறை துப்பக்க கூடாது என்ற அரசின் கொள்கையுடன் சேர்த்து அதை குறைக்க வழிவகுக்கும். சிகரெட் விலையில் வரிகளள கூட்டுவதன் மூலம், மட்டும் இல்லாமல் பொது இடங்களில் புகப்பது தடை செய்யப்பட்டது, மற்றும் அதன் தீமைகள் இவற்றின் அறிவு புகை பிடிப்பதை குறைக்க வழி வகுக்கிறது.

இவ்வாறான உடல் நலம் பற்றிய கருத்துக்கள் பரவ   மருத்துவர் மற்றும் நோயாளிகளுக்கு இடையே நல்ல உரையாடல் நிகழவேண்டும். இதில் நோயாளியின் கலாசாரத்தை மருத்துவர் அறிந்திருப்பது அவசியம்.

அமெரிக்காவில் இப்போது அதிகமான நோய்கள் வரும் முன் மாறும் உடல் நல பழக்கத்தால் அதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஏதும் இருக்குமானாம் colonoscopy , மற்றும் மார்பக நிழற்படங்கலள், Pap பரிசோதனைகள் மூலம் கர்ப்பப்பையில் வரும் புற்று நோய்கள் இவை வரும் முன் அறிந்து அதை தடுக்க வழிவகைகள் செய்ய படுகின்றன. இது போன்ற அறிவுப்புகள் பொதுவாக மக்களை எட்டும் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படுகின்றன.

உடல் நலம் பற்றிய கருத்தும் சிந்தனையும் மட்டும் நோய்களை தடுக்க உதவாது. அதனுடன் நல்ல சத்துள்ள உணவுப்பொருட்கள், மனதில் தகைவு வராத நல்ல சூழ்நிலை இவையும் தேவை.

முன்பைவிட இப்போது பல ஊடகங்கள் இருப்பதும், மக்கள் அதிக மருத்துவ குறிப்புகளை தேடி படிப்பதுடன், தெரிந்து கொள்ளவும் செய்வதால் நல்ல தரமான குறிப்புகளுக்கு அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஊடகங்கள் மக்களின் கவனத்தை பெற போட்டியிடுகின்றன. மக்களும் நல்ல போட்டியினால் தரமான தளத்தை, பத்திரிக்கைகளை தேர்ந்தெடுத்து தங்களுக்கு நேரம் இருக்கும் போது படித்து தெரிந்து கொள்ள முடிகிறது.

வியாபார நோக்கம் இல்லாத பொது நல த்தை சார்ந்த அறிவுப்புகள், குறிப்புகள் இதில் தனித்து நிற்க முடிகிறது. வியாபார நிமித்தம் உலகம் முழுதும் மக்கள் பயணித்து கொண்டிருப்பதால் கலாசாரத்தை ஒட்டிய குறிப்புகள் இருப்பது அவசியமாகிறது.

உடல் நலம் பற்றி எடுத்து சொல்ல பல  வகைகள் இருப்பினும் அவை அனைத்திலும் ஒன்றை தேர்ந்தெடுக்காமல் அவை எல்லா வழியிலும் திரும்ப திரும்ப சொல்லும் போது அது மனதில் படிந்து போகிறது. குடியிருப்புகளில் ஒரு வாரம் உடல்பயிற்சி பற்றியும்  இன்னொருவாரம் புற்று நோய் பற்றியும் எடுத்து சொல்லும் திட்டங்கள், மருத்துவமனைகளில் இலவச  ப ரிசோதனைகள் என பொதுநல துறை எல்லா வழிகளையும் உபயோத்து மக்களை அடைய முயற்சி செய்கிறது. கூட்டு முயற்சி பெருமளவில் இதற்கு உதவுகிறது. நியுஜெர்ஸியில் உள்ள இந்துக்கள் அமைப்புடன் சேர்ந்து இலவச மருத்துவ முகாம்கள் நடத்தும் போது, இந்துக்கள் உள்ள சங்கங்கள் மொழி பெயர்த்து சொல்லவும் பலதரப்பட்ட இந்தியர்களும் இந்த முகாம் பற்றி அறிந்து பங்கு பெறவும் ஏதுவாக இருக்கிறது.

மெழிபெயர்க்கும் போது நேரடியான மொழிபெயர்த்தல் சரியாகாது. கலசாரத்திற்கு ஏற்ற வண்ணம் அதை மாற்றி எழுதுதல் அவசியமாகும். உதாரணமாக இந்தியர்கள் அதிகமாக உள்ள இடத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் உடல் உறவு கொள்வதாக கொண்டு அதன் பாதுகாப்பை பற்றிபேசுவதோ அல்லது மாட்டிறைச்சியை உண்பதனால் வரும் தீமைகள் பற்றி சொல்லும்போதோ கவனமாக இருக்க வேண்டும்.

 அதேபோல இந்திய பெண்களின் உடல் நலம் சார்ந்த முடிவுகள் அவருடைய கணவனாலோ அல்லது கணவனின் பெற்றோர்களாலேயோ ஒரு குடும்பமாக எடுக்க படுவதால் அதை குறித்து மருத்துவர் இருவருடனும் பேசுவது முக்கியம். பிள்ளைகல் உடல் நலம் பற்றி அன்னையிடத்தும் பேச வேண்டுவது அவசியமாகும். நல்ல உடற்பயிற்சி பற்றி தெரிவிக்கும் போதும் இளையவர்களை கவர்ந்திழுக்க ஒரு நல்ல விளையாட்டு வீரர் சொல்வது போல கருத்து பதிவு செய்யவேண்டியதும், முதியவர்களை கவர்ந்திழுக்க ஒரு நல்ல ஆன்மீக வாதி அல்லது மரியாதைக்குரிய ஒரு நபர் சொல்ல வேண்டியதும் முக்கியமாகும்.

Group Exerciseதனிப்பட்ட ஒருத்தரின் உடல் நல பழக்கத்தை மாற்றுவதைவிட ஒரு குழுவாக மாற்றுவது எளிது. ஒரு குடியிருப்பின் அருகில் நீச்சல் குளம் இருப்பதும், உடற்பயிற்சி மையங்கள் இருப்பதும் நண்பர்களாக பலரும் வந்து போவதை எளிதாக்குகிறது.

இணையதளங்களில் பலதரப்பட்ட மருத்துவ குறிபுகள் இருப்பினும் அதனால் இரண்டு முக்கிய சங்கடங்கள் உண்டு. முதலாவதாக சில சமயம் அறிகுறிகளை படித்துவிட்டு தனக்கும் அதுபோல உடல் நிலை இருப்பதாக நினனத்து கொண்டு கவலை படுபவர்கள், மருந்துகளை தவறாக எடுத்து கொள்பவர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள்.

இணையத்தில் பல முக்கிய குறிப்புகள் இருந்தாலும் அதில் பல தவறான  முடிவுகள் எடுக்க நோயாளிகளுக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கவலை படுகிறார்கள். சட்டென்று உடல் இளைக்க என்று பரவலாக கருதப்பட்ட சில மெட்டபொலைவ் (Metabolife) என்ற மருந்து அதிக அளவில் செரிமானத்தை அதிகரிக்க வைத்ததோடு ஏற்கெனெவே இதய நோய் உள்ளவர்கள் மற்றும் நரம்பு தொல்லை உள்ளாவர்கள் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருகிறது.

மருத்துவர் நோயாளிக்கு இடையே உள்ள உறவை மேம்படுத்தவும் அவர்கள் ஒருவருகொருவர் நம்பிக்கை வைப்பதும் மிக்க அவசியமாகும். பலதரப்பட்ட வகைகளில் செய்திகளும் விவரங்களும் சேகரிக்கப்படுவதால் மக்களின் நம்பிக்கை தக்க வைப்பது அவசியமாகும். எதிர்காலத்தில் மனிதனின் உடல் நலம் பற்றிய தகவல்கள் மருத்துவமனையில் மட்டும் அல்லாமல், பள்ளியில், கல்லூரிகளில், அலுவலகங்களில் என  பல இடங்களிலும் சேகரிக்க பட இருப்பதால் வியாபாரிகள் அந்த விவரங்களை நுகர்வோருக்கு எதிராக பயன் படுத்தி வேறுபடுத்துதல் நிகழாவண்ணம் இருப்பதும் அவசியமாகும். உதாரணாமாக ஒருவர் அதிகம் புகை படிப்பதால் அவரின் ஆயுள் காப்பீடு அதிக விலைக்கு தரப்படுவதும், மருத்துவ காப்பீடு மறுக்க படுவதும் பிரிவினையை உருவாக்கும்.

வீடுகளில் இப்போது கணினி மற்றும் இணையங்களை அணுகுவதும் எளிதான படியால் மக்கள் பாகுபாடின்றி எந்நேரம் ஆனாலும் மருத்துவம் பற்றிய செய்திகளை தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மருத்துவம் பற்றி அலுவகங்களுக்கு மடல் வரும் என்றால் அதை அதிகாரிகள் படிக்க இயலுவதால், ஒரு மனிதனின் தனி மனித ரகசியம் பாதுகாக்க படுவதில்லை. இந்த உடல் நிலை பற்றிய குறிப்புகள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மேலதிகாரியை தூண்டும் வாய்ப்பு இருக்கிறது. எனவே பொது இடங்களில் மருத்துவம் பற்றிய மடல்கள பெறுவதோ அல்லது அது பற்றிய குறிப்புகளை படிப்பதோ கூடாது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |