ஆகஸ்ட் 5 2004
தராசு
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
கவிதை
சிறுகதை
க. கண்டுக்கொண்டேன்
திரைவிமர்சனம்
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திரைவிமர்சனம் : ஷாக்
  - மீனா
  | Printable version |

  காதல், அடிதடி மற்றும் ஹீரோ புகழ் பாடும் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமாக வந்துள்ளது ஷாக். ஹிந்தி படம் பூத்தின் தமிழ் ரீமேக் என்றாலும் பூத்தில் இருந்த சுவாரஸ்யத்தைக் கொஞ்சமும் குறைக்காமல் ஷாக்கை அருமையான திகில் படமாக தயாரித்து இயக்கியுள்ளார் தியாகராஜன்.

  அழகான வீட்டை வாடகைக்குத் தேடி அலைந்து கொண்டிருக்கும் பிராசந்தின் கண்களில் ஒரு 12 மாடிக்கட்டிடம் படுகிறது. அங்கே ஒரு பிளாட் காலியாக இருக்கும் விபரத்தை புரோக்கர் மூலம் தெரிந்துகொள்ளும் பிரசாந்த் அங்கே குடிவர ஆசைப்படுகிறார். அந்த வீட்டில் முன்பு குடியிருந்த மஞ்சு என்ற பெண் தன் குழந்தையுடன் செத்துவிட்டாள் என்று புரோக்கர் சொல்வதை அலட்சியப்படுத்திவிட்டு, தன் மனைவி மீனாவுடன் ஜம்மென்று அந்த வீட்டிற்கே குடிவருகிறார் பிரசாந்த்.

  முதலில் மஞ்சு விவகாரம் பற்றி ஒன்றும் தெரியாத மீனா, ஒரு நாள் பிரசாந்திடமிருந்து அவளது சாவைப் பற்றி அறிந்து கொள்கிறார். அதிலிருந்து ஆரம்பிக்கிறது பிரச்சனை. அவ்வப்போது மீனாவின் கண்களுக்குத் தெரியும் மஞ்சுவின் ஆவி, ஒரு கட்டத்தில் பர்மனெண்டாகவே மீனாவின் உடலில் புகுந்து கொள்கிறது. முதலில் ஆவி, பேய் இதையெல்லாம் நம்பாமல் மீனாவை டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பிரசாந்த், அப்பார்ட்மெண்டின் காவலாளியை மீனா ஒரு காரணமும் இல்லாமல் கொலை செய்வதைப் பார்த்துவிடுகிறார். மேலும் வேலைக்காரி கலைராணி, பேய் விவகாரம் எல்லாம் மந்திரவாதிகளால் முடியும் காரியம் என்று கூறுகிறார். இதற்கிடையே காவலாளியின் கொலை மர்மத்தைத் துப்புத் துலக்க வரும் இன்ஸ்பெக்டர் தியாகராஜனின் சந்தேகப் பார்வை மீனாவின் மீது கடுமையாகப் பதிய, தன் மனைவியைக் காப்பாற்ற பெண் மந்திரவாதியான சுகாசினியை அழைத்து வருகிறார். சுகாசினி மூலமாக மஞ்சு சாவில் இருந்த மர்மமெல்லாம் விலக ஆரம்பிக்கிறது. மீனாவின் உடலிலிருந்து ஆவி வெளியேறியதா இல்¨லயா என்பதே மீதிக்கதை.

  அருமையான கணவன் பாத்திரம் பிரசாந்திற்கு. வழக்கமான 4 சண்டை, 5 டூயட் என்ற பார்முலாவிலிருந்து முற்றிலுமாக வெளிவந்து நடிப்பில் கலக்கியிருக்கிறார். பேய் பிடித்த மனைவியின் நடவடிக்கைகளைப் பற்றி முதலில் அறிந்து கொள்ளாமல் குழம்புவதாகட்டும், பிறகு எப்படியாவது மீனா குணமடைந்தால் போதும் என்றவாறே சுகாசினியைத் தன் வீட்டிற்கு அழைத்துவரும் காட்சியிலாகட்டும் பிரசாந்தின் நடிப்பு சூப்பர்.

  படத்தின் தூண் மீனா தான். முதலில் கணவனுடன் பாசம் மிகுந்த மனைவியாக நடிப்பதும், பிறகு மஞ்சு ஆவியைப் பார்த்து ஒவ்வொரு முறையும் பதறுவதிலும், பேய் பிடித்த காட்சிகளில் உறுமும் உறுமல்களிலும், மஞ்சுவின் அம்மா கே.ஆர். விஜயாவைப் பார்த்ததும் பாசத்தில் திணறுவதிலும், அப்ப¡ஸிடம் கொண்ட பழி உணர்சியில் வெறித் தாக்குதல் நடத்துவதிலுமாக அனைத்திலும் அருமையாக நடித்திருக்கிறார்.

  செத்துப் போன மஞ்சுவின் அம்மாவாக நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித் திரையில் கே.ஆர். விஜயா. பாவம் - படம் முழுவதுமாக புன்னகை அரசியை சோக நாயகியாகவே காட்டுகிறார்கள். பெண் மந்திரவாதியாக சுகாசினி. குறிப்பிடும்படியாக ஒன்றும் இல்லை சுகாசினியின் நடிப்பில்.

  கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், தயாரிப்பு என்று எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ததோடு மட்டுமல்லாமல் இன்ஸ்பெக்டர் பரமசிவமாகவும் நடித்திருக்கிறார் தியாகராஜன். ஆனால் அவரது வசன உச்சரிப்புகளும், ரொம்பவுமே ஸ்லோவாகப் பேசும் அவரது §மனரிசமும் சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதில் அடிக்கடி தன் பெயரை "பாண்ட்.. ஜேம்ஸ்பாண்ட்.." என்ற ரேஞ்சிற்கு "சிவம்.. பரம்சிவம்.." என்று சொல்லிச் சொல்லி கடுப்பேற்றுகிறார். கலைராணியின் அதிகப்படியான முக பாவணைகளும், பேச்சும் வெறுப்பேற்றுகிறது. டாக்டராக வரும் சரத்பாபு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். துக்கடா வில்லனாக அப்பாஸ்.

  படத்தில் எடிட்டிங், லைட்டிங், பிண்ணனி இசை அமர்களம். முதலில் ஆவியாக வரும் பெண்ணை காட்டும்பொழுதெல்லாம் பகீர் என்று இருக்கிறது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |