Tamiloviam
ஆகஸ்ட் 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : குருவா சிஷ்யனா?
- நாகூர் ரூமி
| | Printable version | URL |

சிதையில் விழுந்து உயிர்த்தெழுந்தன
·பீனிக்ஸ் பறவைகள்.
சதையில் இருந்து உயிர்த்தெழுகின்றன
சின்ன வாரிசுகள்.

அடிக்க அடிக்கக் கடிக்கும்
பிடிக்கப் பிடிக்கப் பிடுங்கும்
சாக்கடைச் சனியன்கள்.

குட்டைகளில் குடியிருக்கும்
குட்டிச் சாத்தான்கள்.

வாயில் இருப்பது வரமல்ல
விஷ ஊசி.

சின்ன உருவமென்றாலும்
சிந்துவன்னவோ சிக்கன் குன்யா.

ஆணென்றும் பெண்ணென்றும்
பெரியவரென்றும் பிள்ளையென்றும்
பார்க்காமல் பறந்து வந்து
குருதி குடிக்கும் அரசியலில்
கொசுக்கள்
குருவா சிஷ்யனா?

oooOooo
                         
 
நாகூர் ரூமி அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |