ஆகஸ்ட் 11 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
பாலிவுட்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
புதிய தொடர்
கவிதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
தொடர்கள்
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : விமான கடத்தல்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |
"நம் நாட்டைப் பொருத்தமட்டில் இத்தீர்மானத்தை மத்திய அரசு நெருக்கடி நிலையில் செயலாக்க ஏகப்பட்ட உள்நாட்டு பிரச்சனைகளைச் சந்திக்கவேண்டி வரும்."

Plane Hijacksமுக்கிய இடங்களைத் தகர்ப்பதற்காக பயணிகள் விமானம் கடத்தப்பட்டது என்பது தெரியவந்தால் அதை சுட்டு வீழ்த்திவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். சர்வதேச அளவில் தீவிரவாதிகளின் நடவடிக்கை அதிகரித்துள்ள இவ்வேளையில் விமானங்களை ஏவுகணைகளாக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதால்தான் இத்தீர்மானம் இயற்றப்பட்டதாக பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன் போன்ற நாடுகள் விமானக்கடத்தல் விஷயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருவதால் நாமும் இத்தகைய தீர்மானத்தை இயற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதிகளுக்கு எதிரான இத்தீர்மானத்தை ஆதரிப்பதாக பா.ஜனதாவும் அறிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான இந்நடவடிக்கை வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும் இந்தியாவில் இதை 100 சதவீதம் அமுலாக்க முடியுமா என்றால் பதில் நிச்சயம் எதிர்மறைதான். சர்வதேச அளவில் பலநாடுகளிலும் பொதுமக்களைப் பிணயக்கைதிகளாகப் பிடித்து தீவிரவாதிகள் வெறியாட்டம் ஆடிவருகிறார்கள். இது மறுக்க முடியாத உண்மை. அந்நாடுகள் மக்களை விடுவிப்பதற்காக ஒன்று தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயல்கிறது. இல்லையென்றால் அதிரடித் தாக்குதல் நடத்தி உயிர்சேதத்தோடு மக்களை மீட்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகள் இத்தீர்மானத்தை இயற்றியதில் வியப்பில்லை. அந்நாடுகள் இப்படியான ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டால் சொன்னதை செய்துகாட்டுவார்கள் என்ற பயம் சிறிதளவாது தீவிரவாதிகளுக்குத் தோன்றும்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆள்வோரின் மனநிலை தீவிரவாதிகளுக்கு அத்துப்படி. அதனாலேயே அவர்கள் பொதுமக்களை பெருமளவில் சீண்டுவது இல்லை. இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான கடத்தல்களில் கடத்தப்படுவது பொதுமக்கள் அல்ல. பெரிய அரசியல்வாதிகள் அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். கடத்தல் எக்காரணத்தை முன்னிட்டு நடந்தாலும் - பணமாகட்டும் அல்லது சகதீவிரவாதிகளை விடுவிப்பதாகட்டும் அவர்கள் தேர்ந்தெடுப்பது அரசியல்வாதிகளையும் அரசியல் சம்மந்தப்பட்டவர்களையும் தான். ஏனென்றால் எங்கே அடித்தால் அவர்களுடைய கோரிக்கை பாதகமில்லாமல் நிறைவேறும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஒரு சாதாரண குடிமகனின் உயிரைப் பற்றி அரசாங்கம் கவலைப்படாது என்பது இந்தியாவிற்கு வரும் - இந்தியாவில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படும் பாலபாடங்களில் ஒன்றாகிவிட்டது.

நிலைமை இப்படி இருக்க, விமானத்தைக் கடத்த திட்டமிடும் கடத்தல்காரர்கள் என்ன சாதாரண பயணிகள் மட்டும் பயணம் செய்யும் விமானத்தையா தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்? நிச்சயம் ஒரு அரசியல் பிரமுகர் பயணிக்கும் விமானத்தை தான் தேர்ந்தெடுப்பார்கள். அந்த நிலையில் மத்திய அரசின் விமானத்தைச் சுட்டுவீழ்த்தும் கொள்கைக்கு எதிராக இன்று ஆதரவளித்தவர்களே எதிராகத் திரும்புவார்கள். ஏனெனில் எந்த ஒரு சிறிய பிரச்சனையையும் அரசியலாக்கி அதில் தமக்கான ஆதாயத்தைப் பார்ப்பவர்கள்தான் நம் அரசியல்வாதிகள். ஆகவே நம் நாட்டைப் பொருத்தமட்டில் இத்தீர்மானத்தை மத்திய அரசு நெருக்கடி நிலையில் செயலாக்க ஏகப்பட்ட உள்நாட்டு பிரச்சனைகளைச் சந்திக்கவேண்டி வரும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |