ஆகஸ்ட் 11 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
பாலிவுட்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
புதிய தொடர்
கவிதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
தொடர்கள்
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : உடல் எடையும் உடல் நலமும்
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

Obese Manசென்ற முறை வாங்கிய சட்டை இப்போது இறுக்கமாகி விட்டது, கால்சட்டையின் சிப் போட முடியவில்லல என்று சிறிது சிறிதாக பெரிய ஆடைகள் வாங்க ஆரம்பித்த போது கவனப்பிசகாக இருந்து திடீரென ஒருநாள் மருத்துவர், உங்கள் எடையில் மாற்றம் ஏதேனும் தெரிகிறதா என்று கேட்கும் போது சட்டென்று தோன்றும், 90 பவுண்டிலிருந்து 120க்கு எப்படி போனேன் என்று? இது நான் தானா என்ற கேள்வியைவிட, எடை பார்க்கும் கருஇவ் சரியானதா னெறு ஒருமுறைக்கு இருமுறை சரி பார்க்க தோன்றும். கடந்த 20 வருடங்களாக கொழுப்பு அதிகமாவது (obesity) ஒரு முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது. அமெரிக்க உடல் நல  புள்ளியல் துறையிலிருந்து வந்த அறிக்கையின் படி அமெரிக்காவில் உள்ள 20 வயதுக்கும் மேலானவர்களில் 30% கிட்டதட்ட 60 மில்லியன் மக்கள் அதிக எடை பிரச்சினையால் அவதியுறுகிறார்கள்.

1980 இலிருந்து தற்போது அதிக எடை உள்ள குழந்தைகள், இளஞர்கள் 3 பங்காக அதிகரித்துள்ளது. இதில் 6- 19 வயதுவரை உள்ளவர்கள் 16%, அதாவது 9 மில்லியன் பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்படுள்ளது.

அதிக உடல் எடை மற்ற உபாதைகள், மற்றும் மற்ற துறைகளின் வளர்ச்சி, அமெரிக்க பொருளாதாரம் இவற்றையும் பாதிப்பதால் இது மிகுந்த கவலை தருகிறது. அதிக உடல் எடையும் பருமனாயும் இருப்பதால் வரும் சில உடல் நோய்கள்:

அதிக இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு (இரண்டாம் வகை), இதய நோய்கள், பக்கவாதம், சிறுநீரக நோய்கள், எழும்பு சம்பந்தமான நோய்கள், தூக்கம் இன்மை, சுவாசம் சம்பந்தமான நோய்கள், மார்பகம், குடல் புற்றுநோய்கள். உடல் எடையை குறைக்க பலவகை முயற்சிகள் எடுத்தாலும் இது குறைவதற்கு மாறாக அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

அதிக எடை என்றால் என்ன? இதை எப்படி கணக்கிடுவது ?

ஒரு மனிதனின் உடல் உடயரம், மற்ரும் அவருடைய செரிமான, எரிப்பு சக்திக்கு தோதான எடையைவிட அதிகமாக இருப்பது உடல் எடை அதிகமான வகையில் கருதப்படும்
வயது வந்தோருக்கு பொதிமடை எண் (basic metabolic index) 25-29.9 அதிகமாக இருக்குமானால் அது உடல் எடை அதிகம்(overweight) என்று பொருள்படும்.  அதேபோல 30க்கும் மேலான பொதிமடை எண் இருப்பின் அது obesity  என்று கருதப்படும்.

 உயரம் 5' 9"

உடல் எடை பொதிமடை எண் விளக்கம்
124 lbs க்கு குறைவாக 18.5 கீழ் குறைவான எடை
125 lbs to 168 lbs 18.5 to 24.9 நலமான எடை
169 lbs to 202 lbs 25.0 to 29.9 அதிக எடை
>= 203 lbs 30 க்கு மேல் குண்டு அல்லது obese

 பொதிமடை எண் என்பது உடலின் கொழுப்பை அளப்பது இல்லை.  இதை அளப்பது பற்றிய விளக்கம் திரு இராம. கி அவர்கள் எழுதியதை இங்கே தருகிறேன். (http://valavu.blogspot.com/2005/04/blog-post_111354261723461104.html)

பொதி மடை எண்: (body mass index - BMI). இது உடம்பில் உள்ள கொழுப்பைப் பற்றிய ஓர் அளவீடு. உடம்பின் எடையைக் கிலோகிராமில் வைத்து, அதை மீட்டரில் அளவிட்ட உயரத்தின் இருமடக்கால் (to the power 2) [mass in kg /height in meters ^2] வகுத்து வரும் எண் இது. (பொத்துப் பொத்தென்று இருக்கிறான் பார். அந்தப் பொத்தை - பொதி - என்பது தான் உருவம் ஒரு பொருட்டில்லாத கனப்பொருள் - body. மட்டித்து இருத்தல் = பெருத்து இருத்தல். மடங்கி வருவது, மடைத்து வருவது என்பது பெருத்து வருவது - massive, மடை மடையாக வெள்ளம் வந்தது. எனவே mass என்பதை மடை என்கிறோம். மடை என்று சொல்லும் போது புவியீர்ப்பு நம் கணக்கில் வருவதில்லை. எடை, நிறை என்னும் போது புவியீர்ப்பு உள்ளே வந்துவிடும். மடையோடு புவியீர்ப்பு முடுக்கம் - acceleration due to gravity - சேரும் போது எடை, நிறை போன்றவற்றை உணர்கிறோம். கிலோகிராம் கணக்கு என்னும் போது எடையும், மடையும் ஒன்றாய்த் தோற்றும்.

அதிக எடையாலும் கொழுப்பாலும் வரும் சில உடல் நலக்குறைவுகளை அனுமானிக்கும் முறைகள்:

இடை சுற்றளவு (வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு உடல் நல குன்று ஏற்பட ஒரு அறிகுறி)
இன்னும் சில நோய் அறிகுறிகள், இரத்த அழுத்தம், உடல் சோர்வு

அதிக உடல் எடையும் ஏற்பட காரணங்களும்:  மனிதர்களின் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது என்ற கேல்விக்கு ஒரு சாதாரண எளிய விடை இல்லை. இது பலவித காரணிகளின் கூட்டு விளைவால் ஏற்படுகிறது. திடீரென தொலைகாட்சியிலும், ஊடகங்களிலும் இதை பற்றி பேசுவதால் ஒரு நாளில் வந்தது இல்லை. இந்த பிரச்சினை பலகாலமாக ஏற்பட்டு வந்திருக்கிறது.
நாம் உடல் எடை அதிகரிக்க காரணமான பழக்கவழக்கங்களை பற்றியும், இது குறித்து மனிதனின் எண்ண போக்கை மாற்றுவதை பற்றியும், மன தளர்ச்சிக்கு உணவு எப்படி ஒரு ஆறுதலான வடிகாலாகைறது என்பதையும் அது எப்படி மீண்டும் ஒரு சுழற்சியாக உடல் எடையை அதிகரிகிறது என்பது பற்றியும் பார்ப்போம்.

சக்தியின் சரிவிகிதம் மாறுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. நாம் உட்செலுத்தும் சக்தி, நாம் பயன்படுத்தும் சக்தியைவிட அதிகமாக மாறும் போது, அதிக சக்தி கொழுப்பாக சேமித்தி வைக்கப்படுவதால் எடை அதிகரிக்கிறது.

சில சமயங்களில் மூலக்கூற்றின் தன்மையால், குடும்ப தன்மையால், சுற்றுபுரத்தின் தன்மையால், கலாச்சாரத்தால், பொருளாதார நிலையால் எடை அதிகரிக்கிறது.

U.S. Surgeon General’s Call to Action to Prevent and Decrease Overweight and Obesity, 2001 சில சமயங்களில் உடல் எடை அதிகரிப்பதும் பருமனாக இருப்பதும் உடல் வாகு, மூலக்கூற்றின் தன்மை என்று கூறினாலும் இத்தகைய விளைவுகள் ஒருநாளில் வருவதில்லை. எனவே இவற்றையும் பழக்கங்கங்களின் கட்டுப்பாட்டால் சீராக்க முடியும் னெபதி அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம்: Hill, James O., and Trowbridge, Frederick L. Childhood obesity: future directions and research priorities. Pediatrics. 1998; Supplement: 571.)

ஒரு மனிதனின் பழக்க வழக்கங்களும், சுற்றுபுரசூழலும் இதில் முக்கிய காரணிகளாவது மட்டும் அல்லாமல் அதை மாற்ற முடியும் என்பதாலும் நான் அதை பற்றி பேசுகிறேன்.

சக்தி என்பது ஒரு தராசு போல். நாம் உட்கொள்ளும் அளவும்,செலவழிக்கும் அளவையும் பொறுத்து உடல் எடை மாறும். உடல் எடை அதிகரிப்பு:சக்தி உட்கொண்டது > சக்தி செலவானதுஎடை இழப்புசக்தி உட்கொண்டது < சக்தி செல்வழித்ததுஎடை சீராக இருப்பது: சக்தி உட்கொண்டது = சத்தி செலவழித்தது

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |