ஆகஸ்ட் 11 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
பாலிவுட்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
புதிய தொடர்
கவிதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
தொடர்கள்
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : விஜயகாந்திற்கு ஒரு வேண்டுகோள்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

Vijayakanth New partyசெப்டம்பரில் புதுக்கட்சி ஆரம்பிக்கப்போகும் நடிகர் விஜயகாந்த், "உண்மையான தமிழன் ஒவ்வொருவனும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவிப்பான். அந்த வகையில் பிரபாகரன் வெற்றிபெறும் நாள் வரை நான் பிறந்தநாள் கொண்டாட மாட்டேன். " என்று பகிரங்கமாக சேலத்தில் மண்டல அளவிலான மகளிர் மன்ற அணியைத் துவக்கி வைக்கும் விழாவில் பேசியுள்ளார்.

இலங்கையில் நடக்கும் யுத்தம் பற்றியும், விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான தனிப்பட்ட எண்ணங்கள் எவ்வளவோ இருக்கலாம். அதேபோல விஜயகாந்திற்கும் ஏகப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். தனிப்பட்ட ஒருவரது விருப்பு வெறுப்புகள் பொது மக்களை எவ்விதத்திலும் பாதிக்காது. ஆனால் பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது சரியல்ல.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். மேலும் அவர்கள் தடை செய்யப்பட்டதற்கான காரணம் இந்தியப்பிரதமரான ராஜீவ் கொலை வழக்கு விவகாரம். இச்சம்பவத்தைப் புலிகள் இயக்கமே ஒத்துக்கொண்டுவிட்ட பிறகு புலிகளுக்கு ஆதரவாக விஜயகாந்த் இப்படி கூறியிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. முதலில் நாம் ஒரு இந்தியன். அதன் பிறகே தமிழன் என்ற எண்னம் நம் மக்கள் அனைவரது ரத்தத்திலும் ஊறி இருக்க வேண்டிய ஒரு விஷயம். 91க்கு முன்பாக ஈழத்தமிழர் மீது அன்பும் ஆதரவும் காட்டிவந்த தமிழக மக்கள் 91க்குப் பிறகு கிட்டத்தட்ட அவர்களை விரோதிகளாகவே நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு புலிகள் இயக்கம்தான் காரணம். இந்நிலையில் "தமிழன்.. தமிழனுக்கு தமிழன் உதவி செய்யவேண்டும்.." என்றெல்லாம் தன் படத்தில் சொல்வதை செயலாக்குவது போலவே எண்ணி விஜயகாந்த் பேசியிருக்கும் இப்பேச்சுகள் மக்கள் மத்தியில் ஒருவித வெறுப்புணர்வையே ஏற்படுத்தும் என்பதை விஜயகாந்தின் நலம் விரும்பிகள் அவரிடம் எடுத்துச் சொல்லவில்லை போலும்.

தி.மு.கவைப் பொறுத்த மட்டிலும் கலைஞருக்கு அடுத்ததாக கூட்டத்தைக் கூட்டும் - கூடிய கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும் சாதுர்யம் படைத்தவர் என்று புகழப்படும் வை.கோவே தன்னுடைய வெளிப்படையான புலிகள் ஆதரவு கொள்கையால் மக்கள் ஆதரவை பெருமளவில் இழந்து இன்றும் தனக்கென்று சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட இல்லாமல் அல்லாடி வருகிறார். அவருக்கே அந்த நிலை என்றால் இப்போதுதான் விதை ஊன்றியிருக்கும் விஜயகாந்தின் கதி?

புதுக்கட்சி ஆரம்பித்து அரசியலில் காலூன்ற நினைக்கும் விஜயகாந்திற்கு ஒரு வேண்டுகோள். இவ்வளவு நாள் வரையில் நீங்கள் ஒரு தனிப்பட்ட மனிதர். ஆனால் தற்போது குறைந்தபட்சம் சில ஆயிரம் மக்களுடைய கருத்தையாவது நீங்கள் பிரதிபலிக்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். ஆகவே பேச்சு, செயல் இரண்டிலும் நிதானம் காக்க வேண்டியது உங்கள் கடமை. நாணலாக இருந்தால் தான் இன்றைய அரசியல் சுழலில் உங்களால் தாக்குப்பிடிக்க முடியும். ஆலமரமாகத் தான் நான் இருப்பேன் என்று வசனம் பேசினால் அடியோடு காணாமல் போகக்கூடிய நிலை ஏற்படும் (அரசியலுக்கு வந்து சுட்டுக்கொண்ட மற்ற நடிகர்களைப் போல).

சொல்றதை சொல்லியாச்சு.. மத்தபடி உங்க இஷ்டம் போங்க..

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |