ஆகஸ்ட் 11 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
பாலிவுட்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
புதிய தொடர்
கவிதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
தொடர்கள்
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : ப்ரியசகி
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

Priyasaki  Madhavan Sadhaகணவன் - மனைவி இருவருமே விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் சிறந்த திருமண வாழ்கையின் அடித்தளம். அவ்வாறு செய்ய மறுத்தால் குடும்பத்தில் என்னென்ன குழப்பங்கள் ஏற்படும் என்ற கருத்தை வலியுறுத்துவதுதான் ப்ரியசகி.

மிடில் கிளாஸைச் சேர்ந்த மாதவன் வேலை விஷயமாக துபாய் செல்லும் போது அங்கே ஹைகிளாஸ் சதாவைச் சந்திக்கிறார். கண்டதும் காதல் கொள்கிறார். எதிர்பாராத விதமாக சதாவின் பர்ஸனல் டைரி மாதவனின் கையில் கிடைத்துவிட அதை வைத்துக்கொண்டே சதாவை காதல் வலையில் விழவைக்கிறார். சதாவின் அல்ட்ரா மார்டன் அம்மா ஐஸ்வர்யா முதலில் இத்திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்தாலும் சதாவின் பிடிவாதத்திற்கு இணங்கி திருமணம் செய்து வைக்கிறார். அதே போல மாதவனும் தன் குடும்பத்தினரிடம் சதாவைப் பற்றி ஆகா ஓஹோ என்று கூறி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார்.

திருமணத்திற்கு பிறகு முதல் நாளிலேயே சதாவிற்கும் மாதவனுக்குமான கலாச்சார முரண்பாடுகள் தொடர ஆரம்பிக்கின்றன. கணவன் - மனைவி மட்டும் வெளியே செல்லவேண்டும் என்று சதா நினைக்க, தன் மொத்த குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று மாதவன் நினைக்க சச்சரவுகள் தொடர்கின்றன. இதற்கிடையே சதா கர்பமாக, மாதவனின் மொத்த குடும்பமும் சந்தோஷமடைந்து அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் சதாவோ தன் அம்மாவின் தூண்டுதலால் அக்குழந்தையை அபார்ஷன் செய்ய நினைக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சச்சரவு பெரும் சண்டைக்கு வழிவகுக்கிறது. ஒருகட்டத்தில் மாதவனின் பெட்டியில் சதா தன் டைரியை பார்க்க மாதவனின் மீதான கோபம் தலைக்கேறி நிதானம் இழக்கிறார். பிரச்சனை விவாகரத்தி வரை போகிறது. கோர்டில் தன் குழந்தையை பெற்றுத் தர சதா சம்மதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோருகிறார் மாதவன். கோர்ட் உத்திரவுக்கிணங்க சதாவும் வேண்டா வெறுப்பாக குழந்தையப் பெற்றுக்கொள்கிறார். குழந்தை பிறந்ததும் கணவன் - மனைவி பிரிந்தார்களா? அல்லது சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

கேட்டுக் கேட்டு புளித்துப்போன அரதப்பழசு கதையை தன் நடிப்பால் சற்றே மெருகேற்ற முயற்சி செய்திருக்கிறார் மாதவன். தன் காதல் மனைவி ஒவ்வொரு முறையும் கோபித்துக்கொள்ளும் போதும் மாதவன் அவரை தாஜா செய்யும் காட்சிகளும், சதாவிற்கு ஐஸ்வர்யா அபார்ஷன் செய்ய திட்டமிடுகிறார் என்பது தெரிந்து கோபப்படும் காட்சிகளிலும் கிளைமாக்ஸிலும் மாதவனின் நடிப்பு சூப்பர். மிடில் கிளாஸ் குடும்ப பழக்க வழக்கங்கள் ஒன்றுமே தெரியாத நிலையில் அவர்களோடு ஒட்ட நினைத்து சதா திண்டாடும் போதும், தான் ஆசையாய் வாங்கிய நெக்லஸை மாதவன் தன் தங்கைக்கு கொடுப்பதைப் பார்த்து பொருமும் காட்சிகளிலும், கிளைமாக்ஸிலும் சதா தனக்கும் நடிக்க வரும் என்பதை நிரூபிக்கிறார்.

அடங்காப்பிடாரி மனைவி - அல்ட்ரா மார்டன் அம்மாவாக ஐஸ்வர்யா. அவரது குரல் வளத்திற்கேற்ற வில்லி ரோல் அம்சமாக பொருந்துகிறது. இவரது கணவராக வரும் பிரதாப்பிற்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதது துரதிஷ்டமே. மேலும் மாதவனின் பாட்டியாக சச்சு, அம்மாவாக ராஜலட்சுமி, அண்ணனாக ரமேஷ் கண்ணா, ஜட்ஜாக ரேகா போன்றவர்களும் தலையைக் காட்டியிருக்கிறார்கள். கோவை சரளாவின் காமெடி சிரிப்பை வரவழைப்பதற்கு பதிலாக எரிச்சலையே கிளப்புகிறது.

சேது ஸ்ரீராமின் ஒளிப்பதிவிற்கும் பரத்வாஜின் இசைக்கும் ஒரு சபாஷ். ஏகப்பட்ட வெற்றிகரமான தமிழ் படங்களை இயக்கிய அதியமான் தான் இப்படத்தின் இயக்குனர். அதியமான் போன்ற இயக்குனர் பழக்க வழக்கங்களைத் தவிர மாதவன் குடும்பத்திற்கும் சதாவின் குடும்பத்திற்கும் பொருளாதார அளவில் பெரிய வித்தியாசம் காட்டது ஒரு குறையாகவே தெரிகிறது. மேலும் ரொம்பவுமே பழசான கதை எதிர்பார்த்த திருப்பங்கள், எதிர்பார்த்த முடிவு என்று படத்தின் கதை கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும் தற்போதைய ஆக்ஷன் கதைகளுக்கிடையே இந்த மாதிரி ஒரு படத்தை இயக்க முன்வந்ததற்காகவே அதியமானைப் பாராட்டலாம்.

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |