நீங்கள் தமிழ் சினிமா அரிதாய் பார்ப்பவரா ? அடுத்த கட்டுரைக்கு முன்னேறுங்கள்.
நீங்கள் தமிழ் சினிமா ·பார்முலா தெரிந்தவரா ? அப்போ தொடர்ந்து படியுங்கள்.
கார்பரேஷன் குப்பை லாரி டிரைவர் அப்பா மணிவண்ணன் - வீட்டுக்கு அடங்காத காலேஜ் மாணவன் தனுஷ் - திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாத தனுஷின் அக்கா ஈஸ்வரி ராவ் - புதுமுக பொம்மை சிந்து துலானி - தனுஷ் சிந்து காதல் - லோக்கல் தாதாவாக ஓவர் ஆக்டிங் பசுபதி - ஹீரோ பெருமை பேசும் 'பஞ்ச்' வசனங்கள் - புவியீர்ப்பு சக்தி இருப்பதை மறந்த சண்டை காட்சிகள் - சுமாரான பாடல்கள்.
இது எல்லாவற்றையும் விட கொடுமை, முடிவில் அக்கா ஈஸ்வரி ராவ் பேசும் வசனம். ஓவ்வொரு கடவுள் பெயரையும் சொல்லி அவர்கள் அரக்கர்களை கொன்னது கொலைனா, நீ செஞ்சதும் கொலைதான் என்று வீர வசனம் பேசிவிட்டு போவது.
ஆடையில்லாமல் நடிக்கும் நடிக நடிகைகள்
சத்யாராஜ், நமீதா நடிக்கும் 'மகா நடிகன்' திரைப்படத்தில் வருகிறது இந்தக்காட்சி. திருமண மண்டபத்தில் திடீர் தீ விபத்து (ஸ்ரீரங்கத்தில் நடந்தது போல்) அதில் உடல் கருகி இறந்தவர்களாக இருபது துணை நடிக நடிகைகள் ஆடையில்லாமல் நடிக்கிறார்கள். படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இந்தக் காட்சி இயல்பாக வர வேண்டும் என்பதற்காக அதிக பணம் கொடுப்பதாக சொல்லி அவர்களை நடிக்க வைத்திருக்கிறார்.
- என்.டி. ராஜன்
வில்லன் நடிகர் எஸ்.வி.ராமதாஸ் காலமானார்
அரச கட்டளை, ஆயிரத்தில் ஒருவன், கர்ணண், மூவேந்தர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த பழம்பெரும் நடிகர் திரு. ராமதாஸ் கடந்த ஞாயிறன்று காலமானர். அவருக்கு வயது 83. சில காலமாக பக்கவாதத்தால் அவதிப்பட்ட அவர் தன்னுடைய மகன் உதவியோடு வாழ்ந்து வந்தார்.
- என்.டி. ராஜன்
|