இந்த வார இசை உலாவில், 'ஸ்டுடியோ 1234' பெருமையுடன் வெளியிடும் புதிய பாடல் 'வாழ்க பாரதம்'. சுதந்திர நாள் சிறப்பாய் வரும் இப்பாடலை எழுதியவர் திரு. உதயா. பாடலுக்கு இசை அமைத்தவர் திரு.ஸ்ரீகாந்த் பாடலைப் பாடியவர் ஸ்டுடியோ 1234ன் புதிய பாடகி செல்வி அலிஷா தாமஸ். அமெரிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த இவர் மலையாளக் கரையோரத்தை சேர்ந்தவர்.
இந்தப் பாடலைப் பற்றி திரு. ஸ்ரீகாந்த் கூறும் போது 'இந்தப் பாடல் முற்றிலும் மேற்கத்திய இசை பாணியில் உருவானதாகும். இந்தப் பாடலை உதயா தந்த போது, இதை முற்றிலும் புதுமையாய் இசையமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதற்காக நாங்கள் தேடி பிடித்த புதிய பாடகி அலிஷா தாமஸ். இவருக்கு தமிழ் படிக்க வராவிட்டாலும் சொன்னதை அப்படியே புரிந்துகொண்டு பாடக்கூடிய திறன் பெற்றவர்.'
இதோ 'வாழ்க பாரதம்' பாடல்
www.srikanthd.com/dl.asp?bharatham.mp3
உதயா மற்றும் ஸ்ரீகாந்தின் கூட்டணியில் வெளியான மற்ற பாடல்கள்
கிராமிய காதலன்
கல்யாண மாலை
கட்ட வண்டி பாடல்
|