Tamiloviam
ஆகஸ்ட் 16 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : சிவாஜி - டெலிட்டெட் ஸீன்ஸ்
- சம்பத்
| | Printable version | URL |

 

 Sivajiசூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் வரும் ஒவ்வொரு காட்சியையும் அதிரடியாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர். இருந்தாலும் சிவாஜியின் வாழ்க்கையில் அவை மட்டுமா நடந்திருக்கும்? காலையில் பால்காரன் சிவாஜியின் வீட்டில் பால் போடுவதிலிருந்து தொடங்கி இன்னும் பல சாதாரண விஷயங்கள் நடந்திருக்கும். அவைகளெல்லாம் சேர்த்தால் படத்தின் விறுவிறுப்பு குறைந்து விடும் என்று இயக்குனர் விட்டுவிட்டிருப்பார்.

ஏவிஎம்மின் லேபுக்கு சென்று அவ்வாறு விட்டுப்போன காட்சிகளில் சிலவற்றை, நமது வாசகர்களுக்காக சுட்டு (கற்பனையில்தான்) வந்துள்ளோம்.

காட்சி 1:

(இடம்: சிவாஜி யூனிவெர்சிட்டி - யூனிவெர்சிட்டிக்கு வந்திருக்கும் அப்ளிகேஷன்களை பார்த்துக்கொண்டே சிவாஜி தன் அம்மாவின் தம்பியிடம் பேசுகிறார்)

சிவாஜி: டேய் மாமா. நீ பாட்டுக்கும் நேத்து திடல்ல, அத்தனை கூட்டத்துக்கு மத்தியில, சிவாஜி - தி பேச்சுலர் ஆ·ப் சோஷியல் சர்வீஸ்னு பந்தாவா சொல்லிட்டு வந்துட்டே. இப்ப பாரு. பேச்சுலர் ஆ·ப் சோஷியல் சர்வீஸ் படிக்கனும்னு நம்ப யூனிவெர்சிட்டிக்கு ஐம்பது அப்ளிகேஷன் வந்திருக்கு!

காட்சி 2:

(ஷ்ரேயா துணிகளை மடித்துக்கொண்டே..)

ஷ்ரேயா :  என்னங்க! ·போன்ல 'பாஸ் பேசறேன்னு' நீங்க உங்க எதிரிங்க கிட்ட அதிரடியா பேசும்போது ஸ்டைலாகத்தான் இருக்கு. அதுக்காக உங்க லெதர் ஜாக்கெட் காலரை கடிச்சிகிட்டா பேசறது? தோ பாருங்க. வாங்கி கொடுத்த எட்டு லெதர் ஜாக்கெட் காலர்லேயும் ஓட்டை போட்டு வைச்சிருக்கீங்க.

காட்சி 3:


(இடம்: சிவாஜியின் ஆபீஸ் அறை. உள்ளே சிவாஜி அமர்ந்திருக்க, அவசர அவசரமாய் உள்ளே நுழைகிறார் சிவாஜியின் மாமா, அதாவது சிவாஜியின் அம்மாவின் தம்பி)

விவேக் : சிவாஜி. நாளைக்கு நாம்ப பக்கத்து ஊரு அரசியல்வாதியுடைய கருப்பு பணத்தை எடுக்கலாம்னு இருந்தோமே. அந்த பிளான் கான்ஸல்.

சிவாஜி: ஏன்! என்னாச்சுடா மாமா?

விவேக் : அந்த அரசியல்வாதியை நேத்து யாரோ 'அந்நியன்'ங்கிற பேருல ஒருத்தன் வந்து கொன்னுட்டு போயிட்டானாம்.

காட்சி 4:

(இடம்: வில்லன் ஆதி, அண்ணா சாலை சிக்னலில் தன் காரில் அமர்ந்திருக்கின்றார். அப்போது ஒரு பிச்சைக்காரர் வருகிறார்)

பிச்சைக்காரர்: அய்யா! சாமி! ஏதாச்சம் தர்மம் பண்ணுங்கய்யா..

ஆதி: யோவ். தள்ளிப்போய்யா. ஏற்கெனவே ஒருத்தனுக்கு ஒரு ரூபாய் போட்டுட்டு நான் படற அவஸ்தை போதாதா! இவன் வேற..

| |
oooOooo
                         
 
சம்பத் அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |