ஆகஸ்ட் 17 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : இருமுறை வேண்டாம் ஒரேமுறை வா.!
- சிலம்பூர் யுகா, துபாய் [yughas@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

எங்கோ
நிகழுகின்றபோது
செய்தியாய்!

ஊரில்
நடக்கின்றபோது
காரியமாய்!

உறவில்
சம்பவிக்கும்போது
துக்கமாய்!

இல்லத்தில்
ஏற்படுகின்றபோது
இழப்பாய்!

சம்பவம் ஒன்றாயிருந்தும்
வலியில் ஏன்
இத்தனை வித்தியாசம்?

மரணமே!
இயலுமேயானால் - இந்த
வித்தியாசத்தை
விலக்கிக்கொடேன் !

இரண்டுமுறை
வந்து செல்கிறாய்
முதல் முறை
மௌனமாய் வந்து
மனதைக்கொன்று செல்கிறாய்,
இரண்டாம்முறை
ரகசியமாய் வந்து
ஊரறிய உயிரைக்கொன்று
கொண்டு செல்கிறாய்!

இரண்டுவருகைக்குமிடையில்
இனி
கால இடைவெளி வேண்டாம்!

மனித உறவுகள்
மனதில் நீர்த்தபின்
உடல் உலகம்சுற்றுவதில்
அர்த்தமுமில்லை.
அன்புமில்லை!

அதனால்

சம்பவிக்கட்டும்
இனி இரண்டுமரணமும்
ஒருமித்தே!

சர்வம் முழுதும்
நடக்கட்டும் மானுடம்
கைகோர்த்தே!

oooOooo
சிலம்பூர் யுகா, துபாய் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |