ஆகஸ்ட் 17 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
புதிய தொடர் : ஜோதிட விளக்கங்கள்
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

ஜோதிடப் புத்தகங்களைப் படிக்கும்போது பலவிதமான கருத்துக்கள் அதில் காணப் படுகின்றன.  அதில் சில கருத்துக்களை அனுபவரீதியாகப் பார்க்கும்போது எடுத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறோம்.  அதை எடுத்துக் கொள்வதா, வேண்டாமா என்ற குழப்பம் வாசகர்களுக்கு ஏற்படுகிறது. அதைப் போக்கவே நமது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றோம்.

உதாரணமாக திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கின்றோம் எனக் கொள்வோம். எல்லோரும் தசப்பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்கின்றனர்.  அந்த தசப் பொருத்தத்தில் பலவித முரண்பாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக ஏக திசை இரு வருக்கும் நடந்தால் திருமணம் செய்யக்கூடாது என்பது ஒருபாலரின் கருத்து.  ஏக தசை என்றால் என்ன?

ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே நேரத்தில் ஒரே தசை நடப்பது.  உதாரணமாக பையனுக்கு புதன் தசை நடந்து, அதே நேரத்தில் பெண்ணுக்கும் புதன் தசை நடந்தால் இது இந்த வகையைச் சேரும்.  அவ்வாறு ஒரே தசை நடந்தால் ஒரே மாதிரியான பலந்தான் நடைபெறும்;  ஆகையால் அந்த ஜாதகங்களைச் சேர்க்கக் கூடாது என்பது அவர்கள் வாதம்.

இது மிகத் தவறான கருத்து.  இருவருக்கும் ஒரே தசை நடந்தால் ஒரே மாதிரியான பலந்தான் நடக்கும் என்பது சரியான கருத்தாகாது.  இருவர் ஜாதகத்திலும் எந்த வீடுகளுக்கு அவர் அதிபதியாகின்றார்? எந்த கிரகத்தின் சாரத்தில் இருக்கிறார்? எந்த கிரகத்தால் பார்க் கப் படுகிறார்? இது போன்றவைகளைக் கவனிக்காது வெறும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு ஏக தசைகளைச் சேர்க்க் கூடாது என்று கூறுவது சரியாகாது.

தவிரவும் தினப்பொருத்தத்தில் 19 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக வந்தால் சேர்க்கலாம் என நமது பெரியவர்கள் கூறி இருக்கறார்கள். அப்படியானால் அவர்களுக்கு ஏக தசைதானே நடக்கும்?

ஆகவே ஏக தசையைப் பற்றிக் கவலைப் படாமல் ஜாதகப் பொருத்தத்தை மேற்கொள்ளுங்கள். 

இதைப் போலவே தசா சந்தியைப் பற்றி மிக கவலைப் பட்டு ஜாதகங்களைச் சேர்க்க மாட்டார்கள்.  அனுபவபூர்வமக்கப் பார்க்கும்போது தசா சந்தி மிகத் தவறான கருத்தாகவே அமைகிறது.  இதைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

|
oooOooo
ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் அவர்களின் இதர படைப்புகள்.   புதிய தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |